‘கணவரை கொன்றவர்களை மன்னிக்கமாட்டேன்’

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி நிலுஷி

0 368

பாகிஸ்­தானில் கடந்த ஆண்டு டிசம்­பரில் வன்­முறை கும்­பலால் மத நிந்­த­னை­யா­ள­ராக சந்­தே­கிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்ட இலங்­கை­ய­ரான பிரி­யந்­தவின் மர­ணத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை மன்­னிக்கப் போவ­தில்லை என்று அவ­ரது மனைவி நிலுஷி திஸா­நா­யக்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்த விவ­கா­ரத்தில் பாகிஸ்­தானில் இன­வாத கும்­பலால் தாக்­கப்­பட்டு எரித்துக் கொல்­லப்­பட்ட இலங்­கை­ய­ரான பிரி­யந்த குமா­ரவின் மனை­விக்கு அவ­ரது கண­வரின் சம்­பளத் தொகை மற்றும் நிவா­ரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்­தி­ருக்­கி­றது.
இந்த தக­வலை பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பக்­கத்தில் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

பிரி­யந்த குமார கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி பாகிஸ்­தானின் சியால்­கோட்டில் அமைந்­துள்ள ஆடைத் தொழிற்­சாலை ஒன்றில் மத நிந்­தனை குற்­றச்­சாட்டின் பேரில் ஆவே­ச­மான ஒரு கும்­பலால், அடித்துக் கொல்­லப்­பட்டார்.

பின்னர் அவரை கொலை செய்­த­வர்கள் சட­லத்தை தீ வைத்து எரித்­தனர்.
பிரி­யந்த 2012இல் ராஜ்கோ இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வ­னத்தால் தர உத்­த­ர­வாத அதி­கா­ரி­யாகப் பணி­ய­மர்த்­தப்­பட்டார். பிறகு அவர் அந்­நி­று­வ­னத்தின் தலைமைச் செயல்­பாட்டு அதி­கா­ரி­யாகப் பதவி உயர்வு பெற்றார்.

இந்த நிலையில், பிரி­யந்த கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து 100,000 டொலர் மதிப்­புள்ள நிதியும் முதல் சம்­ப­ளமும் அவ­ரது மனை­வியின் வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் இம்ரான் தெரி­வித்தார்.

மேலும், ராஜ்கோ இண்­டஸ்ட்ரீஸ் பிரி­யந்த குமா­ரவின் குடும்­பத்­திற்கு பத்து வருட சம்­ப­ளத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த 100,000 டொலர் தொகை­யா­னது, சியால்கோட் வர்த்­தகம் மற்றும் தொழில்­து­றையின் வணி­கர்­களால் திரட்­டப்­பட்­டது.

இது குறித்து பிபி­சி­யிடம் பேசிய பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்­திற்­கான தூதுவர் யாசின் ஸோயா, சியால்­கோட்டின் தொழி­ல­தி­பர்­க­ளு­டைய முயற்­சி­க­ளையும் அதைச் செயல்­ப­டுத்த அரசு வழங்­கிய ஆத­ர­வையும் பாராட்­டினார். பிரி­யந்த குமா­ர­வு­டைய பிள்­ளை­க­ளுக்கு அல்­லாமா இக்பால் புலமைப்பரிசில் பெற்­றுத்­தர முயல்­வ­தாக அவர் கூறினார். இந்தத் திட்­டத்தின் கீழ், பாகிஸ்­தானில் இல­வச உயர்­கல்வி பெற இலங்கை மாண­வர்கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ராஜ்கோ நிறு­வ­னத்­திற்கு பிரி­யந்த குமா­ரவின் பங்­க­ளிப்பு அபா­ர­மா­னது என்று அவர் கூறினார்.

பிரி­யந்த 2012இல் இணைந்­த­போது, அந்­நி­று­வ­னத்தில் 250 ஊழி­யர்கள் இருந்­தனர். ஆனால், அது பல ஆண்­டு­க­ளாக விரி­வ­டைந்து, இப்­போது சுமார் 1,000 பேர் தொழிற்­சா­லையில் பணி­யாற்­று­கின்­றனர்.

பிரி­யந்த குமா­ரவின் மற்­றொரு சக ஊழி­ய­ரான மாலிக் அத்னான் பிபி­சி­யிடம் பேசி­ய­போது, அவ­ரு­டைய மனை­விக்கு முதல் சம்­ப­ளத்தை வழங்­கு­வ­தற்­காக குமா­ரவின் மனை­வியை சியால்­கோட்­டுக்கு அழைக்க நிறு­வனம் விரும்­பி­யது. ஆனால், வெளி­யு­றவுத் துறை அலு­வ­ல­கத்தின் ஆலோ­ச­னையின் பேரில் பாது­காப்பு கருதி அந்தத் திட்­டத்தைக் கைவிட்­டனர். இருப்­பினும், கராச்­சியில் இன்னும் பணி­பு­ரியும் குமா­ரவின் சகோ­தரர் தொழிற்­சா­லைக்கு வந்தார்.

பிரி­யந்த குமா­ரவைக் கொலை செய்ய முயன்ற கும்­பலை எதிர்த்து நின்­ற­தற்­காக மாலிக் அத்­னா­னுக்கு பிர­தமர் இம்ரான் கான் விருது வழங்­கினார். அவர் தனது உடலை கேடயம் போல காத்து குச்­சிகள் மற்றும் தடி­ய­டி­களில் இருந்து பிரி­யந்த சிக்­காமல் பாது­காத்தார்.
பிரி­யந்­தவைக் கொன்­ற­தற்­காக குறைந்­தது 26 சந்­தேக நபர்கள் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

வீடியோ பதி­வேற்­றி­ய­வ­ருக்கு ஒரு வருட சிறை
சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வ­ருக்கு, அந்த நாட்டு பயங்­க­ர­வாதத் தடுப்பு நீதி­மன்றம் ஓராண்டு சிறைத் தண்­ட­னையை வழங்­கி­யுள்­ளது.
பிரி­யந்த குமா­ரவின் கொலை­யுடன் தொடர்­பு­டைய வீடியோ ஒன்றை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றி, கொலையை நியா­யப்­ப­டுத்­திய ஒரு­வ­ருக்கே இவ்­வாறு சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், 10,000 ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி, கொலையை நியா­யப்­ப­டுத்தும் வகையில், சமூக வலைத்­த­ளங்­களில் வீடி­யோவை பதி­வேற்­றிய நபர், தனது குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்ளதை­ய­டுத்தே, நீதி­மன்றம் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ளது.

கண­வரை கொன்­ற­வர்­களை மன்­னிக்கமாட்டேன்– மனைவி உருக்கம்
பாகிஸ்தான் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நிதி உதவி குறித்து, பிரி­யந்த குமா­ரவின் மனைவி முதி­யன்­ச­லாகே நிலுஷி திஸா­நா­யக்க பிபிசி தமி­ழிடம் பேசினார்.
தனது கணவர், தம்­முடன் இருந்­த­வாறே தன்­னையும், தனது குடும்­பத்­தையும் வழி நடத்­துவார் என்ற நம்­பிக்­கை­யுடன் இருப்­ப­தாக நிலுஷி கூறினார்.

தனது பிள்­ளை­களின் கல்­வியை சரி­யான முறையில் தொடர்ந்­த­வாறு, அவர்­களின் வாழ்க்­கையை சிறப்­புற செய்­வதே தனது நோக்கம் என்றும் அவர் தெரி­வித்தார்.
”எனது இலக்கை நோக்கி நான் செல்வேன். அத­னையே எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுப்பேன்” என அவர் கூறினார்.

பாகிஸ்தான் அர­சாங்­கத்­தினால், நட்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது குறித்து கேட்­ட­போது, அந்த நாடு உதவி செய்­ததை எண்ணி மகிழ்­கின்றேன் என்றார்.

கண­வரை கொலை செய்த குற்­றச்­சாட்டில் கைதா­கி­யுள்ள நபர்­க­ளுக்கு மன­த­ளவில் மன்­னிப்பு வழங்­கக்­கூ­டிய மன­நி­லைமை உங்­க­ளிடம் உள்­ளதா? என்று கேட்டோம்.
”குற்­ற­வா­ளி­க­ளுக்கு மன்­னிப்பு வழங்கி, அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்­தினால், இன்னும் பல பெண்­க­ளுக்கு கண­வரை இழக்க வேண்­டிய நிலை­மையும், இன்னும் பல பிள்­ளை­க­ளுக்கு தமது தந்­தையை இழக்க வேண்­டிய நிலை­மையும் ஏற்­படும் அல்­லவா? அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று நிலுஷி வலி­யு­றுத்­தினார்.
என் கணவரின் இறப்­புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்­வாறு இல்­லை­யென்றால், எம்மை போன்று, மேலும் பலர் பாதிக்­கக்­கூ­டிய வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன.” என அவர் தெரி­வித்தார்.

நீங்கள் எதிர்­கா­லத்தில் ஏதேனும் தொழில் செய்­வ­தற்­கான எண்ணம் உள்­ளதா? என்­ற­போது, நான் எதிர்­நோக்­கியுள்ள சுக­யீன நிலைமை கார­ண­மாக, தொழில் செய்­யக்­கூ­டிய சூழ்­நிலை இல்லை என அவர் குறிப்­பிட்டார்.

தனது கண­வ­ருக்கு எதி­ரான அவ­தூறு குற்­றச்­சாட்டை பிரி­யந்­தவின் மனைவி மறுத்தார்.”என் கணவர் தொழிற்­சா­லையில் சுவ­ரொட்­டி­களைக் கிழித்­த­தாகக் கூறப்­படும் செய்­தி­களை நான் முற்­றாக நிரா­க­ரிக்­கிறேன். அவர் ஒரு அப்­பாவி மனிதர்” என்று அவர் பிபி­சி­யிடம் கூறினார்.”பாகிஸ்­தானின் வாழ்க்கை நிலை­மை­களை அவர் மிகவும் அறிந்­தி­ருந்தார். அது ஒரு முஸ்லிம் நாடு. அவர் அங்கு என்ன செய்­யக்­கூ­டாது என்­பதை அவர் அறிந்­தி­ருந்தார், அத­னால்தான் அவர் பதி­னொரு ஆண்­டுகள் அங்கு பணி­யாற்­றினார்,” என்­கிறார் நிலுஷி.

தனது கணவர் மத நிந்­த­னையில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டை தான் முழு­மை­யா­கவே நிரா­க­ரிக்­கிறார் நிலுஷி. எனது கணவர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவ்­வா­றான செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்க வாய்ப்பு கிடை­யாது என அவர் கூறு­கின்றார்.
பிரி­யந்த குமா­ரவின் குடும்­பத்­திற்கு, இலங்கை அர­சாங்கம் அண்­மையில் ரூபா 25 லட்­சத்தை வழங்­கி­யது. தொழில் துறை அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வா­வினால் இந்த நிதி­யு­தவி வழங்கி வைக்­கப்­பட்­டது.

ஒரு வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நடந்த கொடூ­ர­மான கொலையின் தீவிரம் – பாகிஸ்­தா­னையே உலுக்­கி­யது. பலரும் இது­போன்ற வன்­முறை கும்பல்களின் செயல்­களைக் கண்­டித்து போராட்­டங்­க­ளிலும் அமைதிக் கூட்­டங்­க­ளையும் நடத்­தி­னார்கள்.
பிர­தமர் இம்ரான் கான், “இது ஒரு பயங்­க­ர­மான கும்பல் தாக்­குதல்” என கண்­டித்­த­தோடு, “சட்­டத்தின் மூலம் குற்­ற­வா­ளிகள் அனை­வரும் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்” என்று உறு­தி­ய­ளித்தார்.

பாகிஸ்தான் தூத­ர­கத்தில்…
பாகிஸ்­தானின் சியொல்கோட்டில் கொடூ­ர­மான முறையில் கொல்­லப்­பட்ட இலங்­கை­ய­ரான பிரி­யந்த குமா­ரவின் குடும்­பத்­துக்கு ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர், அதா­வது இலங்கை மதிப்பில் 2 கோடியே 2 இலட்­சத்து 48 ஆயிரம் ரூபா உதவித் தொகை பாகிஸ்தான் அர­சாங்­கத்­தினால் கடந்த வாரம் வழங்­கப்­பட்­டது. இதற்கு மேல­தி­க­மாக 10 ஆண்­டு­க­ளுக்கு மாதந்­தோறும் பிரி­யந்த குமா­ரவின் சம்­பளப் பணம் அவ­ரது மனை­விக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கொழும்பு 7 இல் அமைந்­துள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் தலை­மையில் நடை­பெற்ற விசேட நிகழ்­வின்­போதே இந்த உதவித் தொகை வழங்­கப்­பட்­டது.
ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொல­ருக்கு மேல­தி­க­மாக எதிர்­வரும் 10 ஆண்­டு­க­ளுக்கு மறைந்த பிரி­யந்த குமார பெற்று வந்த சம்­பளப் பணம் மாதம் தோறும் வழங்­கப்­படும் என உயர்ஸ்­தா­னிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் தனது உரையில் கூறி­யி­ருந்தார்.

பாகிஸ்தான் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது…

அவர் மேலும் கூறு­கையில், பிரி­யந்த குமா­ரவின் கொலைச் சம்­பவம் மிகவும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். அவரின் பிரிவால் வாடும் மனைவி மற்றும் பிள்­ளை­க­ளுக்கு எனது ஆழந்த அனு­தா­பங்­களை தெரி­விக்­கிறேன்.

இந்த துயரச் சம்­பவம் தொடர்­பில் நீதியை நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் விரைந்து செயற்­பட்டு வரு­கிறார். மேலும், இரு நாட்டு உற­வுகள் மேலும் வலுப்­பெ­று­வ­தற்கு பிர­தமர் இம்ரான் கானும் பாகிஸ்தான் மக்­களும் உறு­தி­கொண்­டுள்­ளனர்.

உலகில் எந்த மதமும் வன்­மு­றையை போதிப்­ப­தில்லை. மகாத்மா காந்தி ஒரு இந்­துவால் கொல்­லப்­பட்டார். அன்வர் சதாத் முஸ்லிம் ஒரு­வரால் கொல்­லப்­பட்டார். சாந்தி, சமா­தா­னத்­தையே இஸ்லாம் போதிக்­கி­றது. உலகில் வாழும் ஒவ்­வொ­ரு­வரும் சாந்தி, சமா­தா­னத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். ஒவ்­வொரு முஸ்­லிமும் இறைத் தூதர் முஹம்­மது நபி கூறிய வழியை பின்­பற்றி நடக்க வேண்டும்.

இந்­நி­கழ்வில் பங்­கேற்­றி­ருந்த பிரி­யந்த குமா­ரவின் மனைவி நிலுஷி மற்றும் அவ­ரது இரண்டு மகன்­மார்­க­ளுக்கு சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன, விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள், இஸ்லாமிய, இந்து, கத்தோலிக்க மதத் தலைவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த பிரியந்த குமாரவின் மனைவி நிலுஷி,
“பெளத்த மத தர்மத்தில் போதித்துள்ளதன்படி பழி வாங்குவது நல்லதல்ல. இதனையே எனது இரண்டு பிள்ளைகளுக்கு கூறி வளர்க்கிறேன். இருப்பினும் எனது கணவரை கொலை செய்த கொடூர கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஏனெனில், இது போன்ற துயரச் சம்பவம் உலகில் எங்கேயும் இடம்பெறக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக செயற்பட்ட பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.