இருள்மயமான நாட்களை எதிர்நோக்கியுள்ள தேசம்!

0 377

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி மார்ச் மாதத்தில் மிக மோச­மான கட்­டத்தை அடையும் என அமைச்சர் ஒருவர் அண்­மையில் எதிர்­வு­கூ­றி­யி­ருந்தார். அதன் அறி­கு­றிகள் பெப்­ர­வரி மாத இறு­தி­யி­லேயே தெரிய ஆரம்­பித்­துள்­ளன.

நாட்டின் இயக்­கமே எரி­பொ­ரு­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. ஆனால் நாட்டை சுமு­க­மாக கொண்டு செல்­வ­தற்குத் தேவை­யான எரி­பொருள் நம்­மிடம் இல்லை. அதனைப் பெற்றுக் கொள்ளத் தேவை­யான அந்­நியச் செலா­வணி மத்­திய வங்­கி­யிடம் இல்லை என்­பதே இதற்­கான கார­ண­மாகும். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு எரி­பொ­ருளை ஏற்றி வரும் பல கப்­பல்கள் தற்­போது இலங்­கைக்கு வெளியே காத்து நிற்­கின்­றன. இலங்கை உரிய பணத்தைச் செலுத்­தினால் எரி­பொருள் கிடைக்கும். இன்றேல் முழு நாடும் ஸ்தம்­பித்து நிற்கும்.

எரி­பொருள் நெருக்­கடி கார­ண­மாக நாட்டில் தினமும் நான்­கரை மணி நேரத்­திற்கு மின்­சா­ரத்தைத் துண்­டிக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. அடுத்து வரும் நாட்­களில் 7 மணி நேரத்­திற்கு மின் துண்­டிப்பு இடம்­பெறும் என ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. மறு­புறம் போது­மான எரி­பொருள் இன்­மையால் பல இடங்­களில் எரி­பொருள் விநி­யோக நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ளன. இதனால் போக்­கு­வ­ரத்துச் சேவை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பல நூற்றுக் கணக்­கான தனியார் பஸ் சேவைகள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. முச்­சக்­கர வண்டி சார­தி­களும் சேவையில் ஈடு­பட முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். எரி­பொ­ருளின் விலை அண்­மை­யில்தான் அதி­க­ரிக்­கப்­பட்ட நிலையில் மேலும் விலை அதி­க­ரிக்க வேண்டும் என எரி­சக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.

நீண்ட நேர மின்­துண்­டிப்­பா­னது மக்­களை பாரிய சிர­மத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. உயர்­தரப் பரீட்சை நடை­பெற்றுக் கொண்­டுள்ள நிலையில் மின் துண்­டிக்­கப்­ப­டு­வ­தா­னது மாண­வர்­களின் கல்­வியை வெகு­வாகப் பாதித்­துள்­ளது. இது அவர்­க­ளது எதிர்­கா­லத்­தையே பாதிக்கும் செயற்­பா­டாகும். கொவிட் 19 நெருக்­க­டிக்குப் பின்னர் நாட்டில் வியா­பா­ரத்­துறை சற்று முன்­னேறி வரு­கின்ற நிலையில் மின்­துண்­டிப்­பா­னது பலத்த சவால்­களைத் தோற்­று­வித்­துள்­ளது. இதனால் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இது சுற்­றுலாத் துறை­யையும் வெகு­வாகப் பாதிக்கும்.

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை கைமீறிச் சென்று கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வழி­களைத் தோடாது மேலும் மேலும் நாட்டை சிக்­க­லுக்குள் தள்­ளு­கின்ற செயற்­பா­டு­க­ளையே அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

நாட்டின் அந்­நியச் செலா­வணி கையி­ருப்பை அதி­க­ரிக்­கிறோம் என்ற போர்­வையில் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து தினம் தினம் அர­சாங்கம் ஆயிரக் கணக்­கான மில்­லியன் டொலர்­களைக் கட­னாகப் பெற்று வரு­கி­றது. பல அமைச்­சர்கள் அரபு நாடு­க­ளுக்கு அடிக்­கடி சென்று கடன் கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றனர். அது­போல நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­பக்ச விரைவில் மீண்டும் இந்­தியா செல்­ல­வுள்­ள­தாக அறிக்­கைகள் கூறு­கின்­றன. இலங்­கையின் அயல் நாடு என்ற வகையில் நெருக்­க­டி­யான நிலை­மை­களில் இந்­தியா எப்­போ­துமே கை கொடுத்து வந்­துள்­ளது. தற்­போதும் கூட இலங்­கையை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­ப­தற்­காக பாரிய முத­லீ­டு­களில் ஈடு­படத் தயா­ரா­க­வுள்­ள­தாக இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜெய்­ஷங்கர் நேற்று அறி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச நாடு­களின் உத­வியும் ஒத்­து­ழைப்­பு­மின்றி இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து இலங்­கை­யினால் வெளி­வர முடி­யாது என்­பது திண்ணம். எனினும் இலங்­கையின் வெளி­வி­வ­காரக் கொள்­கைகள் சர்­வ­தேச நாடு­களின் நட்பை ஈர்க்கும் வகையில் இல்லை என்­பதே கவ­லைக்­கு­ரி­ய­தாகும். சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வியை நாடு­மாறு நாட்டின் பல்­வேறு தரப்­பி­னரும் ஆலோ­சனை வழங்­கியும் கூட இது­வரை அது தொடர்பில் சாத­க­மான நகர்­வு­களைக் காண முடி­ய­வில்லை. இலங்­கையின் சம­கால பொரு­ளா­தார நிலைமை தொடர்­பான அறிக்கை எதிர்­வரும் 25 ஆம் திகதி வொஷிங்­டனில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுதான் இலங்கை விவ­காரம் குறித்து அந்­நி­தியம் தீர்­மா­னங்­களை எ­டுக்கும். எனினும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளுடன் இலங்கை எந்­த­ளவு இணங்கிச் செல்லும் என்­ப­தி­லேயே அதன் சாதக பாத­கங்கள் தங்­கி­யுள்­ளன.

இந்த சம­கால நெருக்­க­டி­யி­லி­ருந்து வெளி­வ­ரு­வ­தற்­கான எந்­த­வித திட்­டங்­களோ கொள்­கை­களோ அர­சாங்­கத்­திடம் இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. அவற்றை வகுப்­ப­தற்­கான ஆற்­றலும் அறிவும் கொண்­ட­வர்கள் அர­சாங்க தரப்பில் இல்லை என்­பதும் இப்­போது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. ‘வியத்­மக’ எனும் புத்­தி­ஜீ­விகள் தம்­முடன் இருப்­ப­தா­கவும் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான தூர நோக்­கான திட்­டங்கள் உள்­ள­தா­கவும் கூறி பெரும்­பான்மை மக்­களை ஏமாற்­றியே இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. ஆனால் இன்று வியத்­மக எனும் அமைப்பின் முக­வ­ரியே இல்­லாது போயுள்­ளது. அதில் இணைந்­தி­ருந்த பல புத்­தி­ஜீ­விகள் அர­சாங்­கத்தின் தவ­றான கொள்­கைகள் கார­ண­மாக விலகிச் சென்­றுள்­ளனர்.

இந் நிலையில் அரசாங்கம் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எனும் வேறுபாடுகளைப் புறந்தள்ளி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க விரும்புகின்ற சகல புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

எவ்வாறாயினும் அடுத்து வரும் நாட்கள் நிச்சயம் இருள்மிக்கதாகவே அமையப் போகின்றன என்பதே பெரும் கவலை தரும் செய்தியாகவுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் இலங்கையையும் அதன் மக்களையும் பாரிய நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றுவானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.