அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ள நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்

0 179

நியூ­சி­லாந்தின் ஓக்­லாந்­தி­லுள்ள பல்­பொருள் அங்­காடி ஒன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கத்­திக்­குத்து தாக்­குதல் சம்­ப­வமும் அதனைத் தொடர்ந்து சந்­தேக நபர் சுட்டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வமும் அந்­நாட்­டிலும் இலங்­கை­யிலும் பலத்த அதிர்ச்­சியைத் தோற்­று­வித்­துள்­ளது. இதன் போது தாக்­கு­தலில் ஈடு­பட்ட இளைஞர் இலங்­கையைச் சேர்ந்­தவர் என்­பதே இந்த விவ­காரம் இங்கும் அதிகம் பேசு­பொ­ரு­ளாகக் கார­ண­மாகும்.
குறித்த இளைஞர் 2011 ஆம் ஆண்டு இலங்­கை­யி­லி­ருந்து நியூ­சி­லாந்­துக்கு மாணவர் வீசாவில் சென்­றுள்ள நிலையில், பின்னர் தனக்கும் தனது குடும்­பத்­தி­ன­ருக்கும் இலங்­கையில் அச்­சு­றுத்தல் உள்­ள­தாகக் கூறி அகதி அந்­தஸ்­துக்­காக விண்­ணப்­பித்­துள்ளார். எனினும் இந்த விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர் மேன்­மு­றை­யீடு செய்­துள்ளார். இக் காலப்­ப­கு­தியில் அவர் சில குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டதைத் தொடர்ந்து சிறை­யிலும் அடைக்­கப்­பட்­டுள்ளார். அவர் நியூ­சி­லாந்­துக்குச் சென்று சரி­யாக 10 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்ற நிலை­யி­லேயே தற்­போது இவ்­வா­றா­ன­தொரு துர­திஷ்ட முடிவு அவ­ருக்கு நேர்ந்­துள்­ளது.

அவர் நியூ­சி­லாந்தில் தங்­கி­யி­ருந்த காலப்­ப­கு­தியில் ஜ.எஸ். தீவி­ர­வாத சிந்­த­னை­க­ளின்பால் ஈர்க்­கப்­பட்­ட­தாக அந்­நாட்டுப் பிர­தமர் கூறி­யுள்ளார். 2016 இல் சிரி­யா­வுக்குச் செல்ல முற்­பட்ட சமயம் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பின்னர் இவர் தீவி­ர­வாத சிந்­த­னை­களை பரப்ப முற்­பட்­ட­தா­கவும் அதன்பால் ஈர்க்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த தாக்­குதல் சம்­ப­வத்­திற்கு சம்­பந்­தப்­பட்ட நபரின் நம்­பிக்­கையோ, கலா­சா­ரமோ இனமோ காரணம் அல்ல என்றும் அதற்கு அவர் மாத்­தி­ரமே பொறுப்பு என்றும் அந்­நாட்டு பிர­தமர் மிகத் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

இருந்­த­போ­திலும், இலங்­கையைப் பொறுத்­த­வரை இச் சம்­ப­வ­மா­னது கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி நோக்­கப்­ப­டு­கின்­றமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். இன்று குறித்த நபர் இலங்­கையில் ஏதேனும் தாக்­கு­தல்­களில் ஈடு­பட முற்­பட்­டாரா என்ற கோணத்­திலும் இலங்­கை­யிலும் இவ­ருக்கு வேறு யாரு­டனும் தொடர்­புகள் இருந்­த­னவா என்ற கோணத்­திலும் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பொலிசார் தெரி­வித்­துள்­ளனர்.

குறித்த இளை­ஞரின் கடந்த 10 வருட கால நியூ­சி­லாந்து வாழ்க்­கையை எடுத்து நோக்­கும்­போது அவர் தனி­மையில் அதிக காலத்தைச் செல­விட்­டுள்­ள­மையும் குறிப்­பாக அவர் பாரிய மன அழுத்­தத்­திற்­குட்­பட்­டி­ருந்­த­மையும் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரது குடும்­பத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யிலும், அவர் மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சம்­ப­வத்தை வெறு­மனே தீவி­ர­வாத கண்­கொண்டு மாத்­திரம் நோக்­காது அவர் இவ்­வா­றா­ன­தொரு நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­மைக்கு மன அழுத்­தமும் ஒரு காரணம் என்­ப­தையும் கருத்­திற்­கொள்­வது அவ­சி­ய­மா­ன­தாகும். குறிப்­பாக, ஐரோப்­பிய நாடு­களில் அடிக்­கடி இடம்­பெறும் கத்­திக்­குத்துச் சம்­ப­வங்கள், துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்­களின் பின்னால் சம்­பந்­தப்­பட்ட நபர்கள் பெரும்­பாலும் மன அழுத்­தத்­திற்­குட்­பட்­டுள்­ள­மையே கார­ண­மாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.
தீவி­ர­வா­தமோ, மன அழுத்­தமோ எது­வா­க­வி­ருப்­பினும் அப்­பாவி மக்கள் மீதான இவ்­வா­றான கொடூ­ர­மான தாக்­கு­தல்­களை ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. ஆனாலும் இவ்­வாறு ஒரு நபர் செய்த தவ­றுக்­காக அவர் சார்ந்த சமூ­கத்தை குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­து­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இது இந்த விவ­கா­ரத்தை நியூ­சி­லாந்தும் அதன் பிர­த­மரும் கையாண்ட விதத்­தி­லி­ருந்து இலங்­கை­யர்கள் படிப்­பினை பெற்றுக் கொள்­ள­வில்லை என்­ப­தையே காட்­டி­நிற்­கி­றது.

இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்­தினால் நியூ­சி­லாந்தில் வாழும் முஸ்­லிம்­களும் பாரிய அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். வெள்­ளை­யின தீவி­ர­வா­திகள் மூலம் முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் நடாத்­தப்­ப­டலாம் எனும் எச்­ச­ரிக்­கையை அந்­நாட்டு பொலிசார் விடுத்­துள்­ளனர். கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வா­சல்­களில் 2019 மார்ச்சில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் 51 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டதைத் தொடர்ந்து அங்கு முஸ்­லிம்கள் மீது அனு­தாப அலை­வீ­சி­யது. அந்­நாட்டு அர­சாங்­கமும் பொது மக்­களும் முஸ்­லிம்கள் மீது தமது நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்­தினர். எனினும் தற்­போது இந்த தாக்­குதல் சம்­ப­வ­மா­னது அங்கு வாழும் முஸ்­லிம்­களை தலை­கு­னியச் செய்­துள்­ளது.
இவ்­வா­றான சம்­ப­வங்கள் இனி­மேலும் இடம்­பெ­று­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. பெற்­றோ­ரையும் பிறந்த நாட்­டையும் பிரிந்து கடல் கடந்த நாடு­க­ளுக்குச் சென்று தனி­மையில் வாடும் பலர் இவ்வாறான துரதிஷ்டமான முடிவுகளைச் சந்தித்த பல சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். இது சகலருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். பெற்றோர் பிள்ளைகளை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களது மன நிலை குறித்து கூடுதல் கரிசனை காட்ட வேண்டும். இன்றேல் இவ்வாறான விரும்பத்தகாத விளைவுகளுக்கே முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். நாம் விடும் சிறு தவறுகள் ஒரு குடும்பத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பேராபத்தைக் கொண்டுவந்துவிடும் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.