நம்பிக்கை பிரேரணை பாராளுமன்றில் இன்று

0 587

பாரா­ளு­மன்றில் பெரும்­பான்மை  ஆத­ரவைப் பெற்­றுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்க வேண்டும் என வலி­யு­றுத்தி இன்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நம்­பிக்கைப் பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­படவுள்­ளது. பிரே­ர­ணையை ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய ஆகிய கட்­சிகள் ஒன்­றி­ணைந்தே சமர்ப்­பிக்­க­வுள்­ளன. பிரே­ர­ணையை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சார்பில் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

பிரே­ரணை சமர்ப்­பிக்­க­பட்டு இன்று விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வுள்­ளது. இந்த நம்­பிக்கை பிரே­ர­ணைக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை என தீர்­மா­னித்­துள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப் பிரேரணைக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.