முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்றம் புரிந்துகொள்ளப்படாதுள்ள உண்மைகள்

0 1,033

மின்ஸார் இப்றாஹிம்

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்பு என்­பன தற்­போது பெரும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. இந்த இரண்டு விட­யங்­களும் இவ்­வாறு கொதி நிலை அடை­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கமே வித்­தூன்­றி­யது.

அதா­வது 2016 இல் ஐ.தே.க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஒரிரு முன்­னணி அமைச்­சர்கள் ‘‘ஐரோப்­பிய யூனி­யனின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலு­கையை பெறு­வ­தற்கு முஸ்லிம் தனியார் சட்­டத்தை குறிப்­பாக முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையில் திருத்தம் செய்ய வேண்டும். அப்­போது தான் ஜி.எஸ்.பி. பிளஸ் சலு­கையைப் பெற்­றுக்­கொள்ள முடியும்’’ என்­றனர். இக்­க­ருத்து முஸ்­லிம்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் ஆச்­ச­ரி­யத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது. ஐரோப்­பிய யூனி­யனின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கும் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லைக்கும் என்ன சம்­பந்தம் என்ற கேள்வி பர­வ­லாக எழுந்­தது. இது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போடு­வது போன்­ற­தாகும்.

ஆனால், தாம் அவ்­வாறு நிபந்­தனை விதிக்­க­வில்லை என்று குறிப்­பிட்ட ஐரோப்­பிய யூனியன், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் கதை வெளி­வந்த ஒரு மாதத்­திற்­குள்­ளேயே அச்­ச­லு­கையை இலங்­கைக்கு வழங்­கி­விட்­டது.

என்­றாலும் ஐ.தே.க. வினர் என்ன நோக்­கத்­திற்­காக இக்­க­தையை முன்­வைத்­த­ன­ரென முஸ்­லிம்கள் அன்று எண்ணிப் பார்க்கத் தவ­றினர். ஆனாலும் ஜி.எஸ்.பி. நிவா­ரணம் கிடைத்­த­தோடு முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவ­காரம் நிறுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக 2009 இல் நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொட முஸ்லிம் தனியார் சட்­டத்தை மறு­சீ­ர­மைக்­க­வென நிய­மித்து குழுவை ஐ.தே.க நீதி­ய­மைச்சர் உயிர்ப்­பித்தார். ஆனால் அது அச்­ச­மயம் பேசு­பொ­ரு­ளா­னதும் அச்­சட்­டத்­தி­ருத்தம் தொடர்பில் கவனம் செலுத்­தாத நிலை­யையும் ஐ.தே.க. வினரே உரு­வாக்­கினர்.

ஆனால் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு எதி­ராக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஒரு சில அமைச்­சர்­களும் ஒரு சில அரச சார்­பற்ற அமைப்­புக்­களும் தங்­க­ளது அற்ப நலன்­க­ளுக்­காக திரை மறைவு சூழ்ச்­சியை முன்­னெ­டுத்து வந்­த­மை­யையே இந்­ந­ட­வ­டிக்­கைகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

இச்­சந்­தர்ப்­பத்தில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்சி ஆட்­சி­பீ­ட­மே­று­வ­தற்­கான தேர்தல் கால துரும்புச் சீட்­டு­களில் ஒன்­றாக ஐ.தே.க. வினர் திரை­ம­றைவில் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களை வெளிப்­ப­டை­யாக எடுத்­துக்­கொண்­டன. அதா­வது நாட்டில் ஒரே சட்டம், ஒரே நீதி­மன்ற கட்­ட­மைப்பு தான் இருக்க வேண்டும் என்ற பிர­சா­ரத்தை அவர்கள் முன்­னெ­டுத்­தனர்.

முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு எதி­ராக ஐ.தே.க. வினர் அன்று முன்­னெ­டுத்த சதி சூழ்ச்­சியின் விளை­வாக, இந்­நாட்டு முஸ்­லிம்கள் தங்­க­ளுக்­கென தனி­யான சட்ட மற்றும் நீதி­மன்ற கட்­ட­மைப்பை கொண்­டி­ருக்­கின்­றனர் என்ற பிழை­யான பார்வை திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­டது. அர­சியல் நலன்­களை அடைந்து கொள்ளும் வகையில் அவை சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் கொண்டு செல்­லப்­பட்­டன. ஆனால் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கும் காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­புக்கும் எதி­ராக பிர­சாரம் செய்­யப்­பட்­டது போன்று முஸ்­லிம்­க­ளிடம் தனி­யான சட்ட மற்றும் நீதிக் கட்­ட­மைப்பு கிடை­யாது. அவர்­களும் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் கீழான பொது சட்­டத்­திற்குக் கட்­டுப்­பட்டே வாழ்ந்து வரு­கின்­றனர்.
அப்­ப­டி­யென்றால் இந்த முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பு என்ன என்ற கேள்வி எழலாம். அது நியா­ய­மான கேள்­வியே. அதா­வது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்­பா­னது முஸ்­லிம்கள் தங்கள் விவாக மற்றும் விவா­க­ரத்து விட­யங்­களை சமய, கலா­சார விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் அமைத்­துக்­கொள்­வ­தற்கு வழி­செய்­வ­தாகும்.

இது பல்­லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்­நாட்டில் வாழும் ஏனைய சமூ­கங்­களைப் போன்று முஸ்­லிம்­களும் தனியார் சட்­டத்தைக் கொண்­டி­ருக்­கின்­றனர். மாறாக முஸ்­லிம்கள் மாத்­திரம் இவ்­வா­றான சட்­டத்தைக் கொண்­டி­ருப்­ப­வர்கள் அல்லர். அந்த வகையில் சிங்­கள பௌத்த மக்கள் கண்­டியன் சட்­டத்­தையும், தமிழ் மக்கள் தேச வழமை சட்­டத்­தையும் கொண்­டி­ருக்­கின்­றனர். இச்­சட்­டங்கள் அந்­தந்த சமய கலா­சார விழு­மி­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இரண்டு மூன்று விட­யங்கள் சம்­பந்­தப்­பட்­ட­வை­யாகும். அந்த வகையில் முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தில் விவாக விவா­க­ரத்து விட­யங்கள் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள் பிர­தா­ன­மாகக் காணப்­ப­டு­கின்­றன.
இஸ்­லாத்தில் விவாகம் விவ­கா­ரத்து தொடர்பில் தெளி­வான வரை­ய­றைகள் உள்­ளன. அதற்கு அமை­வாக முஸ்­லிம்கள் செயற்­ப­டு­கின்­றனர். அதே­நேரம் இந்த முஸ்லிம் தனியார் சட்டக் கட்­ட­மைப்­பா­னது நேற்று இன்று அறி­மு­க­மா­ன­து­மல்ல. இந்­நாட்டில் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாக முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். இம்­முஸ்­லிம்கள் மத்­தியில் விவாக விவ­கா­ரத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் வியா­பாரம் தொடர்­பி­லான தனித்­து­வ­மான வரை­ய­றை­களும் நீதி கட்­ட­மைப்பும் பல நூற்­றாண்­டு­க­ளாக இருந்து வந்­துள்­ளன.

அந்த வகையில் எஸ்.ஜி. பெரேரா எழு­தி­யுள்ள ‘இலங்­கையின் வர­லாறு’ என்ற நூலின் முதலாம் பாகத்தில் ,’8 ஆம் நூற்­றாண்டில் (இஸ்லாம் தோன்­றிய 200 வரு­டங்­க­ளுக்கு பின்னர்) கொழும்பு, பேரு­வளை, காலி போன்ற பிர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் தங்கள் விவாகம், விவா­க­ரத்து மற்றும் வியா­பார கொடுக்கல் வாங்கல் தொடர்­பான பிணக்­கு­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்­காக அவர்­க­ளுக்­கென கொழும்பில் ஷரிஆ நீதி­மன்­ற­மொன்றைக் கொண்­டி­ருந்­தனர்’ என்று குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­தோடு பேரா­சி­ரி­யர்­க­ளான லக்‌ஷ்மன் மார­சிங்­கவும் ஷெர்ய ஸ்ரங்­கு­வேலும் இணைந்து எழு­தி­யுள்ள நூலொன்­றிலும் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­யான நீதி­மன்றம் இருந்­துள்­ள­மையைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­தோடு லோனா தேவ­ராஜா எழு­தி­யுள்ள இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு என்ற நூலிலும் இவை வர­லாற்று ஆதா­ரங்­க­ளுடன் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும், 1505 இல் இலங்­கைக்கு வருகை தந்த போர்த்­துக்­கேயர் இலங்­கையை ஆக்­கி­ர­மித்­ததும் இந்­நாட்டின் கரை­யோரப் பிர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் சொல்­லண்ணா துன்­பங்­க­ளுக்கு உள்­ளா­கினர். அவர்கள் மீது திட்­ட­மிட்டு வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தோடு அவர்கள் பாரம்­ப­ரிய வாழி­டங்­களில் இருந்தும் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். இதன் விளை­வாக நாட்டின் உட்­பி­ர­தே­சங்­களில் மன்­னர்­க­ளதும் பெரும்­பான்மை மக்­க­ளதும் ஆத­ரவு, ஒத்­து­ழைப்­புடன் முஸ்­லிம்கள் குடி­யே­றினர். மன்­னர்கள் நிலம் மற்றும் வச­தி­களை வழங்கி முஸ்­லிம்­களைக் குடி­ய­மர்த்­தினர். அப்­படி இருந்தும் கூட தம் பிர­தே­சங்­களில் குடி­யேறி வாழும் முஸ­லிம்கள் கடை­பி­டிக்கும் சட்ட வரை­ய­றை­களை அவர்கள் தடுக்­கவோ கட்­டுப்­ப­டுத்­தவோ இல்லை. மாறாக அவர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு சமய, கலா­சார விழு­மி­யங்­க­ளுக்கு தேவை­யான சலு­கை­க­ளையும் வச­தி­க­ளையும் வழங்­கினர்.

இவை இவ்­வா­றி­ருக்க, ஒல்­லாந்தர் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த பின்னர் இலங்­கைக்கு நிமிக்­கப்­பட்ட ஆளுனர், ஒல்­லாந்து நாட்டின் குடி­யேற்ற தலை­மை­ய­கத்­திற்கு பின்­வ­ரு­மாறு கடிதம் எழு­தினார். ‘இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் விவாகம், விவா­க­ரத்து மற்றும் வியா­பார கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சமய கலா­சார விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் சில சட்­டங்­களைக் கொண்­டுள்­ளனர். அவற்றை மாற்ற முடி­யாது. அதனால் இலங்­கைக்­கான சட்­டத்தைத் தயா­ரிக்கும் போது அச்­சட்­டங்­க­ளையும் கருத்தில் கொள்­ளு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தப் பின்­பு­லத்தில் தான் 08 ஆம் இலக்க ‘முஹம்­ம­தியன் கோர்ட்’ என்ற சட்டக் கோவை 1770 இல் இந்­நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அத்­தோடு இலங்­கையை ஆக்­கி­ர­மித்த பிரித்­தா­னி­யரும் முஸ்­லிம்­களின் இச்­சட்­டத்தில் மாற்­றங்­களைச் செய்­ய­வில்லை. அதே­போன்று இந்­நாடு சுதந்­தி­ர­ம­டைந்து 60 – 65 வரு­டங்கள் கடந்தும் இச்­சட்­டத்­தையோ காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பையோ முற்­றாக ஒழிப்­பது தொடர்பில் கவனம் செலுத்­த­வில்லை. மாறாக 1951 இல் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. கால சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப திருத்­தங்­களைச் செய்­வது நியா­ய­மா­னதே.

இதை­வி­டுத்து முஸ்லிம் தனியார் சட்­டத்­தையும் காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பையும் ஒழிக்க முயற்­சிப்­பதே முஸ்­லிம்­களை வேத­னை­க­ளுக்கும் கவ­லை­க­ளுக்கும் உள்­ளாக்­கி­யுள்­ளது. ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாக இப்­பூ­மியில் வாழும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக இருந்­தாலும் அவர்­க­ளது சமய, கலா­சார பாரம்­ப­ரிய விழு­மி­யங்­களும் பேணிப் பாது­காக்­கப்­பட வேண்டும். அவர்கள் இந்­நாட்டின் பிர­ஜை­க­ளே­யன்றி வந்­தேறு குடிகள் அல்லர். இந்­நாட்டில் வேடுவ சமூ­கத்­தினர் தம் பாரம்­ப­ரிய அடை­யா­ளங்­க­ளுடன் வாழ்­வ­தற்கு தேவை­யான அனைத்து உரி­மை­க­ளையும் பெற்று இருப்­பது போன்று முஸ்­லிம்­களும் தம் சமய, கலா­சார விழு­மி­யங்­க­ளுடன் வாழ்­வ­தற்­கான உரி­மை­களைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆனால் இந்­நாட்டின் தனித்­துவ அடை­யா­ளங்­களை சிதைத்து நாட்டை மீண்டும் டும் ஐரோப்­பிய கொல­னி­யாக்க விரும்பும் ஐ.தே.க வின் சிலரும் சில அரச சார்­பற்ற அமைப்­பு­களும் தம் அற்ப நலன்­களை அடைந்து கொள்­வ­தற்­காக இலக்கு வைத்து முஸ்லிம் தனியார் சட்­டத்­தையும் காதி நீதி­மன்றக் கட்­மைப்­பையும் ஒழிக்க முயற்­சிப்­ப­தா­னது, இந்­நாடு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு வாழப்­பொ­ருத்­த­மற்ற நாடு என்ற பிழை­யான பார்­வையை சர்­வ­தே­சத்­திற்கு வழங்க முயற்சி செய்து கொண்­டி­ருக்கும் சக்­தி­க­ளுக்கு வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தாக அமைந்­து­விடும். அதற்கு எவரும் துணை­போய்­வி­டக்­கூ­டாது. எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் நலன்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே முன்­னெ­டுக்க வேண்டும்.

அந்­த­டிப்­ப­டையில் பல நூற்­றாண்டு கால­மாக இந்­நாட்டில் நடை­மு­றையில் இருக்கும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து மற்றும் காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பில் காலத்­திற்கு தேவை­யான திருத்­தங்­களை மேற்­கொண்டு அவற்றை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதுமே உசிதமான காரியமாக அமையும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.