Savate Kickboxing சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கத்தை இலக்கு வைக்கும் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா

0 424

நமது சமூ­கத்தில் மாண­விகள் பலர் அண்மைக் கால­மாக பல்­வேறு துறை­களில் தமது திற­மைகள் மற்றும் ஆளு­மை­களை வெளிப்­ப­டுத்தி வரு­வதைக் காண முடி­கின்­றது.
முஸ்லிம் சமூ­கத்தில் பெண்­களின் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு பெண்கள் ஆணா­திக்­கத்­திற்­குட்­ப­டு­வ­தாக சிலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரும் சூழ்­நி­லையில், இம்­மா­ண­வி­களின் திற­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­வ­த­னூ­டாக அந்த மனப்­ப­திவில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும்.
தென்­னி­லங்­கையில் சிங்­கள மொழியில் தேர்ச்சி பெற்ற சுக்ரா முனவ்வர் தனது மொழி­யாற்றல், அறிவு, திறமை மூலம் சில மாதங்­க­ளுக்கு முன்பு முஸ்லிம் சமூ­கத்தை நோக்கி பெரும்­பான்மை சமூ­கத்தின் கவ­னத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து பல மாண­விகள் தேசிய மட்ட பரீட்­சை­களில் சாத­னை­களை படைத்து நாட்­டுக்கும் சமூ­கத்­திற்கும் பெருமை தேடித் தந்­தனர்.
இவ்­வ­ரி­சை­யில்தான் தற்­போது மலை­யத்தில் கம்­ப­ளையை பிறப்­பி­ட­மாகக் கம்­பளை சாஹிரா கல்­லூ­ரியில் உயர்­தர பிரிவில் கற்கும் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா Savate Kickboxing போட்­டியில் தேசிய மட்­டத்தில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.
இலங்­கையின் சார்பில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வுள்ள Savate Kickboxing சர்­வ­தேச போட்­டியில் கலந்து கொள்­வ­தற்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இலங்கைக் குழுவில் உள்ள ஒரே முஸ்லிம் மாணவி சாகிர் ஹுஸைன் பஹ்மா ஆவார்.
இவரைப் போன்ற இளந்­த­லை­மு­றை­யி­னரை இனங்­கண்டு வெளிச்­சத்­திற்கு கொண்டு வந்து ஊக்­கு­விப்­பதும் கைகொ­டுப்­பதும் சமூ­கத்தின் கட­மை­யாகும் என்ற அடிப்­ப­டையில், இவரை கம்­ப­ளையில் அவ­ரது வீட்டில் ‘விடி­வெள்­ளி’க்­காக சந்­தித்தோம்.

நேர்­காணல் :
எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலி­ஓயா

கேள்வி : நீங்கள் பங்­கு­பற்­ற­வுள்ள போட்டி தொடர்­பாக கூறு­வீர்­களா?
பதில் : விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கீழ் இயங்கும் French Savate Kick Boxing National Federation of Sri Lanka மூலம் தேசிய மட்­டத்தில் நடாத்­தப்­பட்ட Savate Kickboxing தெரிவில் நான் தெரிவு செய்­யப்­பட்டு பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வுள்ள போட்­டிக்குத் தெரி­வா­கி­யுள்ளேன்.
விளை­யாட்­டுத்­து­றை­யுடன் தொடர்­பு­டைய Savate Kickboxing ஒரு தற்­காப்புக் கலை­யாகும். இது பிரான்ஸ் நாட்டில் பிர­பல்­ய­மா­னது. இதனை கல்வி நிலை­யங்­களில் பயிற்­று­விப்­பார்கள். இதில் பங்­கு­பற்றி சாத­னைகள் நிலை நாட்ட முடியும். இக்­க­லையை கற்றுக் கொள்ளும் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தேசிய மட்­டத்தில் மட்­டு­மன்றி சர்­வ­தேச மட்­டத்­திலும் போட்­டி­களில் பங்­கு­பற்­றக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது. 2024 ஒலிம்­பிக்கை இலக்­காகக் கொண்டு தற்­போது பயிற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன.

கேள்வி : இச்­சர்­வ­தேச போட்­டிக்கு நீங்கள் தெரி­வா­கி­யதைத் தொடர்ந்து, உங்­களைப் பற்றி அறிந்து கொள்ள சமூ­கத்தில் பலரும் ஆர்வம் காட்­டு­கின்­றனர். உங்­களைப் பற்றி கூறு­வீர்­களா?
பதில் : கம்­பளை உனம்­புவ பகு­தியை சேர்ந்த எமது குடும்பம் மார்க்கப் பின்­ன­ணியைக் கொண்ட குடும்­ப­மாகும். எனது தந்தை அல்­குர்­ஆனை மன­ன­மிட்ட ஒரு ஹாபிஸ் ஆவார். அவர் பாத­ணிகள் தயா­ரிக்கும் தொழிலில் ஈடு­பட்டு வரு­பவர். அவர் தற்­காப்புக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்­ற­வ­ராவார். நான் குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்ளை. அவ்­வாறே, தந்­தையின் சகோ­த­ரர்­களும் சன்­மார்க்கப் பணி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள். எமது குடும்­பத்தில் 15 பேர் Savate Kickboxing, குங்பூ என்­ப­வற்றை முறை­யாகப் பயின்­றுள்­ளனர்.

கேள்வி : பொது­வாக இவ்­வா­றான பயிற்­சி­களில் நமது சமூக இளைஞர் யுவ­திகள் ஆர்வம் காட்­டாத நிலையில் உங்­க­ளுக்கு எப்­படி இதில் ஆர்வம் ஏற்­பட்­டது?
பதில் : எனது தந்தை Savate Kickboxing இல் தேசிய மட்ட முதல் தர பயிற்­று­விப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராவார். இதனால் பலர் அவரைத் தேடி வந்து பயிற்சி பெறுவர். இக்­க­லையின் நுணுக்­கங்­களை வீட்­டிற்கு வந்து கற்றுக் கொண்டு செல்­வார்கள்.
நான் சிறு வயதில் இருக்கும் போது அவர் கற்றுக் கொடுப்­ப­தையும் அவ­ரிடம் பலர் பயிற்சி எடுப்­ப­தையும் பார்த்துக் கொண்­டி­ருப்பேன். நாள­டைவில் இக்­க­லையின் நுணுக்­கங்கள் எனது மனதில் ஆழ­மாக பதிய ஆரம்­பித்­தது. அப்­போது, அவர்கள் பயிற்சி பெறு­வது போல் நானும் கைகளால் செய்து பார்ப்பேன். இது தொடர்­பான வீடி­யோக்­களை தேடிப் பார்ப்பேன். இதனால் எனது மனதில் நாள­டைவில் இக்­க­லையைக் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வம் ஏற்­பட்­டது. என­வேதான், எனது தந்­தை­யிடம் Savate Kickboxing ஐ முறை­யாகப் பயின்றேன். பின்பு, மேல­திக நுணுக்­கங்­களை எம்.டி.எம். நவ்சாத் சேரிடம் பெற்றுக் கொண்டேன்.
முன்னர் குறிப்­பிட்­டது போல் இதனை சுய ஆர்­வத்­தில்தான் கற்றுக் கொண்டேன். இதற்­காக நான் கடும் பயிற்சி செய்வேன். நான் பயிற்­சி­யி­லீ­டு­படும் போது Savate Kickboxing இல் தேசிய மட்­டத்­திலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் சாதனை படைக்க வேண்டும் என்றும் எமது சமூ­கத்தில் முன்­மா­தி­ரி­யாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

கேள்வி : ஒரு பெண் என்ற வகையில் Savate Kickboxing கற்றுக் கொள்­வது தற்­காப்­புக்கு உகந்­தது என்று கரு­து­கி­றீர்­களா?
பதில் : இதனை கற்­றுக்­கொண்ட பின்னர் எனக்கு தற்­போது நிறைய தைரியம், துணிச்சல் ஏற்­பட்­டுள்­ளது. அச்சம் இல்­லாமல் போயுள்­ளது. இக்­க­லை­யுடன் இணைந்த சுய­ஒ­ழுக்கம் எனக்குள் உரு­வா­கி­யுள்­ளதை உணர்­கின்றேன். மேலும், Savate Kickboxing கலையை கற்றுக் கொண்ட மன­நி­றைவு எனக்­குள்­ளது.

கேள்வி : நீங்கள் உயர்­தர வகுப்பு மாண­வி­யா­வீர்கள். இத்­தற்­காப்புக் கலையை நீங்கள் கற்றுக் கொள்­வதை உங்கள் வகுப்புத் தோழி­யர்கள் அறிந்திருந்­தார்­களா? அவர்­க­ளுக்கும் இதில் ஆர்வம் உள்­ளதா?
பதில் : நான் இதைப்­பற்றி அவர்­க­ளிடம் அதிகம் காட்டிக் கொண்­ட­தில்லை. ஆனால், சில சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளிடம் கூறிய ஞாபகம் உண்டு. அப்­போது “நாங்­களும் உனது தந்­தை­யிடம் வந்து Savate Kickboxing படிக்க வேண்டும்” என்று கூறு­வார்கள். எமது சமூ­கத்தில் பெண்­களும் இக்­க­லையை கற்­றி­ருக்க வேண்டும் என்­பதன் தேவையை எடுத்துக் கூறு­வார்கள்.
சில ஆசி­ரி­யர்­க­ளுக்கும் இது பற்றித் தெரியும். நான் தேசிய மட்­டத்தில் தெரி­வா­கிய போது கல்­லூரி அதிபர் உட்­பட ஆசி­ரி­யர்கள் என்னைப் பாராட்­டி­னார்கள்.
நான் இப்­போட்­டியில் பங்­கு­பற்றி தங்கப் பதக்கம் வென்று நாட்­டுக்கும் சமூ­கத்­திற்கும் எனது கல்­லூ­ரிக்கும் பெருமை தேடிக் கொடுப்பேன். இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்­லாஹ்­த­ஆலா எனக்கு வெற்­றியைத் தருவான் என்ற நம்­பிக்­கை­யுண்டு.

கேள்வி : நீங்கள் இவ்­வா­றா­ன­தொரு துறையில் சாத­னை­களைப் படைப்­பது பற்றி சமூ­கத்தில் காணப்­படும் வர­வேற்பு எத்­த­கை­யது?
பதில் : நான் முன்னர் சொன்­னது போல் எல்­லோரும் தொடர்பு கொண்டு பாராட்டி வரு­கின்­றனர். இக்­க­லையை தாங்­களும் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற எண்­ணத்தை பலரும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். எனது தந்தை வெளியில் பொது இடங்­க­ளுக்குச் செல்லும் போது பலர் அவ­ரிடம் என்னை வாழ்த்தி, பாராட்டிப் பேசி­யுள்­ளனர்.
French Savate Kick Boxing National Federation of Sri Lanka இன் தலை­வரும் பயிற்­று­விப்­பா­ள­ரு­மான பிரசாத் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களும் என்னை பெரிதும் ஊக்­கு­வித்து வரு­கின்றார்.

கேள்வி : இந்தக் கலையை முஸ்லிம் சமூ­கத்தில் ஏனைய பெண்­களும் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யதன் அவ­சியம் பற்றி என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?
பதில் : நான் நினைக்­கிறேன்…. பெண்கள் யாவரும் கட்­டாயம் ஏதா­வது தற்­காப்­புக்­க­லையை கற்றுக் கொள்ள வேண்டும். இது எங்­க­ளு­டைய பாது­காப்­புக்கு மட்­டு­மன்றி உள்­ளத்­திற்கும் உடம்புக்கும் நல்­லது. சவால்­களை எதிர்­கொள்ள முடியும். சுறு­சு­றுப்பு, புத்­து­ணர்வு, மன தைரியம் ஏற்­ப­டு­வ­துடன் நோய்­களில் இருந்து பாது­காத்துக் கொள்ள முடியும்.
இதில் முஸ்லிம் சமூ­கத்தில் பெண்கள் மிகவும் பின்­தங்­கிய நிலையில் உள்­ளனர். எமது பெண் பிள்­ளைகள் 100 மீற்றர் தூரம் கூட ஓட முடி­யாத பல­வீன நிலையில் உள்­ளனர்.
எமது சமூ­கத்தில் கூடு­த­லான பெண்கள் நடைப்­ப­யிற்சி, உடற்­ப­யிற்சி இல்­லாமல் நீரி­ழிவு போன்ற நோய்­க­ளுக்­குட்­ப­டு­வதை அறி­கின்றோம். இதனால், பிற்­கா­லங்­களில் பணம் செலுத்தி வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் வெளி­யி­டங்­க­ளிலும் உடற்­ப­யிற்சி செய்கின்­றனர். இல்­லா­விட்டால் நோயின் கார­ண­மாக வாழ்நாள் பூரா­கவும் வாடு­கின்­றனர். எனவே, இத்தகைய ஒரு கலையை கற்று வைத்திருப்பது ஆரோக்கியமானது.

பஹ்மாவின் தந்தை சாகிர் ஹுஸைன்

மாணவி பஹ்மாவின் தந்தை சாகிர் ஹுஸைன் கூறுகையில்,
எமது சமூகத்தில் குறிப்பாக பெண்கள் தங்களது உடல், உள ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வடைய வேண்டும். பஹ்மா சிறு வயதில் இருந்து இத்துறையில் ஆர்வம் காட்டுவார்.
நான் அரபுக்கலாசாலையில் கற்கும் காலம் முதல் தற்காப்புக் கலையை கற்பதில் ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளேன். இதனால் Saolin Kungfu, Wusu Kungfu, Wing Chum Kungfu, வர்மக்கலை என்பவற்றை பயின்றேன். இதில் எமது மாணவர்கள் சாதனைகளை நிலைநாட்ட முடியும். என்னால் முடிந்த பங்களிப்பை எமது சமூகத்திற்கு வழங்க தயாராகவுள்ளேன் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.