தனியார் சட்ட விவகாரத்தில் பீரிஸ் இரட்டை வேடம்

முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா

0 292

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அர­சாங்கம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் உரிய திருத்­தங்­களை முஸ்லிம் சமூ­கத்தின் அனு­ம­தி­யுடன் மேற்­கொள்­ளலாம். ஆனால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க முடி­யாது. இதற்­காக நாம் தொடர்ந்தும் போரா­டுவோம். முஸ்லிம் தனியார் சட்ட விவ­கா­ரத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் சர்­வ­தே­சத்­துக்கு ஒன்றும் இலங்­கைக்குள் மற்­றொன்­று­மாக ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்கள் கூறி­வ­ரு­வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

கொழும்பில், சுதந்­திர சதுக்­கத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த முஸ்லிம் தனியார் சட்­டத்தைப் பாது­காத்துக் கொள்ளும் வகை­யி­லான கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

தனியார் சட்­டங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக நாம் இன, மத, பேதங்­க­ளின்றி போராடி வரு­கிறோம். அனைத்து அர­சாங்­கங்­களும் தனியார் சட்­டங்­களில் கைவைக்­காது அவற்றைப் பாது­காத்து தந்­துள்­ளன. முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சிங்­கள, தமிழ் மக்­க­ளுக்கும் தனியார் சட்­டங்கள் உள்­ளன.

நாட்டின் தனியார் சட்­டங்­களில் கைவைக்க வேண்­டா­மென நாங்கள் அர­சாங்­கத்தைக் கோரு­கிறோம். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில திருத்­தங்கள் தேவைப்­ப­டு­கின்­றன. நாம் இவற்றைக் காலத்­துக்குக் காலம் கோரி வந்­தி­ருக்­கிறோம்.

காதி நீதி­மன்­றங்­களில் உள்ள குறை­பா­டு­களைத் திருத்தும் பொறுப்பை முஸ்லிம் சமூகம் பொறுப்­புடன் ஏற்­றுக்­கொள்­கி­றது. முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் சமூகம் தயா­ரா­கவே இருக்­கி­றது. வர­லாற்றில் அரபி வர்த்­த­கர்கள் இலங்­கைக்கு வந்து வர்த்­த­கத்தில் ஈடு­பட்­ட­துடன் இலங்கைப் பெண்­களை திரு­மணம் செய்து கொண்­டனர். அன்று முதல் முஸ்­லிம்கள் இந்­நாட்டில் சமா­தா­ன­மா­கவே வாழ்­கின்­றனர். எமக்கு பிரச்­சி­னைகள் தேவை­யில்லை. சமா­தானம் தேவை.

வெளி­நாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மத்­திய கிழக்கு அரபு நாடு­களின் தூது­வர்கள் மத்­தியில் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு உரி­யது. அது இல்­லாமற் செய்­யப்­ப­ட­மாட்­டது எனக் கூறினார். அப்­போது பிர­த­மரும் உட­னி­ருந்தார். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யலாம். ஆனால் இல்­லா­தொ­ழிக்க முடி­யாது என்­பதை அர­சாங்­கத்­திடம் கூறு­கிறோம். திருத்­தங்­களை எதிர்க்க வில்லை.

முஸ்லிம் தனியார் சட்டம் மாத்­தி­ர­மல்ல, தேச வழ­மைச்­சட்டம், கண்­டியர் சட்டம், பொதுச் சட்டம் அனைத்துச் சட்­டங்­களும் எமக்குத் தேவை. நாட்டின் பொதுச் சட்­டத்தை நாம் கௌர­வப்­ப­டுத்­து­கிறோம். மதிக்­கிறோம்.

இந்­நாட்டில் முஸ்லிம்கள் ஒரு அங்­குல நிலத்­தை­யேனும் கோர­வில்லை. போரா­ட­வு­மில்லை. நாம் அனைத்து மக்­க­ளுடன் ஒன்­றாக சமா­தா­ன­மாக வாழும் மக்கள்.
முஸ்லிம் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதை எதிர்க்­க­வில்லை. அல்லாஹ் எமக்கு வழங்­கிய சட்­டத்­தினால் நீண்ட கால­மாக ஆளப்­பட்டு வரு­கிறோம். ஆங்­கி­லேயர் காலத்­திலும் நாம் முஸ்லிம் சட்­டத்தைப் பாது­காத்து வந்தோம். அதனால் முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்­தினை இல்­லா­தொ­ழிக்க வேண்டாம் என்றார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி அங்கு உரை­யாற்­று­கையில், ‘ஆண்­டாண்டு கால­மாக முஸ்லிம் சமூகம் அனு­ப­வித்து வரும் முஸ்லிம் தனியார் சட்­டத்தை அர­சாங்கம் இல்­லாமற் செய்ய முயற்­சிப்­பது பாரிய சவால் ஒன்­றினை எதிர்­கொள்­வ­தாகும்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஒரு போதும் கை வைக்க முடி­யாது. போர்த்­துக்­கீசர் காலத்­திலும் இச்­சட்டம் அமுலில் இருந்­தது. அவர்­களும் இதில் கை வைக்­க­வில்லை. வெளி­வி­வ­கார அமைச்சர் அரபு நாடு­களின் பிர­தி­நி­திகள் மத்­தியில் பேசு­கையில், முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரி­யது. அது பாது­காக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளித்தார். அப்­போது பிர­த­மரும் அங்­கி­ருந்தார். இது­வரை காலம் இச்­சட்­டத்தை இல்­லாமற் செய்­வ­தற்கே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது ஐ.நா. சபையில் வாக்­கெ­டுப்பு ஒன்று இடம்­பெற உள்ள நிலையில் இச்­சட்டம் பாது­காக்­கப்­படும் என்கிறார்கள்.
இச்சட்டத்தை இலக்கு வைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.