தனியார் சட்ட விவகாரம் ஆலோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து ஆராய்வோம்

0 481

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் தொடர்பில் முன்­வைக்கும் ஆலோ­ச­னை­களை அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிப்­ப­தா­கவும் இது தொடர்பில் ஆராய்­வ­தா­கவும் நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை மேற்­கொண்­டுள்ள திருத்­தங்கள் இன்னும் சட்­ட­மாக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் நீதி­ய­மைச்­சரை நீதி­ய­மைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், வை.எம்.எம்.ஏ அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.ரிஸ்மி, தேசிய சூரா சபையின் தலைவர் அசூர் மற்றும் பெண் பிர­தி­நி­திகள் உட்­பட பலர் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள திருத்­தங்­களில் திரு­மண வய­தெல்லை அதி­க­ரிப்பு மற்றும் திரு­ம­ணப்­ப­திவின் போது மண­ம­களின் கையொப்பம் பெற்றுக் கொள்ளல் என்­ப­ன­வற்­றுக்கு ஆத­ரவு தெரி­வித்த முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள், காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­வது தொடர்­பான தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யும்­ப­டியும் நீதி­ய­மைச்­சரை வேண்டிக் கொண்­டார்கள்.

காதி நீதி­மன்ற முறைமை இல்­லா­ம­லாக்­கப்­பட்டு முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் குடும்ப நீதி­மன்றில் அல்­லது வேறு நீதி­மன்­ற­மொன்றில் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் முஸ்­லிம்கள் எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் பிரச்­சி­னை­களை அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் நீதி­ய­மைச்­ச­ரிடம் விளக்­கி­னார்கள்.

பல­தார திரு­ம­ணத்­துக்­கான தடை தொடர்­பிலும் மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டிக்கொண்டார்கள்.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட நீதியமைச்சர் அவற்றை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவதாகத் தெரிவித்தார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.