அரசாங்கத்தின் தீர்மானங்களே நெருக்கடிகளுக்கு காரணம்

பயிர்ச்செய்கை பாதிப்பு, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி என்கிறார் கபீர்

0 147

தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த 2019 டிசம்­பரில் ஆட்­சி­பீ­ட­மே­றி­ய­வுடன் மேற்­கொண்ட சில தீர்­மா­னங்­களால் நாட்டின் வரு­டாந்த வரு­மானம் பெரு­ம­ளவால் வீழ்ச்­சி­கண்­டது. அதுவே நாடு இப்­போது முகங்­கொ­டுத்­தி­ரு­க்கக்­கூ­டிய பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­கான தொடக்­கப்­புள்­ளி­யாக அமைந்­தது. அது­மாத்­தி­ர­மன்றி ஏற்­க­னவே சர்­வ­தேச தரப்­ப­டுத்தல் நிறு­வ­னங்­களால் நாட்­டிற்கு வழங்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­களைக் கருத்­திற்­கொண்டு, குறை­பா­டு­களைச் சீர­மைப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் இத்­த­கைய நெருக்­கடி ஏற்­பட்­டி­ருக்­காது என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாசீம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­தோடு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­ர­ம­ரத்ன ஆகி­யோ­ருடன் இணைந்து எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் ‘பொரு­ளா­தாரக் கொள்­கைகள் கேந்­திர நிலை­யத்தை’ நிறு­வி­யி­ருப்­ப­தா­கவும், அத­னூ­டாக நாட்டை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவ­சி­ய­மான ஆலோ­ச­னை­களை ‘மாற்று அர­சாங்கம்’ என்ற அடிப்­ப­டையில் முன்­வைக்­க­வி­ருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:
2019 ஆம் ஆண்டின் இறு­தியில் தேர்­த­லுக்கு முன்­ன­தாக நாட்டின் பொரு­ளா­தார குறி­காட்­டிகள் ஓர­ள­விற்கு சாத­க­மான மட்­டத்­தி­லேயே காணப்­பட்­டன. குறிப்­பாக வரவு, செல­வுத்­திட்­டப்­பற்­றாக்­குறை 5 சத­வீ­தத்­திற்கும் குறை­வான மட்­டத்­திலும் வெளி­நாட்­டுக்­கை­யி­ருப்பு சுமார் 7.8 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளா­கவும் காணப்­பட்­டது. அதே­போன்று பொருட்­களின் விலைகள் கட்­டுப்­பாட்டில் இருந்­த­துடன் வாழ்க்­கைச்­செ­லவும் சீரான மட்­டத்தில் பேணப்­பட்­டது. ஏற்­று­மதி மூல­மான வரு­மானம் மற்றும் அந்­நி­யச்­செ­லா­வணி வரு­மானம் என்­ப­னவும் உயர்­வாகக் காணப்­பட்­டன. இருப்­பினும் பல்­வேறு கார­ணங்­களால் 2020 ஆம் ஆண்டின் நடுப்­ப­கு­தியில் இந்த நிலை மாற்­ற­ம­டை­யத்­தொ­டங்­கி­யது. அப்­போது சிலர் கொரோனா வைரஸ் பரவல் நெருக்­க­டியை அதற்குக் கார­ண­மாகக் கூறி­ய­போ­திலும், அத­னையும் தாண்­டிய பிரச்­சி­னை­யொன்று இருப்­பது தற்­போது தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது.

எனவே இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் நானும், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­ர­ம­ரத்ன ஆகி­யோரும் இணைந்து எமது கட்­சிக்குள் பொரு­ளா­தாரக் கொள்­கைகள் கேந்­திர நிலை­யத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம். நாங்கள் மூவரும் கடந்த அர­சாங்­கத்தில் பொரு­ளா­தா­ரத்­து­றைசார் அமைச்­சுக்­க­ளுக்குப் பொறுப்­பாக செயற்­பட்­ட­துடன் அர­சி­ய­லுக்கு அப்பால் பொரு­ளா­தா­ரத்­து­றைசார் பின்­பு­லத்­தையும் கொண்­டி­ருக்­கின்றோம். இத­னூ­டாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைத் தற்­போ­தைய நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­பதே எமது நோக்­க­மாகும்.

கடந்த 1948 ஆம் ஆண்டு சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து எமது நாடு பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்த போதிலும், அவற்­றுக்கு ஈடு­கொ­டுப்­ப­தற்­கான இய­லு­மை­யையும் நாடு கொண்­டி­ருந்­தது. ஆனால் அந்த நெருக்­க­டிகள் தோற்­றம்­பெ­று­வ­தற்கு அடிப்­ப­டை­யாக அமைந்த கார­ணங்­களை இனங்­கண்டு, அவற்­றுக்­கு­ரிய தீர்வை வழங்­க­வில்லை என்­பதே உண்­மை­யாகும். ஆகவே ஒவ்­வொரு அர­சாங்­கங்­க­ளின்­கீழும் நீண்­ட­கா­ல­மாகத் தொடர்ந்­து­வந்த இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக நாட்டின் நிதி மற்றும் பொரு­ளா­தா­ரக்­கொள்­கையில் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றைச் செய்­வதில் நாம் தோல்­வி­கண்­டி­ருக்­கின்றோம். ஆனால் நாட்டின் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக நாம் இப்­போது வங்­கு­ரோத்து நிலையை நோக்கிப் பய­ணித்­துக்­கொண்­டிக்­கின்றோம். குறிப்­பாக நாடு தற்­போது தீவிர டொலர் நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்­கின்­றது என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும்.

ஏனெனில் தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­படும் செல­வுகள் அதன் வரு­மா­னத்தை விடவும் பெரு­ம­ள­விற்கு உயர்­வா­ன­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. மறு­புறம் அர­சாங்கம் உற்­பத்­தியில் ஈடு­ப­டு­வ­தற்குப் பதி­லாக அதி­க­ள­வி­லான கொள்­வ­னவில் ஈடு­ப­டு­கின்­றது. கடந்த 2019 டிசம்­பரில் இப்­பொ­ரு­ளா­தார நெருக்­கடி ஆரம்­ப­மா­ன­போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்­கடி காணப்­ப­ட­வில்லை. மாறாக கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுக்­கொண்­ட­வுடன் வழங்­கப்­பட்ட பல்­வேறு வரிச்­ச­லு­கை­களின் கார­ண­மாக நாட்டின் வரு­டாந்த வரு­மானம் பெரு­ம­ளவால் வீழ்ச்­சி­கண்­டது.

அத­னைத்­தொ­டர்ந்து 2020 பெப்­ர­வரி மாத­ம­ளவில் சர்­வ­தேச சந்­தையில் உள்­நாட்டுப் பிணை­மு­றிகள் கழிவு விலையில் விற்­பனை செய்­யப்­பட்­டன. இவற்றின் விளை­வாக நாட்டின் வரு­மா­னத்தில் வீழ்ச்­சி­யேற்­பட்­ட­போது, இலங்­கையில் பாரிய நிதி­நெ­ருக்­கடி ஏற்­ப­டலாம் என்ற செய்­தியே சர்­வ­தே­சத்தைச் சென்­ற­டைந்­தி­ருக்கும். எனவே இதனைச் சீர்­செய்­யு­மாறு சர்­வ­தேச தரப்­ப­டுத்தல் முகவர் நிறு­வ­னங்கள் இலங்­கைக்குத் தொடர்ச்­சி­யாக அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­வந்த நிலை­யிலும், மத்­திய வங்­கி­யினால் எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டாத கார­ணத்­தி­னா­லேயே 2020 செப்­டெம்பர் மாதம் சர்­வ­தேச தரப்­ப­டுத்தல் நிறு­வ­னத்­தினால் இலங்கை தர­மி­றக்­கப்­பட்­டது. ஆனால் ஃபிட்ச் ரேட்டிங் நிறு­வனம் உள்­ளிட்ட இரண்டு சர்­வ­தேச தரப்­ப­டுத்தல் நிறு­வ­னங்­களை கடந்த 2005 ஆம் ஆண்டில் நாட்­டிற்குள் கொண்­டு­வந்த மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம், இப்­போது அந்­நி­று­வ­னங்­களைக் கடு­மை­யாக விமர்­சிக்­கின்­றது. அதனை அச்­சந்­தர்ப்­பத்­தி­லேயே உரி­ய­வாறு கையா­ளா­ததன் கார­ண­மாக இப்­போது நாட்டின் ஏனைய வங்­கி­களும் தர­மி­றக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் நிலைமை மேலும் மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது.

அடுத்­த­தாக இர­சா­யன உர இறக்­கு­ம­தியை நிறுத்­து­வ­தற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் இந்த நெருக்கடிநிலைக்கு முக்கியமான காரணமாகும். அதன் விளைவாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்து, உள்நாட்டு உற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அதேவேளை வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமான டொலர் கையிருப்பில் இல்லை. எனவே இவற்றினால் ஏற்படப்போகும் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் பிடியில் தற்போது நாடு சிக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் நிதி உறுதிப்பாடு தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் காணப்பட்ட நம்பகத்தன்மை இப்போது சரிவடைந்திருக்கின்றது. இவையே தற்போது நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகளுக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.