நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான ஊடக சந்திப்பு: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மார்ச் 14 முதல் சாட்சி விசாரணைகள்

0 388

(எம்.எப்.எம்.பஸீர்)
இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள கலகொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ரான சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 மார்ச் 14 ஆம் திகதி ஆரம்­பிக்க கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.

இது குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதன்­போது மன்றில் ஆஜ­ரானார்.

2016 ஆம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில் கொழும்பில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்தி, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மான வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பொலிஸில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இடம்­பெற்ற விசா­ர­ணை­களை மைய­ப்ப­டுத்தி, மேல் நீதி­மன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்பட்டு அது கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே நேற்று அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போது கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் சட்­டத்­த­ரணி சஞ்­சய ஆரி­ய­தாச ஆஜ­ரா­ன­துடன், வழக்கின் கணினி சாட்­சிகள் தொடர்பில் ஆராய பிர­தி­வாதித் தரப்­புக்கு அவ­காசம் அவ­சியம் என அவர் மன்றில் குறிப்­பிட்டார்.

அதற்­க­மைய அதற்­கான அவ­கா­சத்தை வழங்­கு­மாறு இர­க­சிய பொலி­சா­ருக்கு உத்­த­ர­விட்ட நீதி­பதி, வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை 2022 மார்ச் 14 ஆம் திகதி ஆரம்­பிப்­ப­தாக அறி­வித்தார்.

அன்­றைய தினம், சாட்­சியம் வழங்க பொலி­ஸா­ருக்கு முறைப்பாடளித்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்டவர்களுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் நடவடிக்கைஎடுத்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.