மருத்­துவ அனர்த்­தத்­­திற்கு முகங்­கொ­டுக்க போகி­றோ­மா?

0 602

நாடு மிக மோச­மா­­ன­தொரு மருத்­துவ நெருக்­க­டியை நோக்கி நகர்­வ­தாக கடந்த சில தினங்­க­ளாக சுகா­தா­ரத்­து­றை­யினர் எச்­ச­ரித்து வரு­கின்ற நிலை­யில் அதன் யதார்த்­தங்­களை நாம் இப்­போது உணரத் தொடங்­­கி­யுள்­ளோம். கிட்­டத்­தட்ட நாட்­டி­ன் அனைத்து மாவட்­டங்­க­ளி­லு­முள்ள அரச வைத்­தி­ய­சா­­லைகள் கொவிட் 19 தொற்­றா­ளர்களால் நிரம்­பி­யுள்­ளன. கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் சில தனியார் ஹோட்­டல்­க­ளிலும் இதே நிலைமை அவ­தா­னிக்­கப்­ப­டு­கி­ற­து.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி மாத்­திரம் 82 கொவிட் 19 மர­ணங்கள் பதி­வா­கி­­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று மாலை அறி­வித்­துள்­ளது. அதற்கு முந்­தைய தினம் 74 மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இது நிலை­மையின் பார­தூ­ரத்தை விளக்­கு­கி­றது. கடந்த மாதத்தில் சரா­ச­ரி­யாக தினமும் 50 மர­ணங்கள் பதி­வான நிலையில் தற்­போது திடீ­ரென 70 முதல் 80 பேராக மர­ணங்கள் அதி­க­ரித்­துள்­ளன. முஸ்­லிம்­களின் கொவிட் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­படும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரிலும் கடந்த சில தின­ங்க­ளாக அடக்கம் செய்­யப்­படும் ஜனா­ஸாக்­களின் எண்­ணிக்­கையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­­கி­றது.

சில­ தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு நிகழ்வொன்­றில் இணை­ய­வ­ழி­யாக உரையாற்­றிய ஹொங்­கொங் பல்­க­லைக்­க­ழக பேரா­­சி­ரியர் மலிக் பீரிஸ், அடுத்து வரும் மாதங்கள் இலங்­கைக்கு ‘மிக அபாயமிக்­கவை’ என எச்­ச­ரித்­தி­ரு­ந்தார். தான் ஒரு இலங்­கையன் என்ற வகையில் இதனைக் கூறு­வது தனது பொறுப்பு என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அவ­ரது கூற்­றுப்­படி ஆகஸ்ட் மற்றும் செப்­டம்பர் மாதங்­களில் இலங்­கையில் கொவிட் 19 டெல்டா திரிபின் பரவல் அதிக­மாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ற­து.

இந்­தி­யாவில் டெல்டா திரிபு ஏற்­ப­டுத்­திய பாதிப்­­பினை நாம் ஊட­கங்கள் வாயி­லாக கண்­டுள்ளோம். அதே நிலை­மையின் சாயல்­களை இப்­போது இலங்­கையில் காண முடி­கி­றது. வைத்­தி­ய­சா­லை­களில் கட்­டில்­க­ளின்றி மக்கள் தரை­க­ளிலும் வெளி ஓடை­க­ளிலும் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­­லையில் சாதா­ரண மருத்­துவ விடு­தி­க­ளுக்கும் கொவிட் தொற்­றா­ள­ர்­க­ளுக்­கான விடு­தி­க­ளுக்­கு­மி­டையில் எந்­த­வித்­தி­யா­ச­மு­மின்றி அனை­வரும் ஒன்­றாக தங்க வைக்­கப்­ப­டுகின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ள­து.

இவ்­வா­றான ஆபத்­தான நிலை­யி­லும் நாட்டில் சகல வித­மான போக்­கு­வ­­ரத்­து­கள், அரசாங்க மற்றும் தனியார் அலு­வ­லக செயற்­பா­டு­கள், வியா­பா­ரங்­கள், பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் என அனைத்தும் நடந்த வண்­ணமே உள்­ளன. சுமார் 1 கோடிக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு ஒரு தடுப்­பூ­சி­யேனும் செலுத்­தப்­பட்­டு­விட்­டது என்ற நம்­பிக்­கையிலும் பெரு­மை­யிலும் அர­சாங்­கம் இருப்­பது தெரி­கி­றது. எனினும் தடுப்­பூசி ஏற்­று­வதால் மாத்­திரம் டெல்டா திரி­பிலிருந்து பாது­காப்பு பெற முடியும் என நம்­பு­வது அறி­யா­மை­யாகும். தடுப்­பூசி ஏற்றிக் கொண்ட பின்­னரும் உரிய சுகா­தார பாது­காப்பு விதி­மு­றை­களைப் பின்­பற்­று­வதன் மூலம் அதன் பலனைப் பெற முடியும். துர­திஷ்­ட­வ­ச­மாக மக்கள் தற்போது இது விட­யத்தில் அலட்­சி­ய­மாக நடந்து கொள்­கின்­றமை கவ­லை­ய­ளிக்­­கி­ற­து.

குறிப்­பாக முஸ்லிம் பிரதேசங்­களில் மீண்டும் ஒன்­று­­கூ­டல்­களும் திரு­மண நிகழ்­வு­களும் சுகா­தார விதி­மு­றை­­களை மீறி இடம்­பெ­று­­கின்­றமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சல்­களில் 100 பேர் மாத்­தி­ரமே தொழு­­கைக்­காக ஒன்­று­கூ­டலாம் என்ற விதி­முறை இறுக்­க­மாக கடை­ப்­­பி­டிக்­கப்­ப­­டு­வ­தில்லை என புல­னாய்­வுப் பிரி­வி­­னரின் அறிக்­கைகள் கூறு­கின்­றன. இது குறித்­து பாது­காப்புத் தரப்­பி­னால் வக்பு சபைக்கும் முறை­யிடப்­பட்­டுள்­ளது. இதனால் மீண்டும் பள்­ளி­வா­சல்­களை மூட வேண்­­டிய நிலை ஏற்­படக் கூடும். என­­வேதான் நாம் மிகவும் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்­டி­யுள்­ள­து.

நாம் முன்னர் பல தட­வைகள் கூறி­யதைப் போன்று அர­சாங்கம் கொவிட் 19 தொற்­றிலிருந்து தனது மக்­களைப் பாது­காப்­பதில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது என்­ப­தே யதார்த்­த­மாகும். தமது அர­சியல் நலன்­களைக் காப்­பாற்றிக் கொள்­வ­திலும் எதி­ரி­களைப் பழி­வாங்­கு­வ­­திலும் சிறு­பான்மை சமூ­­கங்­களை ஓரங்­கட்­டு­வ­திலும் காட்­டிய அக்­க­றையை கொவிட் விட­யத்தில் காட்­டி­யி­ருந்தால் நிச்­ச­ய­மாக இந்தச் சிறிய தீவை கொரோனா எனும் கொடிய நோயி­ட­மி­ருந்து எப்­போ­தோ பாது­காத்­தி­ருக்க முடியும். எனினும் நாட்டின் தலை­வர்­களின் தூய்­மை­யற்ற, நீதி­யற்ற செயற்­பாடுகள் தொடர்ந்தும் அவர்­க­ளுக்கு அழி­­வு­க­ளையே தேடிக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­ற­து.

அர­சாங்கம் தனது அர­சியல் சித்­து­வி­ளை­யாட்­­டுக்­களை ஒரு­புறம் வைத்துவிட்­டு, இரா­ணு­வத்தின் கைகளில் மாத்­திரம் கொவிட் தடுப்பு நிர்வாக பொறுப்­பு­களை ஒப்­ப­டைக்­காது அனு­ப­வம்­வாய்ந்த சுகா­தார நிபு­ணர்­களையும் இணைத்துக் கொண்டு கொவிட் எனும் இந்தப் பாரிய சவா­லிலிருந்து நாட்டை பாது­காக்­க முன்­வர வேண்டும். இன்றேல் பேரா­சி­ரியர் பீரிஸ் எச்­ச­ரித்­தது போன்று நாம் அனை­வரும் பாரிய அனர்த்தம் ஒன்­றுக்­கே முகங்­கொ­டுக்க வேண்டி வரும். அவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டா­தி­ருக்க இறை­வ­னைப் பிரார்­த்­திப்­போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.