உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட்டால் சூத்திரதாரி யார் என தெரிந்துகொள்ளலாம்

பல பாகங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்கிறார் அப்துல் ஹலீம்

0 423

(வத்­து­காமம் நிருபர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை முழு­மை­யாக வெளி­யி­டப்­பட்டால் அதன் சூத்­தி­ர­தாரி யார் என்­பது அம்­ப­ல­மாகும் என கண்டி மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

அத்­துடன், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையின் சில பாகங்கள் மட்­டுமே வெளி­யி­டப்­பட்­டுள்ளது. அதுவும் நாம் போராடிப் பெற்­றவை. ஆனால் பல பாகங்கள் இன்னும் வெளி­யி­டப்­பட வில்லை. அதில் இர­க­சியம் இருப்­ப­தாகக் கூறு­கின்­றனர். அங்­குதான் உண்மை உள்­ளது. சூத்­தி­ர­தாரி பற்றி அதில்தான் உள்­ளது என்றார்.

கண்டி மாவில்­ம­ட­யி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற ஊடக சந்­திப்­பின்­போதே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், பொருட்­களின் விலையை கட்­டுப்­ப­டுத்த அர­சினால் முடி­யா­துள்­ளது. நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபையால் எத­னையும் மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஆட்­சியில் அமைச்­ச­ராக இருந்த லக்ஸ்மன் கிறி­யல்ல பூர­ணப்­ப­டுத்­திய மத்­திய அதி­வேக வீதியின் ஒரு சில கிலோ மீட்­டர்கள் மட்டும் அபி­வி­ருத்தி செய்து விட்டு அவர்­களே முழுப் பாதை­யையும் அபி­வி­ருத்தி செய்­த­தாக கூக்­கு­ர­லி­டு­கின்­றனர்.

கடந்த ஆட்­சியில் அமைச்­ச­ராக விருந்த சம்­பிக்க ரணவக்க பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் கண்டி பஸ்­த­ரப்­பிட திட்­டத்தை முன் எடுத்தார். இன்று பொது­ஜன முன்­ன­ணியே அதனை செய்து முடித்­துள்­ள­தாக பெருமை அடிக்­கின்­றனர்.

விவ­சாய அமைச்சர் பதவி ஏற்ற போது கூறினார் ஒரு அரிசி மணி கூட வெளி நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­மாட்­டாது. அப்­படி இறக்­கு­மதி செய்தால் நான் அமைச்சர் பத­வியை மட்­டு­மல்ல அர­சி­யலில் இருந்தே வெளி­யே­றுவேன் என்றார். இன்று மியன்­மாரில் இருந்து அரசி இறக்­கு­மதி செய்ய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. விவ­சாய அமைச்சர் வாய்­மூடி மௌனம் காத்து வரு­கிறார்.

நல்­லாட்­சியில் நடந்த நல்ல விட­யங்கள் பல­ருக்கு தற்­போது மறந்து விட்­டது. நாம் ஆட்­சிக்கு வந்­ததும் உட­ன­டி­யாக பெற்றோல், எரி­வாயு மற்றும் அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் பல­வற்றின் விலை­களைக் குறைத்தோம். தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் பத­விக்கு வந்­ததும் தமது நண்­பர்­க­ளுக்கு உதவி ​செய்­யவும் தர­குப்­பணம் பெற்­றுக்­கொள்­ள­வுமே தமது வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டனர். இதனால் நாடு வங்­கு­ரோத்து நிலைக்கு மாறி­யுள்ளது.

ஜனா­தி­பதி இது வரை செய்த ஆக்­கப்­ப­ணிகள் ஒன்றும் இல்லை. எனவே அடுத்த மூன்று வரு­டத்தில் சகல வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­று­வ­தாகக் கூறு­கின்றார். இது­வரை நித்­தி­ரையில் இருந்து தற்­போது விழித்­தவர் போல் உரை­யாற்­று­கிறார். எதிர் காலத்தில் நடக்கும் தேர்­தல்­களில் நாம் அமோக வெற்றி ஈட்­டுவோம். தற்­போ­தைய ஆட்சி இயல்­பா­கவே வீழ்ச்சி அடையும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையின் சில பாகங்கள் மட்­டுமே வெளி­யி­டப்­பட்­டுள்ளன. அதுவும் நாம் போராடிப் பெற்­றவை. ஆனால் பல பாகங்கள் இன்னும் வெளி­யி­டப்­பட வில்லை. அதில் இர­க­சியம் இருப்பதாகக் கூறுகின்றனர். அங்குதான் உண்மை உள்ளது. சூத்திரதாரி பற்றி அதில்தான் உள்ளது. முஸ்லிம்ளை பழிவாங்கும்நோக்கமே இன்று முஸ்லிம் மையங்களை கொரோனா என்று கூறி கிழக்கு மாகாணத்திற்கு எடுத்துச்செல்கின்றனர். கொரோனா அடக்கம் செய்வதால் பரவுவதில்லை என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.