ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

0 443

ஆங்கிலத்தில்: அலன் கீனன்
(சர்வதேச நெருக்கடிகள் குழுவின்
சிரேஷ்ட ஆலோசகர்)
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

அதிகரிக்கும் பதற்ற நிலை
கோத்­தா­பய ராஜ­பக்ஷ அதி­கா­ரத்­தைப்­பெற்று பத­வியில் அமர்ந்து சில மாதங்­க­ளுக்குள் பல வழி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரச விரோ­தத்தை முன்­னெ­டுத்தார். ஜனா­தி­ப­தியின் நிர்­வாகம் நாட்டை முடக்கி கிரா­மங்­களைத் தனி­மைப்­ப­டுத்தி சமூ­கத்­துக்கு தொல்­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. அரச சார்­பான ஊடக நிறு­வ­னங்கள் கொவிட் வைரஸ் தொற்று பர­வு­வ­த­னா­லேயே அரசு இந்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தாக பிர­சாரம் செய்­தன.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி கொவிட் தொற்று கார­ண­மாக மற்றும் கொவிட் தொற்­றினால் இறந்­த­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்­களைக் கூட அடக்கம் செய்­யக்­கூ­டாது என்ற தீர்­மானம் அர­சாங்­கத்தைப் பாதிக்கச் செய்­தது. கொவிட் தொற்­றினால் முதன் முதல் முஸ்லிம் ஒருவர் கால­மா­னதன் பின்பே அர­சாங்கம் இந்தத் தடையை விதித்­தது.

மர­ணித்த கொவிட் தொற்­றா­ளர்­களின் உடல்­களை அடக்கம் செய்­யக்­கூ­டாது தகனம் செய்ய வேண்டும் என்ற அரசின் தீர்­மா­னத்தை உலக சுகா­தார ஸ்தாபனம் உட்­பட இலங்­கையின் நிபு­ணர்கள் நிரா­க­ரித்­தனர். வைரஸ் நிலத்­தடி நீர் மூலம் பர­வலாம் என்ற தீர்­மானம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. என்­றாலும் அர­சாங்­கத்தின் இந்தக் கொள்கை சுமார் ஒரு வரு­ட­காலம் அமுலில் இருந்­தது. அரசின் இந்தக் கொள்­கை­யினால் முஸ்லிம் குடும்­பங்­களே கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டன. அரசின் இந்தக் கொள்கை முஸ்­லிம்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் சட­லங்கள் கொவிட் 19 ஐ காரணம் காட்டி அவர்­க­ளது சமய நம்­பிக்­கைக்கு மாறாக பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­ப­டு­வ­தற்கு ஏது­வாக அமைந்­தது.

கொவிட் மர­ணங்­களை அடக்கம் செய்­வ­தற்­கான அர­சாங்­கத்தின் தடை 2021 பெப்­ர­வரி 26 ஆம் திகதி நீக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு மற்றும் ஐ.நா.வின் மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடுகள் என்­பன இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்­பான விட­யங்­களை மதிப்­பீடு செய்­தன.

இலங்கை அர­சாங்கம் கொவிட் தொற்று சட­லங்­களை அடக்கம் செய்யும் தடையை நீக்­கி­ய­போதும் அடக்­கத்­துக்காக மிகவும் தூரத்தில் ஒரே­யொரு இடத்­தையே ஒதுக்­கி­யது. இங்கு இரா­ணு­வத்­தினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். இப்­ப­கு­தியில் தங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் பல கஷ்­டங்­களை அனு­ப­விக்க வேண்­டி­யேற்­பட்­டது. முஸ்­லிம்கள் மீது பல கட்­டுப்­பா­டுகள் அங்கு விதிக்­கப்­பட்­டன. சிறு எண்­ணிக்­கை­யி­லான கிறிஸ்­த­வர்­க­ளி­னதும் இந்­துக்­க­ளி­னதும் சட­லங்­களும் இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டன.

மார்ச் 12 ஆம் திகதி அர­சாங்கம் தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கல் தொடர்­பி­லான புதிய சட்ட விதி­களை அறி­வித்­தது. தீவி­ர­வாத சமய கொள்­கை­களைக் கொண்­டுள்ள வன்­மு­றை­யா­ளர்­களை தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­கலே இதன் நோக்கம் என அறி­விக்­கப்­பட்­டது. கொடிய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் (PTA)கீழ் பாது­காப்பு அமைச்­சுக்கு இவ்­வா­றா­ன­வர்­களை தடுத்து வைப்­ப­தற்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டது. ஒருவர் வன் செயல்­களில் ஈடு­பட்டால் அல்­லது சமய இனம் அல்­லது சமூக விரோத செயல்­களில் ஈடு­பட்டால், ஈடு­ப­டு­வ­தாக இனங்­கா­ணப்­பட்டால் அல்­லது இரு­வே­று­பட்ட குழுக்­க­ளி­டையே மற்றும் சமய குழுக்­க­ளுக்­கி­டையே குரோ­தங்­களை வளர்த்தால் அவரை பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் தீவி­ர­ம­ய­மற்றமாக்குதலுக்காக தடுத்து வைக்­கலாம். 18 மாதங்கள் எது­வித நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளு­மின்றி அல்­லது அவரை மேற்­பார்வை செய்­வ­தற்­காக தடுத்து வைக்க முடியும்.

இந்த சட்ட ஏற்­பா­டு­க­ளை­ய­டுத்து உட­ன­டி­யாக மனித உரி­மைகள் சார்ந்த சட்­டத்­த­ர­ணி­களும் முஸ்லிம் தலை­வர்­களும் இதற்கு எதி­ராக உச்ச நீதி­மன்றில் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு அறி­விக்­கப்­ப­டும்­வரை தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கல் நட­வ­டிக்­கைகள் நிறுத்தி வைக்­கப்­ப­டு­த­வற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நீதி­மன்றம் இந்த சட்­டத்­தினை ஒத்­தி­வைத்­தாலும் அர­சாங்கம் தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கல் திட்­டத்தை அமு­லாக்கும் எதிர்­பார்ப்­பிலே இருக்­கி­றது. தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­கு­தலின் கீழ் புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என சிலர் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளார்கள். இதற்­கான அதி­கா­ரங்கள் தற்­போ­தைய பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் உள்­வாங்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எந்­த­ளவு எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்கள் என்­றாலும் அவர்கள் இலங்­கையின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருந்தால் எந்த ஆதா­ரங்­களும் இல்­லா­விட்­டாலும் அவர்கள் இந்தத் திட்­டத்­துக்குள் உள்­வாங்­கப்­ப­டு­வார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். சிலர் எவ்­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கல் திட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளனர்.

பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­களை விசேட முகாம்­களில் மேலும் ஒரு வரு­டமோ அல்­லது அதற்கு மேற்­பட்ட காலமோ தடுத்து வைப்­ப­தையே முன்மொழியப்பட்டுள்ள தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கல் திட்டம் மேற்­கொள்ளும்.

இதனால் இவ்­வா­றா­ன­வர்கள் தாம் அவ­மா­னப்­ப­டு­வ­தாக கருதும் சாத்­தி­ய­முள்­ளதால் ஆத்­திரம் மேலீட்டால் மூர்க்­கத்­த­ன­மான சம­யக்­கொள்­கை­களைக் கொண்ட தீவி­ர­வா­தி­க­ளாக மாறலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் ஒன்றன் மேல் ஒன்­றாக மேற்­கொள்­ளப்­பட்­டன. இது அர­சியல் மய­மாக்­கப்­பட்­டது. தாக்­கு­த­லுக்கும் பாது­காப்பு ஸ்திர­மற்­ற­தன்­மைக்கும் காரணம் முஸ்­லிம்களே என நியா­யப்படுத்த முயற்சிக்கப்­பட்­டது. இந்தப் பரந்த தாக்­கு­த­லினை அடுத்து பத­விக்கு வந்த கோத்­தா­பய அரசு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை விசா­ரணை செய்து வந்த முழு­மை­யான குழு­வி­ன­ரையும் இட­மாற்றம் செய்­தது. குறிப்­பாக இத்­தாக்­குதல் தொடர்­பாக செயற்­பட்­டு­வந்த பிர­தான விசா­ர­ணை­யாளர் சானி அபே­சே­கர கைது செய்­யப்­பட்டார். அவர் மீது வீணாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. ஏனைய அதி­கா­ரிகள் பதவி நிலை தரம் குறைக்­கப்­பட்­டார்கள்.

இதே­வேளை மேலு­மொரு பிர­தான விசா­ர­ணை­யாளர் தானும் கைது செய்­யப்­ப­டலாம் என்ற அச்­சத்தில் நாட்­டை­விட்டும் வெளி­யே­றி­யுள்ளார். மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட தனி­யான ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளையும் அரச நிர்­வாகம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை மறுத்­துள்­ளது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்­பதும் சிபா­ரி­சு­களில் உள்­ள­டங்­கி­யுள்­ளது. மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது அர­சாங்­கத்தில் அங்கம் வகித்து வரு­கிறார். முஸ்­லிம்­களுள் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு மற்றும் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் வன்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் கார­ண­மாக இருந்­த­வைகள் பற்றி ஆணைக்­குழு அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது. அத்­தோடு பொது­பல சேனா அமைப்பு தடை செய்­யப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக அவ­தூறு கூறப்­பட்­டது. கோத்­தா­பய அர­சாங்கம் சில முஸ்லிம் பிர­ப­லங்கள் மீது குற்றம் சுமத்­தி­யது. உரிய நம்­பத்தகுந்த கார­ணங்­க­ளின்றி அவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டார்கள். முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் பயங்­க­ர­வாதம் மற்றும் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டார்.

ஜனா­தி­ப­தி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையில் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எவ்­வித தொடர்­பு­மில்லை என தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இவர் கைது செய்­யப்­பட்டார். டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அசாத்­சா­லியை நீதி­மன்றம் விடு­தலை செய்­தது. அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­ப­டா­மை­யி­னாலே அவர் விடு­தலை செய்­யப்­பட்டார். அசாத்­சாலி 8 மாதங்கள் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

மனித உரி­மைகள் சட்­டத்­த­ர­ணியும் அர­சியல் செயற்­பாட்­டா­ள­ரு­மான ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வும் கைது செய்­யப்­பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­புகள் இருந்­த­தாக குற்றம் சுமத்­தியே இவரும் பலாத்­கா­ர­மாக கைது செய்­யப்­பட்டார்.

அர­சாங்கம் இலங்­கையின் கத்­தோ­லிக்க தலை­மைத்­து­வத்தின் மீது ஆத்­திரம் கொண்­டுள்­ளது. கத்­தோ­லிக்க தலை­மைத்­துவம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் திட்­ட­மி­டலின் பின்­ன­ணியில் ஜனா­தி­ப­தி­யும் இருந்துள்ளார் என குற்றம் சுமத்­தி­யுள்­ள­மையே இதற்குக் கார­ண­மாகும். அர­சாங்கம் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பாது­காக்­கி­றது. ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளை அமுல்­ப­டுத்­தா­தி­ருக்­கி­றது. இரா­ணுவ உள­வுப்­பி­ரிவின் அதி­கா­ரிகள் சில தற்­கொலை குண்­டு­தா­ரி­களை தாக்­கு­த­லுக்கு முன்­னைய நாள் தொடர்பு கொண்­டுள்­ளனர்.

கொழும்பு அருட்­தந்தை, பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் போப்­பாண்­டவர் (பாப்­ப­ரசர்) ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடாத்­த­ப்ப­ட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­துள்­ளனர். கடந்த அக்­டோபர் மாதம் கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்தின் பிர­பல ஆலோ­ச­க­ர் ஒருவர் இணை­ய­வழி கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை நடாத்தி உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விளக்­க­ம­ளித்­த­தற்­காக பொலிஸார் அவ­ருக்கு அழைப்­பாணை அனுப்பி மூன்று தினங்கள் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­னார்கள்.

ஆபத்­தான சுலோகம்
உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பி­லான விசா­ரணைகளை கையாளும் விதம் தொடர்பில் கண்­ட­னங்கள் அதி­க­ரித்­தன. அத்­தோடு கடு­மை­யான பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளையும் அர­சாங்கம் எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது. இதனால் அர­சாங்கம் மீதான பொது மக்கள் ஆத­ரவில் பாதிப்­புகள் ஏற்­பட்­டன. சிங்­கள பெளத்த மக்­க­ளி­னதும் ஆத­ரவு வீழ்ச்­சி­ய­டைந்­தது.

இந்­நி­லை­யிலே அர­சாங்கம் ஞான­சார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’
ஜனா­தி­ப­தி செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மித்­தது-. அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்­காக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்­கை­யையே தனது நிகழ்ச்சி நிரலில் உள்­வாங்­கி­யி­ருந்­தது. இக்­கொள்கை தெளி­வாக இல்­லா­விட்­டாலும் பெளத்த மதம் அர­சியல் யாப்பில் சிறப்­பு­ரி­மை­க­ளையும், சலு­கை­க­ளையும் அ-னு­ப­வித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான செய­லணி உண்­மை­யாக தனது பொறுப்­பு­களை நிறை­வேற்­றும் என்­பதை எவரும் நம்­ப­வில்லை. அனைத்து சம­யங்கள் மற்றும் இனக்­கு­ழுக்­களின் செயற்­பா­டு­களை இச்­செ­ய­லணி கவ­னத்திற் கொள்­ள­வேண்டும். ஆனால் இச்­செ­ய­லணி சிறு­பான்மை முஸ்­லிம்கள் மீதான விவ­கா­ரங்­க­ளிலே அதிக கவனம் செலுத்தும் என கண்­கா­ணிப்­பா­ளர்கள் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

இச்­செ­ய­லணி மத்­ரஸா கல்­வித்­திட்­டத்தில் சீர்­தி­ருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. முஸ்லிம் தலை­வர்கள் இது தொடர்பில் தங்கள் சிபா­ரி­சு­களை அர­சாங்­கத்­திடம் முன் வைத்­தி­ருக்­கி­றார்கள். அர­சாங்கம் பள்­ளி­வா­சல்­களின் செயற்­பா­டு­களை ஒழுங்­குப்­ப­டுத்­து­வற்கும், சீர் செய்­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளது. அத்­தோடு இறக்­கு­மதி செய்­யப்­படும் குர்ஆன் பிர­திகள் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் உள்­ள­டங்­கி­ய­வை­களை அவ­தா­னிப்­புக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்குள் ஏனைய அரபுப் புத்­த­கங்­களும் உள்­ள­டங்கும். நிக்காப் மற்றும் புர்கா தடை, மாடுகள் அறுப்­ப­தற்­கான தடை என்­ப­னவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன. மாட்­டி­றைச்சி வர்த்­தகம் முஸ்­லிம்­க­ளாலேயே நடாத்­தப்­ப­டு­கி­றது. இதற்கு பெளத்த செயற்­பாட்­டா­ளர்கள் எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­லணி, நீண்ட கால­மாக கலந்­துரையாடப்­பட்டு வந்த முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மாற்­றங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்­தி­யுள்­ளது. இச்­சட்­டத்தில் மாற்­றங்­க­ளையும் திருத்­தங்­க­ளையும் அமைச்­ச­ரவை கடந்த ஆகஸ்ட் மாதம் அங்­கீ­க­ரித்­துள்­ளது. முஸ்­லிம்­களும் ஏனை­ய­வர்­களும் தேவை­யான சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் கடு­மை­யாக விவா­தித்து வந்­தனர். இச்­சட்டம் மனித உரி­மை­க­ளுடன் முரண்­ப­டு­வ­தா­கவும் வாதிட்­டனர். பெண் செயற்­பாட்­டா­ளர்­களும் எதிர்ப்பு வெளி­யிட்டு வந்­தனர்.

பெளத்த தேசி­ய­வா­திகள் முஸ்­லிம்கள் தங்­க­ளுக்­கென தனி­யான விவாகம் மற்றும் குடும்பச் சட்­டத்­தினைக் கொண்­டி­ருப்­ப­தாக கண்­ட­னங்கள் வெளி­யிட்­டனர். இலங்­கையில் சட்­டத்தில் பாரம்­ப­ரிய வழக்­கங்­களை உள்­ள­டக்­கிய குடும்­பச்­சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன.

சிங்­க­ள­வர்­க­ளுக்கு கண்­டிய சட்டம், யாழ்ப்­பாணத் தமி­ழர்­க­ளுக்கு தேசிய வழ­மைச்­சட்டம் இதே­போன்று முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான விவாக விவா­க­ரத்­துச்­சட்டம் அமுலில் உள்­ளது. ஆனால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டமே இன்று சர்ச்­சைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கண்­ட­னத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. பல­தார மணம், திரு­ம­ணத்­துக்­கான வய­தெல்லை, விவா­க­ரத்து வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு ஆண் நீதி­ப­தி­க­ளைக்­கொண்ட நீதி­மன்­றங்கள் என்­பன பெண் செயற்­பாட்­டா­ளர்­களால் விவா­தத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­ட­துடன் இவற்றில் திருத்­தங்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பௌத்­தர்கள் இஸ்லாம் பிற்­போக்­கான சமயம் எனத் தெரி­வித்­தனர்.

அர­சாங்கம் ஞான­சார தேரரை எவ்­வ­ளவு காலத்­துக்கு ஊக்­கு­விக்கும்? பௌத்த தேசி­ய­வா­திகள் ஒரே நாடு ஒரே சட்டம் அமு­லாக்­கலை எதிர்­பார்த்­துள்­ளார்கள். அதா­வது தனி­யான ஒரு சட்டம். இச்­சட்டம் ஏனைய சமய நிறு­வ­னங்­களை மறுக்கும் அதே­வேளை பௌத்த நிறு­வ­னங்­க­ளுக்கு உயர் ஸ்தானத்தை வழங்கும்.

புனித நக­ரான அநு­ரா­த­பு­ரத்தில் பாரிய அளவில் பௌத்த மத நிகழ்­வுகள் நடாத்­தப்­பட்­டன. இந்­நி­கழ்வில் ஜனா­தி­ப­திக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­பட்­டது. அமைச்­ச­ரவை மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இரா­ணுவ உய­ர­தி­கா­ரிகள் மகா­நா­யக்க தேரர்கள், இலங்­கையின் மிகப் பிர­ப­ல அதி­கா­ர­மிக்க பௌத்த குரு­மார்கள் இந்­நி­கழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இரண்டு நாட்கள் நடை­பெற்ற இவ்­வை­ப­வத்தில் அர­சாங்­கத்தின் முழு­மை­யான திட்­டங்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன. இரா­ணுவம் மற்றும் பெளத்த குரு­மார்­களை உள்­ள­டக்­கிய சிங்­கள தேசிய அர­சியல் நோக்­கா­கவே இந்த வைபவம் அமைந்­தி­ருந்­தது. இந்த பௌத்த மத வைப­வங்கள் அநு­ரா­த­புர புனித நகரில் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்பே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்டார்.

இதே­வேளை கடந்த டிசம்பர் மாதம் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கருத்­தொன்­றினை வெளி­யிட்டார். முஸ்லிம் நாடு­களின் தூதுவர்களை சந்தித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கையில் தனியார் சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். முஸ்லிம்களின் தனியார் சட்டம் மற்றும் கண்டியர் சட்டம், தமிழர்களுக்கான சட்டம் என்பன தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் உறுதியளித்தார்.

இதே­வேளை கொழும்பு இது­வரை அதன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­களை கவ­ன­மாக கையாண்டு வரு­கி­றது. இதற்­காக கடும்­போக்கு பௌத்த தேசி­ய­வா­தி­க­ளுக்கு ஆத­ரவு நல்கி வரு­கி­றது. தீவி­ர­வா­தத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாகக் கூறி சர்­வ­தேச ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே இந்த ஏற்­பா­டாகும். இந்­நி­லையில் முஸ்லிம் உல­கத்­துடன் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நட்­பு­ற­வு­க­ளை­யும்­பேணி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி தொடர்­பாக அர­சாங்­கத்­திடம் இது­வரை ஒரு திட்­ட­மான நிகழ்ச்சி நிரல் இல்லை. இதே­வேளை ஞான­சார தேர­ருக்கு தலை­மைத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேரர் தமி­ழர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் வேறு­பா­டு­களை உரு­வாக்க முயற்­சிப்­பவர். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக புதிய அமை­தி­யின்­மையை உரு­வாக்க முயற்­சிப்­பவர். பௌத்த தேசிய கொள்­கை­களை கடந்த தசாப்­தத்தில் பிர­சாரம் செய்­தவர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து வெளி­நாட்டு நன்­கொ­டை­யா­ளர்கள் கொடூ­ர­மான தீவி­ர­வா­தத்தைத் தடுப்­ப­தற்­காக பல்­வேறு புதிய திட்­டங்­களை முன்­வைத்­துள்­ளார்கள். சமூக ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வது உட்­பட பல திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டது.

அர­சாங்­கத்­துக்கு பெரு­ம­ள­வி­லான வெளி­நாட்டு நிதி­யு­த­விகள் கொடூ­ர­மான தீவி­ர­வாத்தை தடுப்­ப­தற்­காக கிடைத்­தன. இந்நிலையில் ஒரு மதமே இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் ஞானசார தேரரையோ அல்லது ஏனைய தீவிரவாத பௌத்த குருமார்களையோ புனர்வாழ்வு (Rehabilitate) செய்யுமாறு அரசாங்கத்தைக் கோருவதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.