அட்டாளைச்சேனை- பாலமுனை முள்ளிமலை பகுதியில் விகாரை அமைக்க முயற்சி

0 503
  • முஸ்லிம் தரப்பின் எதிர்ப்பால் பிக்குகள் அடங்கிய குழுவினர் பின்வாங்கினர்
  • தனி நபருக்கு சொந்தமான காணி என்றும் சுட்டிக்காட்டு
  • அம்பாறை மாவட்ட முஸ்லிம் எம்.பி.க்களை தலையிடுமாறும் கோரிக்கை
  • அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டனர்

(எஸ்.என்.எம்.சுஹைல்)
பொலிஸ் மற்றும் இரா­ணுவ வீரர்­களின் பாது­காப்­புடன் அட்­டாளைச் சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பால­முனை முள்­ளி­மலை பகு­தியில் பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வொன்று நேற்று அதி­காலை சென்று அங்கு பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிக்க முயற்சித்துள்ளனர்.

எனினும் அந்த இடத்­துக்கு முஸ்லிம் தரப்­பி­னர்கள் சென்று இது தனி நபர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான காணி என்றும் இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் அத்­து­மீறி செயற்­பட வேண்டாம் எனவும் சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தமது எதிர்ப்பை வெளி­யிட்டு தம் பக்க நியா­யத்­தையும் முன் வைத்­த­தனால் குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் முயற்­சியை அவர்கள் கை விட்­டுள்­ளனர்.

இச் சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அண்­மைக்­கா­ல­மாக இப்­ப­கு­தியில் சிலை வைக்கும் முயற்­சியில் சில சிங்­கள இளை­ஞர்கள் முனைப்பு காட்டி வந்­த­தா­கவும் முஸ்­லிம்­களின் எதிர்ப்­பினால் இய­லாமல் போன­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லை­யி­லேயே, நேற்று புதன் கிழமை அதி­காலை 5 மணி­ய­ளவில் பொலிஸ் பாது­காப்­புடன் பௌத்த பிக்­கு­களும் சில சிங்­கள இளை­ஞர்­களும் இரா­ணு­வத்­தி­னரும் அந்த இடத்­திற்கு வருகை தந்­துள்­ளனர். குறித்த சந்­தர்ப்­பத்தில் அம்­பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் வருகை தந்­த­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அத்­தோடு, குறித்த இடத்தில் காணி பூஜை செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளுடன் வந்­துள்­ளனர். லொறி மூலம் மணல் கொண்டு வரப்­பட்­டுள்­ள­துடன் சீமெந்தும் எடுத்து வரப்­பட்­டுள்­ளது. இது­த­விர குறித்த இடத்தில் அடிக்கல் நடு­வ­தற்­கான குழி­களும் வெட்­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் விட­யத்தை பொது­மக்கள் பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து, முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உது­மா­லெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் ஏ.எல். தவம், அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் எம்.ஏ. அன்ஸில், அட்­டா­ளை­ச்சேனை பிர­தேச சபை தவி­சாளர் ஏ. அமா­னுல்லா உள்­ளிட்ட பலரும் அங்கு சென்­றுள்­ளனர்.
பிர­தேச மக்கள் பலரும் வெளி­யிட்ட எதிர்ப்பை அடுத்து அக்­க­ரைப்­பற்று பொலிஸார் மற்றும் பாது­காப்பு படை­யி­னரின் தலை­யீ­டு­க­ளுடன் அர­சாங்க அதி­ப­ரூ­டாக பிரச்­சி­னையை தீர்க்க முடிவு செய்­யப்­பட்­ட­துடன் அங்­கி­ருந்து எல்­லோரும் வெளி­யேற்­றப்­பட்டு பாது­காப்பு படை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இதே­வேளை அத்­து­மீறி நட­வ­டிக்கை மேற்­கொண்ட தரப்­புடன் கிழக்­கு­மா­காண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உது­மா­லெவ்வை சுமுக­மான பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­ட­துடன், சம்­பவ இடத்­திற்கு அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­பரை வர­வ­ழைத்து நில­மையை விளங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். விட­யங்­களை மிக அவ­தா­னத்­துடன் கேட்­ட­றிந்­து­கொண்ட அர­சாங்க அதிபர் உட­ன­டி­யாக தீர்­வினை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.
குறித்த இடத்­தி­லி­ருந்த பிக்­குகள் தரப்­பிடம், “இது முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணி, காணி உறுதிப்பத்திரத்திரமும் உள்ளது. இங்கு அத்துமீறி செயற்படுவதானது இன முறுகலை தோற்றுவிக்கும். பிரதேச மக்கள் சகவாழ்வுடன் இருக்கின்றனர். இங்கு குழப்பத்தை ஏற்படுத்த எத்தனிக்க வேண்டாம்” என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் உதுமா லெப்பை தெரிவித்தார்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் ஸ்தலத்திலிருந்தே தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றும் மேலும் குறிப்பிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.