ஆயிரம் நாட்களாகிவிட்டன உண்மை வெளிப்படுமா?

0 189

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­குதல் இடம்­பெற்று நாளை­யுடன் சரி­யாக ஆயிரம் நாட்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை தலை­மையில் விசேட சமய வழி­பா­டுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அன்­றைய தினம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்­கு­மாறும் இத் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை வெளிப்­ப­டுத்­து­மாறும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தும் வகையில் தேசிய ரீதி­யாக மேலும் பல நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.

இந் நிலையில் கடந்த 8 ஆம் திகதி ஐரோப்­பாவில் வசிக்கும் இலங்­கை­யர்கள் மத்­தியில் இணைய வழி­யாக இடம்­பெற்ற சந்­திப்பில் உரை­யாற்­றிய மெல்கம் கர்­தினால் ரஞ்சித், ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்­கத்தின் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெறும் நோக்கில் இவ்­வா­றா­ன­தொரு தாக்­குதல் நடக்­க­வுள்­ளது என்­பதைத் தெரிந்து கொண்டே அர­சி­யல்­வா­தி­களும் அதி­கா­ரி­களும் இத்­தாக்­கு­த­லுக்கு உடந்­தை­யாக இருந்­த­தாக அவர் இதன்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.
“தேர்­தலில் வாக்­கு­களைப் பெறும் நோக்கில், தக­வல்­களை மூடி மறைத்து வேண்­டு­மென்றே தாக்­குதல் நடக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­கு­த­லுக்கு அதி­கா­ரி­களும் அர­சி­யல்­வா­தி­க­ளுமே பொறுப்­பேற்க வேண்டும். தற்­போது அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்கள் இதனை மூடி மறைக்க முயற்­சிக்­கி­றார்கள். நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் ஒப்புக் கொண்­டாலும் சரி மறுத்­தாலும் சரி இந்த தாக்­கு­த­லுக்குப் பின்னால் மிகப்­பெ­ரிய சதி உள்­ளது என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. அர­சி­யல்­வா­திகள் நாட்டில் சட்­டத்தின் ஆட்­சியை அழித்­து­விட்­டார்கள். இங்கு யாரும் பாது­காப்­பாக இல்லை” என்றும் அவர் இந்­நி­கழ்வில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கர்­தி­னாலின் இந்தக் கருத்­துக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னால் ஒரு பாரிய சதித்­திட்டம் உள்­ளது எனும் சந்­தே­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. சஹ்ரான் தலை­மை­யி­லான தீவி­ர­வாதக் கும்பல் பற்­றிய முஸ்­லிம்கள் தாக்­கு­த­லுக்கு முன்­னரே பல தட­வைகள் எச்­ச­ரித்­தி­ருந்தும், உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முறைப்­பா­டு­களைச் செய்­தி­ருந்தும் தாக்­குதல் நடக்கும் வரை கண்ணை மூடிக் கொண்­டி­ருந்­தது ஏன் என இது­வரை முஸ்லிம் சமூகம் கேள்­வி­யெ­ழுப்பி வந்­தது. இன்று அதே கேள்­வி­க­ளையே ஆயிரம் நாட்கள் கடந்­துள்ள நிலையில் இத் தாக்­கு­த­லினால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க சமூ­கமும் அதன் மதத்­த­லை­வரும் கேட்கத் தொடங்­கி­யுள்­ளனர். இக் கேள்­விக்கு விடை கிடைக்­குமா என்­ப­துதான் இன்று நம்முன் உள்ள மில்­லியன் டொலர் கேள்­வி­யாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து சுமார் 2000க்கும் அதி­க­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் 1700 பேர் வரை எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி கைது செய்­யப்­பட்ட முதல் ஓரிரு மாதங்­க­ளி­லேயே விடு­தலை செய்­யப்­பட்­டனர். மேலும் சில நூறு பேர் 6 மாதங்கள் முதல்1 வருட காலப் பகு­திக்குள் விடு­விக்­கப்­பட்­டனர். எனினும் சுமார் 350 பேர் வரை 1000 நாட்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் சுமார் 35 பேர் மீதே இது­வரை குற்­றப்­பத்­தி­ரங்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. மீத­வுள்­ளவர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் சரத்­துக்­களைப் பயன்­ப­டுத்தி தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் கணி­ச­மானோர் இத் தாக்­கு­த­லுடன் எந்­த­வித நேரடித் தொடர்பும் இல்­லா­த­வர்கள் என்­பதே யதார்த்­த­மாகும். இவ்­வா­றா­ன­வர்­களை விரை­வாக விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இத் தாக்­கு­தலை எப்­ப­டி­யா­வது முஸ்லிம் சமூ­கத்தின் தலையில் சுமத்தி தப்­பித்துக் கொள்­வ­தற்கு இதன் சூத்­தி­ர­தா­ரிகள் பாரிய திட்­டங்­களைத் தீட்­டி­யி­ருந்­தனர். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், மார்க்க தலை­மைகள், சிவில் சமூக பிர­தி­நி­தி­களைக் கைது செய்து அவர்­களை இதற்குப் பொறுப்­புச்­சாட்ட பல பிர­யத்­த­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் நாட்­டி­லுள்ள நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­தன்­மை­யினால் இன்று நிர­ப­ரா­திகள் படிப்­ப­டி­யாக விடுதலையாகி வருகின்றனர். எஞ்சியுள்ள நிரபராதிகளும் அவ்வாறே விடுதலை பெற வேண்டும், முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பழி போக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையும் எதிர்பார்ப்பாகும்.

மறுபுறும், கர்தினால் மெல்கம் ரஞ்சித் கேட்பது போல, இத் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்ற தகவலை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படப் போகிறது என்ற கேள்வியையே முஸ்லிம் சமூகமும் உரத்துக் கேட்க வேண்டும். எத்தனை நாட்களானாலும் சரி உண்மை வெளிப்படும் வரை கத்தோலிக்கர்களும் முஸ்லிம்களும் இந்தக் கேள்விக்கு விடை காணும் தமது முயற்சிகளை விட்டுவிடக் கூடாது.
இது விடயத்தில் கத்தோலிக்க சமூகத்துடன் இணைந்து பலமான ஓர் அணியாக செயற்பட முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.