உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : வருடங்கள் மூன்று நியாயம் எப்போது?

0 360

எம்.எப்.எம்.பஸீர்

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்-­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.

இந்த 8 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால், 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 268 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 27 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர். இந்த கொடூர சம்­ப­வத்­துக்கு இன்­றுடன் (21) மூன்று வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. எனினும் இந்த மூன்று வரு­டங்­களில் மிலேச்­சத்­த­ன­மான இத்­தாக்­குதல் தொடர்பில் எவரும் தண்­டிக்­கப்­பட வில்லை அல்­லது தாக்­கு­தலின் பின்­னணி தொடர்பில் சட்­ட­பூர்­வ­மான உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துதான் கவ­லை­யோடு சொல்ல வேண்­டிய உண்மை.

சுருக்­க­மாக சொல்­வ­தென்றால், இந்த தாக்­கு­தலால் உயி­ரி­ழந்த, காய­ம­டைந்த, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியாயம் என்­பது கன­வாகிப் போயுள்­ளது. எனினும் அவர்கள் தொடர்ச்­சி­யாக நியா­யத்­துக்­காக போரா­டு­கின்­றனர்.

‘இலங்­கையில், மிகவும் மோச­மான முறையில் இடம்­பெற்ற தாக்­கு­தலை எம்மால் மறக்க முடி­யாது. இன்று ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்கும் அர­சாங்கம் அன்று தேர்­தலில் கள­மி­றங்­கும்­போது, தாக்­குதல் சம்­ப­வத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டது. இந்த பேர­ழி­விற்கு பின்னால் பாரிய சதித்­திட்டம் இருக்­கலாம் என அப்­போது புலப்­பட்­டது. சதித்­திட்டம் தீட்­டி­ய­வர்கள் யார் என்­பது தொடர்பில் தற்­போது தெளி­வா­கின்­றது. அந்த சதித்­திட்­டக்­கா­ரர்­க­ளுக்கு ஆட்­சியை கைப்­பற்ற முடியும், ஆனால் ஆட்­சியை பாது­காத்­துக்­கொள்ள முடி­யாது. கட­வுளின் சாபம் அவர்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது. ஆட்­சியை கைப்­பற்­றினால் மாத்­திரம் போது­மா­ன­தல்ல, அர­சாங்­கத்தை சரி­யாக நிர்­வ­கித்து அதனை பயன்­ப­டுத்த அவர்­க­ளுக்கு தெரி­யாது. ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினால் வழங்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் அநே­க­மா­ன­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தாது, முஸ்லிம் மக்கள் மீது குற்­றச்­சாட்டை சுமத்தி , தாக்­கு­தலின் பின்னால் இருந்த அனைத்து சக்­தி­க­ளையும் மறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது’ என நீர்­கொ­ழும்பு – கிரீன்ஸ் வீதியில் இடம்­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த கருத்­துக்­களில் அடங்­கி­யுள்ள விட­யங்கள், இன்று முழு இலங்கை மக்­களும் நம்­பு­கின்ற, சந்­தே­கிக்­கின்ற ஒரு நியா­ய­மான விட­ய­மாகும். விசா­ர­ணை­யா­ளர்கள், சட்ட அமு­லாக்க பிரி­வினர் அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவோ அல்­லது வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவோ இது குறித்து கண்டும் காணா­மலும் செயற்­பட்­டி­ருந்­தாலும் கூட, மக்கள் நீதி­மன்றில் இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் மறை­க­ர­மாக அர­சாங்கம் செயற்­பட்­ட­தாக தீர்ப்­பெ­ழு­தப்­பட்­ட­தா­கி­விட்­டது.

அதனால் தான், இன்று பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு மத்­தியில் நாடெங்கும் நடக்கும் ஆர்ப்­பாட்­டத்தில், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான பதா­தை­களில், தானாக ஒன்று சேர்ந்த மக்கள் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் அர­சாங்­கத்தை நோக்கி, குறிப்­பாக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை நோக்கி விரல் நீட்டும் பதா­தை­களை ஏந்­தி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், அண்­மையில் (கடந்த 12 ஆம் திகதி ) செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய பாது­காப்பு செயலர் கமல் குண­ரத்ன, ‘சிங்­கள பெளத்தர் ஒரு­வரை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்க 8 முஸ்­லிம்கள் தமது உயிரை துறப்­பார்­களா?’ என கேள்வி எழுப்­பி­ய­துடன் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்­கான காரணம், அதற்­காக தேவா­ல­யங்கள், ஹோட்­டல்கள் ஏன் தெரிவு செய்­யப்­பட்­டன என்­ப­தற்கு, பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹஷீம் தாக்­கு­த­லுக்கு முன்னர் வெளி­யிட்ட ஒளிப்­ப­திவின் செம்­மைப்­ப­டுத்­தப்­பட்ட இரு­வெட்டு ஒன்­றினை முன் வைத்து பதி­ல­ளித்தார்.

தான் அர­சியல் பேச விரும்­ப­வில்லை என இதன்­போது குறிப்­பிட்ட பாது­காப்பு செயலர், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில், தற்­போ­தைய ஜனா­தி­ப­தியை ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்­கான எந்த தேவையும் இருக்­க­வில்லை என குறிப்­பிட்­ட­துடன், 2018 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் முடி­வு­க­ளி­லேயே, தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு பெரும் ஆதா­ரவு இருப்­பது உண­ரப்­பட்­ட­தாக கூறினார்.

உண்­மையில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ( ஜனா­தி­பதி உட்­பட) எதி­ராக மக்கள் நீதி­மன்றம் முன்­வைக்கும், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் ஆட்­சியைக் கைப்­பற்றும் தேவை இருந்­தது எனினும் கார­ணிக்கு, அர­சி­யல்­வா­தி­களே மெள­ன­மாக பதி­ல­ளிக்­காமல் இருக்­கையில், அரச அதி­கா­ரி­யான பாது­காப்பு செயலர் பதி­ல­ளிக்க முந்­தி­ய­டிப்­பது ஏன்? அவர் தனி­யாக வராமல், சுயா­தீன விசா­ரணை தரப்­பாக செயற்­பட வேண்­டிய பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கு தலைமை தாங்கும் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, குற்­ற­வியல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பாளர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோ­ருடன் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­ல­ரையும் இணைத்துக் கொண்­டி­ருந்தார்.

சுயா­தீன விசா­ர­ணைகள் ஊடாக, தாக்­கு­தலின் பின்­ன­ணியை, மறை­க­ரத்தை கண்­டு­பி­டிப்­பதை விடுத்து, சிறு பிள்­ளைத்­த­ன­மாக தாக்­கு­தலின் பின்­ன­ணியில் அர­சியல் தேவை இருக்­க­வில்லை என நிரூ­பிக்க இந்த அரச அதி­கா­ரிகள் கூட்டம் முட்டி மோதிக்­கொள்­வது ஏன் என்­பதை ஆராயும் போதே, தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருக்கும் சதி தொடர்பில் புதி­தாக ஒன்­றையும் கூற வேண்­டி­ய­தில்லை.

இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­குதல் நடந்து 3 வரு­டங்கள் பூர்த்­தி­ய­டையும் நிலையில், ஒருவர் கூட தாக்­கு­தல்கள் தொடர்பில் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணையின் கோணம் கூட சரி­யாக நடக்­கி­றதா என்­பது தொடர்பில் நாளுக்கு நாள் சந்­தே­கங்­களே அதி­க­ரிக்­கின்­றன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்பில் மொத்­த­மாக 735 பேர்­கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் 196 பேர் தற்­போதும் விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர்,493 பேர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். 29 பேர் தொடர்ந்தும் சி.ஐ.டி.யினரின் பொறுப்பில் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான நிலையில் இது­வரை 81 பேருக்கு எதி­ராக மட்­டுமே கம்­பஹா, கொழும்பு, கண்டி, குரு­ணாகல், புத்­தளம் நுவ­ரெ­லியா, மட்­டக்­க­ளப்பு மற்றும் கேகாலை மேல் நீதி­மன்­றங்­களில் 27 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளன. அந்த 27 வழக்­கு­க­ளிலும் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் 25753 ஆகும்.

இந்த மொத்­த­மான புள்ளி விப­ரத்தில், தற்­போ­தைய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிறகு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் என்ன செய்­துள்­ளது என்­பதை பிரித்தும் பார்க்­கலாம். அப்­படி நோக்­கும்­போது ஆட்­சியில் உள்ள அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிறகு, அதா­வது 2019.11.16 ஆம் திக­தியின் பின்னர் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களின் எண்­ணிக்கை 170 ஆகும். அவர்­களில் 45 பேர் விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர். 13 பேரிடம் தடுப்புக் காவலில் விசா­ரணை நடக்­கி­றது. 30 பேர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். 6 பேருக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட்­டுள்­ளது. இத­னை­விட, கைது செய்­யப்­பட்ட மொத்த சந்­தேக நபர்­களில், வெளி­நா­டு­களில் இருந்த பயங்­க­ர­வாத மற்றும் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய 52 பேரும் அடங்­கு­கின்­றனர். இவர்கள் ஐக்­கிய அரபு அமீ­ரகம், கட்டார், சவூதி அரே­பியா, பாகிஸ்தான் ஆகிய நாடு­களில் இருந்தே அழைத்து வரப்­பட்­டனர்.

அத்­துடன் இது­வரை, இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின்365 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான அசையும், அசையா சொத்­துக்கள் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் 165 மில்­லியன் ரூபா பணமும் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக, இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கத்தில் 68 நபர்கள், தடை­செய்­யப்­பட்­ட­வர்­களின் பட்­டி­யலில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவையே விசா­ர­ணை­களின் சாராம்சம். எனினும் இந்த விசா­ர­ணை­களில் அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ. நிறு­வனம், இத்­தாக்­குதல் தொடர்பில் விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு உள்­ளிட்ட பல தரப்­புக்­களால் பல சந்­தர்ப்­பங்­களில் கோடிட்டு காட்­டப்­பட்ட, சஹ்­ரானின் கும்­ப­லுக்கும் உளவுப் பிரி­வி­ன­ருக்கும் இடை­யி­லான தொடர்பு, முன்னாள் தேசிய உளவுச் சேவை பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­தன உள்­ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரிகள் பலரின் அச­மந்த போக்கு, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வகி­பாகம், உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு – கட்டுவாப்­பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்ரன் எனும் சாராவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த விடயம், தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடி, வவுணதீவு பகுதிகளில் நடந்த பல குற்றச் செயல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளை குழப்பும் படியாக உளவுச் சேவை அதிகாரிகள் செயற்பட்டமை போன்ற விடயங்கள் இன்றளவும் எந்த விசாரணைகளும், முன்னேற்றங்களும் இன்றி கிடப்பில் இருப்பது நீதி, நியாயம் தொடர்பில் பாரிய சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. அத்துடன் அவ்வாறு அவ்விடயங்களில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சரியான விசாரணைகள் இடம்பெறாமல் இருப்பது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணியில் மறை கரம் ஒன்று இருப்பதையும், இந்த விடயத்தில் தற்போதைய ஜனாதிபதி, அரசாங்கம் தொடர்பில் மக்கள் எழுப்பும் சந்தேகத்தினையும் மேலும் பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.