இடி மின்னலால் தாக்கப்பட்டவர்கள் இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அதிசயம்!

0 316

அமீர் ஹுசைன்

கடந்த 2022 மார்ச் 26 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாவ­னல்லை பெமி­னி­வத்தை என்ற கிரா­மத்தில் ஏற்­பட்ட இடி­மின்னல் தாக்கம் கார­ண­மாக 25 பேர­ளவில் காய­ம­டைந்து மாவ­னல்லை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

அன்­றைய தினம் மாலை 4.00 மணி­ய­ளவில் பெமி­னி­வத்தை மைய­வா­டியில் ஜனாஸா நல்­ல­டக்கம் ஒன்றில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தவா;களை­யே­இவ்­வாறு இடி மின்னல் தாக்­கி­யுள்­ளது.

சம்­பவம் நடந்த அந்த மாலைப் பொழுதில் அந்த பகுதி எங்கும் வானம் கறுத்து கரு முகிழ்கள் சூழ்ந்­தி­ருந்­தது. மழை வரும் என்­ப­தற்­கான அறி­கு­றி­களே அதி­க­மாக காணப்­பட்­டன. ஆனாலும் இடி­யுடன் கூடிய மழை வரலாம் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. ஜனாசா நல்­ல­டக்கம் நிறை­வ­டையும் தறு­வாயில் பெமி­னி­வத்தை மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்­ளி­வா­சலின் பிர­தம கதீப் முஹம்மத் பௌசுல் அமீர் துஆ பிரார்த்­தனை நடாத்திக் கொண்­டி­ருந்தார். அப்­போ­துதான் திடீ­ரென கண்­களால் பார்க்க முடி­யாத அள­விற்கு அப­ரி­மி­த­மான வெளிச்­சத்­தோடு ஒளிக் கீற்­றுடன் தீப்­பி­ழம்பு போன்ற ஒன்று அந்த பிர­தே­சத்தை அதிர வைக்கும் சப்­தத்­துடன் தாக்­கி­யதை உணா;ந்ததாக அங்­கி­ருந்­தவா;கள் பலரும் தெரி­விக்­கின்­றனர்.

அப்­பி­ர­தே­சத்தை ஊட­றுத்துச் சென்ற இடி மின்னல் கார­ண­மாக அயலில் இருந்த தென்னை மரம் மிக மோச­மான முறையில் சேத­ம­டைந்து இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. அந்த தீப்­பி­ழம்பு போன்ற பிர­காசம் பல­மான ஓசை­யுடன் மைய­வா­டியை ஊட­றுத்­த­போது, அங்கு குழு­மி­யி­ருந்த சுமார் 50 – 60 பேர் மைய­வாடி நிலத்தில் தூக்கி எறி­யப்­பட்­டது போன்று சித­றுண்டு வீழ்ந்­துள்­ளனர்.

இந்த சம்­பவம் நிகழ்ந்­ததை அறிந்­ததும் உட­ன­டி­யாக மைய­வா­டிக்குச் சென்­றி­ருந்­தவர்களின் உற­வினர்கள் ஸ்தலத்­திற்கு ஓடோடிச் சென்று வாக­னங்­களை வர­வ­ழைத்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த காயப்­பட்­டவர்களை விரைந்து சென்று மாவ­னல்லை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர். காய­ம­டைந்­தவர்களை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­வதில் அகில இலங்கை ஜனாஸா சங்­கத்தின் கேகாலை மாவட்ட கிளை மற்றும் மாவ­னல்லை பொலிசார் உட்­பட பலரும் ஒத்­து­ழைத்­தனர்.

சுமார் 25 பேர­ளவில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட போதும் நான்கு பேரைத் தவிர ஏனை­யோ­ருக்கு பாரி­ய­ளவில் காயங்கள் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. தற்­போது ஒருவர் மாத்­தி­ரமே சிகிச்சை பெற்று வரு­கின்றார். உயி­ரா­பத்து ஏற்­படும் அள­விற்கு எவ­ருக்கும் காயம் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதை மாவ­னல்லை வைத்­தி­ய­சாலை வைத்­தியர்கள் உறு­திப்­ப­டுத்­திய பின்னர் சிகிச்­சை­ய­ளித்து காயப்­பட்­டவர்களை வீடு­க­ளுக்கு செல்ல அனு­ம­தித்­தனர்.

காய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டவர்களில் சில­ருக்கு ஒரு­வி­த­மான அதிர்ச்­சியால் உடல் பல­வீ­ன­ம­டைந்­தது போன்று உணர்வதாக இந்த இடி மின்னல் தாக்­கத்­தினால் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­டவர்கள் கூறினர். உடம்பில் மின்­சாரம் பாய்ந்­தது போன்றும் கை, கால்கள் மற்றும் புலன் உறுப்­புக்கள் செய­லி­ழந்து இருப்­பது போன்ற உணர்வு இருப்­ப­தாக காயப்­பட்ட பாட­சாலை மாணவர் ஒருவர் கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த இடத்­திலே மர­ணித்­து­விட்­ட­தா­கவே உணர்ந்ததா­கவும் அவர் கூறினார். ஆனாலும் பாரிய பாதிப்­பு­க­ளின்றி உயிர் பிழைத்­த­மை­யா­னது இறை­வனின் மாபெரும் அருளே தவிர வேறு இல்லை என்றார்.

காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் இருந்து வீடு திரும்­பி­யுள்ள மாவ­னல்லை நக­ரத்தில் வர்த்­தக நிலையம் ஒன்றை நடத்தும் ஒருவர் கூறு­கையில், “அந்த சந்தர்ப்பத்தில் நான் தூக்கி எறி­யப்­பட்டேன். நிலத்தில் விழுந்­த­தோடு என்ன நடந்­தது என்று எனக்கு தெரி­யாது. நான் மர­ணித்து விட்­ட­தா­கவே உணர்ந்தேன். ஆனாலும் பின்னர் உயிர் பிழைத்­த­தென்­பது இறைவன் எங்கள் மீது கொண்ட கருணை என்றே கருத வேண்டும்” என்றார்.

இந்த சம்­பவம் தொடர்பாக மாவ­னல்லை பொலீஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி லசந்த கலு ஆரச்சி தெரி­விக்­கையில் “இந்த ஜனாஸா நல்­ல­டக்கம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த சந்தர்ப்பத்தில் அங்­கி­ருந்த ஒரு சிலர் அந்த ஜனாஸா நல்­ல­டக்க நிகழ்வை கைய­டக்க தொலை­பேசி ஊடாக வீடியோ பதிவு செய்து கொண்­டி­ருந்­த­தாக சம்­ப­வத்தால் காய­ம­டைந்து ஆஸ்­பத்­தி­ரியில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த ஒருவர் தெரி­வித்தார். அத்­துடன் அந்த இடத்தில் கப்ரு தோண்­டு­வ­தற்­காக கொண்டு சென்ற மண்­வெட்டி மற்றும் அல­வாங்கு போன்ற உப­க­ர­ணங்கள் இருந்­த­மையும் மின்னல் தாக்­கத்­திற்கு கார­ண­மாக இருக்­கலாம்” என்று தொவித்தார்.

பெமி­னி­வத்தை கிராமம் மாவ­னல்­லையில் இருந்து ஹெம்­மா­த­கம வீதி ஊடாக 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்­தி­ருக்­கின்ற சிறிய ஊராகும்.

கடும் மழை பெய்­கின்ற சந்தர்ப்பங்­களில் நீர் நிலைகள், பரந்த வெளி­களில், மரங்­க­ளுக்கு அருகில் அல்­லது பாது­காப்­பற்ற முறையில் இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்தும் போது இந்த இடி மின்னல் தாக்கம் ஏற்­ப­டு­கின்­றன. பிர­மாண்­ட­மான கட்­டி­டங்­க­ளையும் இடி மின்னல் தாக்­கு­கின்­றது. அதனால் மாடி­களைக் கொண்ட கட்­டிட நிர்­மா­ணங்­களின் போது மின்னல் தாக்­கத்தில் இருந்து பாது­காப்பு பெறு­வ­தற்­கான ‘இடி தாங்கி’ கருவி பொருத்­தப்­ப­டு­வது அவ­சியம் என அர­சாங்கம் கட்­டுப்­பாடும் விதித்­தி­ருக்­கின்­றது.

இடி, மின்னல் ஏற்­ப­டும்­போது வெளி­யி­டங்­களில் நிற்­பது பாது­காப்­பற்­ற­தாகும். இடி, மின்னலுக்கான வாய்ப்புகள் உள்ள போது உடனடியாக கட்டிடங்களின் உட்புறம் சென்று விட வேண்டும். மின்னல் தோன்றியதைத் தொடர்ந்து இடி ஏற்படும். இதனை மனதில் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

மழை நேரங்களில் ஏற்படும் இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வானிலை அவதான நிலையம் அடிக்கடி மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகிறது. அவற்றைப் பின்பற்றி நடப்பதும் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நிச்சயம் உதவும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.