‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி விடயத்தில் அலி சப்ரி அதிருப்தி அமைச்சு பதவியை துறக்க முஸ்தீபு

பதவி துறக்க வேண்டாம் என்று சில தரப்புகள் அழுத்தம்

0 317

ஞான­சார தேர­ருடன் இணங்­கிப்­போ­வது கடினம். அதனால் நான் நீதி அமைச்சு பத­வி­யி­லி­ருந்து விலகிக் கொள்ள தீர்­மா­னித்­துள்ளேன்

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் நிய­மனம் தொடர்பில் பலத்த அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தனது தீர்­மா­னத்தில் அவர் உறு­தி­யா­க­வுள்­ள­தா­கவும் அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்கள் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்­தன.
நீதித்­து­றைக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக தான் உள்ள நிலையில், சட்­டத்­தி­ருத்தம் ஒன்று தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான செய­ல­ணியின் தலை­வ­ராக தகு­தி­யற்ற, சர்ச்­சைக்­கு­ரிய நபர் ஒரு­வரை நிய­மித்­துள்­ள­மை­யா­னது தன்னை அவ­ம­திக்கும் செயல் என்றும் நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தன்னைச் சந்­தித்த முஸ்லிம் பிரமுகர்களிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்­கையை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான சட்ட மூலத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக ஞான­சார தேரரின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­லணி நீதித்­து­றைக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் எனக்குத் தெரி­யாமல், எமது ஆலோ­சனை இன்றி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேர­ருடன் இணங்­கிப்­போ­வது கடினம். அதனால் நான் நீதி அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து விலகிக் கொள்ள தீர்­மா­னித்­துள்ளேன்” என நீதி­ய­மைச்சர் அலி சப்ரி நேற்று முன்­தினம் தன்னைச் சந்­தித்த முஸ்லிம் பிர­மு­கர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

நீதி­ய­மைச்­சரின் இல்­லத்தில் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்ற இச்­சந்­திப்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன், வை.எம்.எம்.ஏ. தேசியத் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி உள்­ளிட்ட பலர் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அங்கு நீதி­ய­மைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் “ ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்­ப­தற்­கான கொள்­கைகள் அனை­வரும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் வடி­வ­மைக்­கப்­பட்­டு­வரும் நிலையில் திடீ­ரென செய­ல­ணி­யொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி நாடு திரும்­பி­யதும் இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளேன். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுடன் அர­சி­ய­லுக்கு அப்பால் எனக்கு இறுக்­க­மான நட்பு இருக்­கி­றது. அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கிக்­கொண்­டாலும் நான் அவ­ருக்கு விசு­வா­ச­மா­கவே இருப்பேன். அமைச்­ச­ர­வையில் எனக்கு மரி­யாதை வழங்­கப்­ப­டு­கி­றது. அமைச்­ச­ர­வைக்குள் இருந்தால் பிரச்­சி­னை­களை ஓர­ளவு தீர்க்க முடியும் என்­பதை நான­றிவேன்.
அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் எம்­பிக்கள் மற்றும் உயர் மட்ட அதி­கா­ரிகள் நான் எனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யக்­கூ­டாது என்றே கோரு­கி­றார்கள். பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் நான் பத­வியில் இருக்க வேண்டும். அவ்­வாறு இருப்­பது அவர்­க­ளுக்­குப்­பலம் என்று தெரி­விக்­கிறார். என்­றாலும் எமது சமூகம் என்னைப் புரிந்து கொள்­ளா­ம­லி­ருக்­கி­றது.

நீதித்­து­றையில் மாற்­றங்­க­ளையும், திருத்­தங்­க­ளையும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு 30 குழுக்­களை அமைத்­துள்ளேன். நீதி­ய­மைச்சின் அதி­கா­ரிகள் நூற்­றுக்கு நூறு­வீதம் எனக்கு ஒத்­து­ழைக்­கி­றார்கள். நான் பதவி வில­கினால் இவர்­களும் ஒதுங்கிக் கொள்­வார்கள் என்று தெரி­வித்தார்.

இதே­வேளை, நாட்டில் சட்­டங்­களை இயற்­று­வ­தற்கு சட்ட ரீதி­யான நிறு­வ­னங்கள் இருக்­கும்­போது இவ்­வா­றான செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது தேவை­யற்ற ஒரு விட­ய­மாகும். இதனால் நான் இது தொடர்பில் அதி­ருப்­ப­தி­ய­டைந்­துள்ளேன். எனது ஆலே­சனை பெற்­றுக்­கொள்­ளப்­ப­டா­மலே இச்­செ­ய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது என அலி சப்ரி ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னி­டையே, பொது ஜன பெர­மு­னவின் ஐந்­தா­வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்ட ஆளும் தரப்­புக்கு ஆத­ர­வான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரிக்­கு­மி­டையில் இவ்­வி­வ­காரம் தொடர்பில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போதும் ஜனா­தி­ப­தியின் தீர்­மானம் குறித்து தான் பலத்த அதி­ருப்­தியில் இருப்­ப­தா­கவும் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­வதைத் தவிர வேறு வழி­யில்லை என அழுத்­த­மாகக் குறிப்­பிட்­ட­தா­கவும் அச் சந்­திப்பில் பங்­கு­பற்­றிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.

இத­னி­டையே தற்­போ­தைய அமைச்­ச­ர­வையில் ஒரே­யொரு முஸ்லிம் பிர­தி­நி­தி­யான அலி சப்ரி உள்ள நிலையில், அவரும் அப் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தா­னது எதிர்­கா­லத்தில் சமூகம் தொடர்­பான முக்­கிய விவ­கா­ரங்­களை அமைச்­ச­ர­வையில் பேசு­வ­தற்­கான வாய்ப்பை இல்­லா­தொ­ழித்­து­விடும் என சிலர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இதன் கார­ண­மாக பதவியை இராஜினாமாச் செய்வதைத் தவிர்த்து அமைச்சரவையில் உள்ளிருந்தே இந்த செயலணி பற்றிய எதிர்ப்பை தெரிவிக்குமாறும் சிலர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, நாட்டின் மிகப் பெரிய சட்டத்துறைசார் அமைப்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இந்த செயலணி தொடர்பில் பலத்த கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் தமது அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர் அலி சப்ரி மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.