விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்

0 447

கொவிட் 19 வைரஸ் தொற்று கார­ண­மாக நாடு முடக்­கப்­பட்­டுள்ள நிலையில் மக்கள் அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்­களின் அதீத விலை உயர்­வு­களால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தினக் கூலி­க­ளா­கவும் தொழி­லா­ளர்­க­ளா­கவும் அன்­றாடம் உழைத்து வாழ்க்கை நடத்தும் மக்கள் மூவேளை உண­வு­க­ளுக்குக் கூட திண்­டாடி வரு­கின்­றனர்.

அண்­மையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் அர­சாங்­கத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட்­டதால் உணவுப் பொருட்­களின் விலை­களில் திடீ­ரென மாற்­றங்கள் ஏற்­பட்­டன. மக்­களின் அன்­றாட வாழ்க்­கைக்குத் தேவை­யான உணவுப் பொருட்­க­ளாக அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, தேங்காய் எண்ணெய் உட்­பட பல­வற்றின் விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டன. பேக்­கரி உணவுப் பொருட்­க­ளான பாண் 5 ரூபா­வாலும் ஏனை­யவை 10 ரூபா­வாலும் அதி­க­ரித்­தது.

இன்று அர­சாங்­கத்­தினால் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள விலை­யினை விடவும் உணவுப் பொருட்கள் அதி­க­ரித்து விற்­கப்­ப­டு­கின்­றன. அர­சாங்கம் இந்­நி­லை­யினை தடுக்க முடி­யாது திண­று­கி­றது.

2019ஆம் ஆண்டு அக்­டோபர் மாத விலை­க­ளுடன் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை­களை ஒப்­பிட்டு நோக்­கும்­போது சில உணவுப் பொருட்கள் 100 வீத, 200 வீத அதி­க­ரிப்­பினைத் தொட்­டுள்­ளன.

244 ரூபா­வாக இருந்த ஒரு கிலோ சிறிய வெங்­காயம் 432 ரூபா­வா­கவும், 109 ரூபா­வாக இருந்த உரு­ளைக்­கி­ழங்கு 295 ரூபா­வா­கவும், 320 ரூபா­வாக இருந்த ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய் 710 ரூபா­வா­கவும், 110 ரூபா­வாக இருந்த மைசூர் பருப்பு 240 ரூபா­வா­கவும், 100 ரூபா­வாக இருந்த சீனி ஒரு கிலோ 220 ரூபா­வா­கவும், 88 ரூபா­வாக இருந்த வெள்ளை பச்சை அரிசி 110 ரூபா­வா­கவும் சந்­தையில் விற்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான விலை அதி­க­ரிப்­பினை அர­சாங்­கத்­தினால் கட்­டுப்­ப­டுத்த இய­லாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. கோதுமை மா, அரிசி, சீனி,சமையல் எரி­வாயு என்­ப­ன­வற்றின் விலை­யேற்­றத்­தினால் சிற்­றுண்­டிச்­சா­லை­களும், ஹோட்­டல்­களும் உணவுப் பொருட்­களின் விலை­களை நினைத்­த­வாறு அதி­க­ரித்­துள்­ளன.

சீனி விலை 100 வீதத்­துக்கும் அதி­க­மாக அதி­க­ரித்த பின்­ன­ணியை ஆராய்ந்த நுகர்வோர் அதி­கார சபை சீனியை பதுக்கி வைத்­தி­ருந்த 5 களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு சீல் வைத்­துள்­ளது. சந்­தையில் செயற்­கை­யாக தட்­டுப்­பாட்­டினைத் தோற்­று­வித்து விலையை அதி­க­ரிக்கும் நோக்கில் பதுக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­படும் 206 கோடி ரூபா பெறு­ம­தி­யான 10255 மெட்ரிக் தொன் சீனி இக்­க­ளஞ்­சி­ய­சா­லை­க­ளி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது என நுகர்வோர் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. இக்­க­ளஞ்­சி­ய­சா­லைகள் பதிவு செய்­யப்­ப­டா­தவை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களின் விலைகள் பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ள­மை­யை­ய­டுத்து, அரிசி, சீனி, பருப்பு, உட்­பட அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க அர­சாங்­கத்தைக் கோரி­யுள்ளார்.

ஒரு கிலோ சீனி வரி­யுடன் சேர்த்து 98 ரூபா­வா­கவே அமை­கி­றது. வரு­டத்­துக்கு எமக்கு 7 இலட்சம் மெட்ரிக் தொன் சீனி தேவைப்­ப­டு­கி­றது. தற்­போ­தைய நிலையில் இறக்­கு­ம­தி­யா­ளர்கள் 7000 கோடி வரு­மானம் பெறு­கி­றார்கள் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இதே­வேளை அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களை அர­சாங்கம் ச.தொ.ச. ஊடாக சலுகை விலையில் விற்­பனை செய்ய வேண்டும் என நீர்­வ­ழங்கல் அமைச்சர் அர­சாங்­கத்தைக் கோரி­யுள்­ளார்.

அத்­தோடு அத்­தி­யா­வ­சிய உணவு விநி­யோ­கத்­திற்கு அவ­ச­ர­கால விதி­மு­றைகள் கடந்த திங்­கட்­கி­ழமை நள்­ளி­ரவு முதல் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி இதற்­கான விஷேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்­டுள்ளார்.

நெல், அரிசி, சீனி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களை மொத்­த­மாகப் பதுக்­குதல், அதிக விலை அற­விட்டு நுகர்­வோரை அசௌ­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்­கு­வதைத் தவிர்த்­த­லுக்­கா­கவே இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அரசாங்கம் வர்த்­த­மானி வெளி­யி­டு­வ­துடன் மாத்­திரம் இருந்­து­வி­டாது இது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கும் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? என சந்தேகிக்கப்படுகிறது. வர்த்தமானி வெளியீடுகள் மூலம் மாத்திரம் இந்த மோசடிகளையும் விலை உயர்வுகளையும் தடுக்க முடியாது. இவ்வாறான வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.