கறையை துடைத்த கர்தினால்

0 535

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்றே நடாத்­தி­ய­தாக ஆரம்பக் கட்ட தக­வல்கள் கூறி­ய­போ­திலும், ஓர் அர­சியல் சதித்­திட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இத் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­வ­தாக கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ள கருத்து பல­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

ஜெனீ­வாவில் இடம்­பெற்­று­வரும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 49 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்­கையில் பொறுப்­பு­கூறல், நல்­லி­ணக்கம் மற்றும் மனித உரி­மைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் மிச்செல் பச்­லெட்டின் அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

“இந்த தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்ப கட்­டத்தில் கிடைக்கப் பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டையில், குறித்­த­வொரு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழு­வி­னா­லேயே இது முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக அறி­யப்­பட்­டது. எவ்­வா­றி­ருப்­பினும் அதன் பின்னர் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­குதல் முழு­மை­யா­ன­தொரு அர­சியல் சதி என்­பது தெரி­ய­வந்­துள்­ளது” என கர்­தினால் மிகத் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

“நாமும் உண்­மை­களை கண்­ட­றி­யு­மாறு வலி­யு­றுத்தி வந்த சிவில் அமைப்­புக்­களும் இந்த தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு தொடர்ச்­சி­யாக கோரி வந்த போதிலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் தற்­போ­தைய அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. தாக்­கு­தல்­களின் பின்­ன­ணி­யி­லுள்ள உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­மாறும் பொறுப்­பு­கூற வேண்­டி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் குர­லெ­ழுப்­பி­ய­வர்­களை துன்­பு­றுத்­தி­யமை மற்றும் அச்­சு­றுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். என­வேதான் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் காணப்­படும் உண்­மைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான நடை­மு­றை­யொன்றை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யி­டமும் அதன் ஏனைய அங்­கத்­துவ நாடு­க­ளி­டமும் மிகவும் பொறுப்­புடன் கேட்டுக் கொள்­கிறேன்” என கர்­தினால் தனது உரையில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சர்­வ­தேச அரங்­கொன்றில் வைத்து கர்­தினால் தெரி­வித்­துள்ள இந்தக் கருத்­தா­னது, இத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பாரிய அர­சியல் சதித்­திட்­ட­மொன்று இருந்­துள்­ளது எனும் குற்­றச்­சாட்­டு­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. அத்­துடன் இது­வரை காலமும் இலங்கை முஸ்­லிம்கள் மீது சுமத்­தப்­பட்டு வந்த குற்­றச்­சாட்­டுக்­களை, கறைகளை துடைத்­தெ­றி­வ­தற்­கான பல­மான ஆதா­ர­மா­கவும் அமைந்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடாத்­தி­ய­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு கும்­ப­லாக இருந்த போதிலும் அவர்­க­ளுக்குத் தேவை­யான உதவி, ஒத்­தா­சை­களை வழங்­கி­யது ஆட்­சியைக் கைப்­பற்ற வேண்டும் என்ற தேவையைக் கொண்­டி­ருந்த சில அர­சியல் சக்­தி­களே என்­பதை கடந்த மூன்று வரு­டங்­க­ளாக பலரும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். குறிப்­பாக இந்தக் கும்­பலைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பல்­வேறு முறைப்­பா­டுகள் பாது­காப்­புத்­த­ரப்­பி­ன­ருக்கு முன்­வைக்­கப்­பட்­டன. அதே­போன்று உள்­நாட்டு, வெளி­நாட்டு புல­னாய்வு அமைப்­பு­களும் இவர்கள் இவ்­வா­றா­ன­தொரு தாக்­கு­தலை நடத்­த­வி­ருப்­பதை முன்­கூட்­டியே எதிர்வு கூறி­யி­ருந்­தன. இருப்­பினும் இந்தக் கும்­பலைத் தடுத்து நிறுத்­தாது தாக்­குதல் ஒன்று நடக்கும் வரை விட்­டு­வைத்­த­மை­யா­னது மிகப் பாரிய அர­சியல் சதித்­திட்­டமே என்­பது இப்­போது படிப்­ப­டி­யாக வெளித்­தெ­ரிய ஆரம்­பித்­துள்­ளது.

எனினும் துரதிஷ்டவ­சமாக, இந்தத் தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் பாரிய விலையைச் செலுத்த வேண்டி ஏற்­பட்­டது. இரண்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­ட­துடன் நாட்டின் சகல பகு­தி­க­ளி­லு­முள்ள முஸ்­லிம்­களின் வீடுகள், பள்­ளி­வா­சல்கள், அரபுக் கல்­லூ­ரிகள், நிறு­வ­னங்கள் அனைத்தும் தேடு­த­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன. பல முஸ்லிம் பிர­மு­கர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். ஊட­கங்கள் மூலம் முஸ்­லிம்கள் பற்­றிய மிகத் தவ­றான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன் மூலம் சக இனத்­த­வர்கள் மத்­தியில் முஸ்­லிம்கள் குறித்த, இஸ்லாம் குறித்த அச்சம் தோற்­று­விக்­கப்­பட்­டது. முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்­கப்­பட வேண்டும், அரபுக் கல்­லூ­ரிகள் தடை செய்­யப்­பட வேண்டும் என்­பன போன்ற பிர­சா­ரங்கள் முடுக்­கி­வி­டப்­பட்­டன. சில அமைப்­புகள் தடை செய்­யப்­பட்­டன. சுமார் 16 பள்­ளி­வா­சல்கள் வரை மூடப்­பட்­டன. முஸ்லிம் சுதந்­தி­ர­மாக தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தடங்­கல்கள் விதிக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான பல வியா­பா­ரத்­த­லங்கள் மூடப்­பட்­டன. இன்றும் சுமார் 300 பேர் வரை சிறையிலுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்­டன. இதன் மூலம் ஒரு முஸ்லிம் சகோ­த­ரரின் உயிர் பறிக்­கப்­பட்­ட­துடன் நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டு தீ வைத்துக் கொளுத்­தப்­பட்­டன. இவ்­வாறு முஸ்லிம் சமூகம் இத் தாக்­கு­தலை முன்­னி­றுத்தி பாரிய விலை கொடுக்க வேண்­டி­யேற்­பட்­டது.

இந் நிலை­யி­லேயே இப்­போது இதற்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எந்­த­வித சம்­பந்­தமும் கிடை­யாது, அர­சியல் ரீதி­யாக அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற விரும்­பி­ய­வர்­களின் சதித்­திட்­டமே இது என உலகின் மனித உரி­மைகள் தொடர்பில் ஆரா­யப்­படும் உயர் சபையிலேயே பாதிக்கப்பட்ட சமூகத்தின் தலைவர் என்ற வகையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னராவது முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை இனவாத சக்திகள் கைவிட வேண்டும். அத்துடன் ஜெனீவாவில் கர்தினால் வலியுறுத்தியுள்ளதுபோன்று பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தாக்குதலால் எவ்வாறு நேரடியாக இலங்கை கிறிஸ்தவ சமூகம் பாதிக்கப்பட்டதோ அதேபோன்று முஸ்லிம் சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சமூகத்திற்கும் நீதி கிடைக்க வேண்டியது அவசியமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.