அ.இ.ம.க. கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் பிரதேச சபை அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வசமானது

0 265

(தலை­மன்னார் நிருபர்)
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த மன்னார் பிர­தேச சபையின் அதி­காரம் முஸ்லிம் காங்­கிரஸ் வச­மா­கி­யுள்­ளது.

மன்னார் பிர­தேச சபை அ.இ.ம.கா. தவி­சாளர் முஜாஹிர் சமர்­ப்பித்த 2022 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவு திட்டம் இரு தட­வைகளும் தோல்­வி­ய­டைந்­த­தை­ அ­டுத்து ஏற்­பட்ட தவி­சாளர் வெற்­றி­டத்­திற்­கான வாக்­கெ­டுப்பு நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது, அனைத்து கட்­சி­க­ளி­னது ஒத்­து­ழைப்­புடன் மு.கா. உறுப்­பினர் எம்.ஐ.எம்.இஸ்­ஸதீன் மன்னார் பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்டார்.

வட மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யாளர் பற்றிக் டிரஞ்சன் தலை­மையில் மன்னார் பிர­தேச சபை மண்­ட­பத்தில் மன்னார் பிர­தேச சபைக்­கான புதிய தவி­சாளர் தேர்வு நேற்று இடம்­பெற்­றது.

இதன்­போது 21 உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டனர். வட மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யாளர் பற்றிக் டிரஞ்சன் தேர்தல் விதி­மு­றை­களை தெளி­வு­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து தேர்­தலில் நிற்­ப­வர்­களின் பெயர்­களை முன்­மொ­ழிய வேண்டிக் கொண்டார்.
இதன்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்த எம்.ஐ.எம். இஸ்ஸ­தீனை அதே கட்­சியைச் சார்ந்த உறுப்­பினர் ஜே.இன்சாப் தவி­சா­ள­ராக முன்­மொ­ழிய ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியைச் சார்ந்த என்.செப­மாலை பீரீஸ் வழி­மொ­ழிந்தார். அனைத்து கட்சி உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்த எம்.ஐ.எம். இஸ்ஸ­தீனை தவி­சா­ள­ராக ஏக­ம­ன­தாக தெரிவு செய்­துள்­ளனர்.

புதிய தவி­சாளர் கடந்த காலங்­களில் உப தவி­சா­ள­ரா­கவும் பத­வி­வ­கித்தார். ஏற்­க­னவே, மன்னார் பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக இருந்த சாகுல் ஹமீது முகம்­மது முஜாஹிர் மன்னார் பிர­தேச சபையின் தவி­சாளர் என்ற வகையில் அப்­ப­த­வியின் பணி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டி­ருந்த வேளையில்; மன்னார் பிர­தேச சபை தவி­சா­ள­ருக்­கான தேர்வு 29.09.2021 அன்று இடம்­பெற்­றது. இதன்­போது, எம்.ஐ.எம். இஸ்ஸ­தீனும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பினர் ஜே.ஈ.கொன்சன் குலாஸும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியைச் சார்ந்த என்.செப­மாலை பீரீஸ் ஆகியோர் தவி­சா­ள­ருக்­கான போட்­டியில் இறங்­கி­யி­ருந்­தனர்.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட எம்.ஐ.எம். இஸ்ஸதீன் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் ஒத்­து­ழைப்­புடன் அதி­க­ப­டி­யான வாக்­கு­களைப் பெற்று தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இருந்தும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியைச் சார்ந்த எஸ்.எச்.எம்.முஜாஹிர் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு அமைய மீண்டும் தவி­சா­ள­ராக பத­வி­யேற்­றதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தனது புதிய பொறுப்பில் இருக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

இவ்­வா­றன நிலையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸ்ஸதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.