ஐவேளை கூட்டுத் தொழுகைக்கு அனுமதியில்லை

முயற்சிகள் தொடர்கின்றன என்கிறார் திணைக்கள பணிப்பாளர்

0 310

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்­ளி­வா­சல்­களில் ஐவேளைத் தொழு­கை­க­ளையும் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­வாக ஜமா அத்­தாக தொழு­வ­தற்­கான அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களை முஸ்லிம் சமய மற்றும் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கொள்ளும் என திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்சார் தெரி­வித்தார்.
தற்­போது பள்­ளி­வா­சல்­களில் ஜும் ஆதொ­ழுகை மாத்­திரம் வரை­ய­றுக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யுடன் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய கூட்­டாக தொழு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

ஏனைய சம­யங்­களின் வணக்க வழி­பா­டு­களைப் போலன்றி முஸ்­லிம்­க­ளுக்கு ஐவேளை தொழுகை கட்­டா­ய­மா­ன­தாகும். எனவே ஐவேளை தொழு­கை­க­ளையும் கூட்­டாக தொழு­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார். Vidivelli

Leave A Reply

Your email address will not be published.