தெஹிவளை பள்ளி தாக்குதல்தாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0 475

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

தெஹி­வளை – கொஹு­வலை பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி .வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 13 ஆம் திகதி காலை 8.00 மணி­ய­ளவில் மோட்டார் சைக்­கிளில் வருகை தந்த சந்­தேக நபர் பள்­ளி­வாசல் பிர­தான வாயில் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தை­ய­டுத்து சிசி­ரிவி பதி­வு­களின் உத­வி­யுடன் கொஹு­வலை பொலிஸார் அவரை கைது செய்து கல்­கிசை நீதிவான் நீதி­மன்றில் கடந்த 18 ஆம் திகதி ஆஜர்­ப­டுத்­தினர்.

நீதிவான் சந்­தேக நபரை கடந்த 25 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார். அன்­றைய தினம் சந்­தேக நபர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் அவர் மீதான குற்­றச்­சாட்­டுகள் பிணை வழங்­கக்­கூ­டி­யது எனக்­கூறி பிணை மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­தனர்.

இதே­வேளை பொலிஸ் தரப்பில் ஆஜ­ரான கொஹு­வலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிணை வழங்­கப்­ப­டு­வதை ஆட்­சே­பித்தார். தாக்­கு­தலின் பின்­ன­ணியில் ஏதேனும் இன முறு­கல்­களை ஏற்­ப­டுத்தும் கார­ணிகள்  உள்­ள­னவா என்­பதை அறிய மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றார்.

பள்­ளி­வாசல் தரப்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் ஷிராஸ் நூர்தீன், பசன் வீர­சிங்க மற்றும் இர்சாத் அஹமட் என்போர் பிணை வழங்­கப்­ப­டக்­கூ­டாது என வாதிட்­டனர். சந்­தேக நபர் உள­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்­டவர் எனவும், மன அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­னவர் எனவும் ஏற்­க­னவே மருத்­துவ அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர் பிணையில் விடு­விக்­கப்­பட்டால் தனக்கோ அல்­லது பிற­ருக்கோ எது­வித தீங்கும் விளை­விக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக மேலு­மொரு மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென வாதிட்­டனர். இதனை நீதி­மன்றம் மருத்­துவ அறிக்கை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்­டு­மென்­றனர்.

இரு தரப்பு சட்­டத்­த­ர­ணி­களின் வாதங்­களை செவி­ம­டுத்த கல்­கிசை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சந்­தேக நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம்  திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் மேலதிக வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்கும் படியும் உத்தரவு பிறப்பித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.