மரணத்தின் உண்மைகள் வெளிவரும் வரை சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும்

இச் சம்பவத்தினால் ரிஷாதுக்கு மட்டுமல்ல கட்சிக்கும், குடும்பத்திற்கும் பாரிய பிரச்சினை இஷா­லி­னியின் தாயாரே உண்மை முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்கிறார் அமீர் அலி

0 336

(ஆர்.யசி)
சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். அதேபோல் பாதிக்­க­கப்­பட்ட சிறு­மியின் குடும்­பத்­திற்கு நிவா­ரணம் கிடைக்க வேண்டும். இந்த மர­ணத்தின் உண்­மைகள் தெரிய வரும் வரையில் சக­லரும் பொறு­மை­யாக இருக்க வேண்டும் என தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­வ­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அமீர் அலி தெரி­வித்­துள்ளார். இஷா­லி­னியின் தாயா­ருக்கு உண்­மைகள் தெரிந்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளது, எனவே அவ­ரது தாயாரே இந்த சூழ்ச்­சியின் முடிச்­சு­களை அவிழ்க்க வேண்டும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் வீட்­டிலே உயி­ரி­ழந்த நுவ­ரெ­லியா டய­க­மவை சேர்ந்த இஷா­லி­னியின் மரணம் பாரிய எதிர்ப்­ப­லை­களை உரு­வாக்­கி­யுள்ள நிலையில் ரிஷாத் தரப்பில் இருந்து எந்­த­வித தெளி­வு­ப­டுத்­தல்­களும் இத­வரை முன்­வைக்­கப்­ப­டா­துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தவி­சாளர் அமீர் அலி இது குறித்த தமது நிலைப்­பா­டு­களை முன்­வைத்­துள்ளார். அதில் அவர் கூறி­யுள்­ள­தா­வது,
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் வீட்­டிலே உயி­ரி­ழந்­துள்ள சிறுமி இஷா­லினி 2020ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 18 ஆம் திகதி ரிஷாத் வீட்டில் பணியில் அமர்த்­தப்­பட்­டதில் இருந்து கிட்­டத்­தட்ட ஏழு மாதங்கள் அங்கு பணி­யாற்­றி­யுள்ளார். இப்­போது இந்த மரணம் வெறு­மனே ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு மட்­டு­மல்ல கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும், குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கும் பாரிய பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இதில் பல்­வேறு தரப்­புகள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தும் வரு­கின்­றன. அதேபோல் ரிஷாத் பதி­யுதீன் வீட்டில் உள்ள சக­லரும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களும் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர். சிறு­மியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

அதேபோல் அந்த வீட்டில் இருக்கும் அவ­ரது மனைவி, அவ­ரு­டைய தாய், தந்­தையர் மற்றும் சில­ரது கூற்றின் படி, சிறுமி இஷா­லி­னிக்கு வழங்­கப்­பட்­டுள்ள அறை­யிலே அவர் இரவு நித்­தி­ரைக்கு சென்­ற­தா­கவும், அதி­கா­லையில் கூக்­குரல் சத்தம் கேட்­ட­தா­கவும், அங்கு சென்று பார்த்த வேளையில் சிறுமி உட­லிலே தீ பற்­றிக்­கொண்­டி­ருந்­த­தா­கவும் உட­ன­டி­யாக சிறு­மியை காப்­பாற்ற, வீட்டின் பின்­னா­லுள்ள நீர் தாங்­கியில் அந்த சிறு­மியை அமிழ்த்­தி­ய­தா­கவும் அதற்கு பின்னர் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­ற­தா­கவும் கூறி­யுள்­ளனர். அதேபோல் அந்த சிறு­மியும் ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் பேசி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. தனக்கு குளிர்ந்த நீர் வேண்­டு­மென சிறுமி கேட்­டுள்ளார் எனவும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் ஏன் தீ வைத்­துக்­கொண்டாய் என கேட்­ட­போதும் அதற்கு எந்­த­வித பதி­லையும் சிறுமி கூற­வில்லை என்­பதே சக­ல­ருக்கும் மர்­ம­மாக உள்ள விட­ய­மாகும். பின்னர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் சுய­நி­னைவு இழந்து அவர் கால­மா­கி­யுள்ளார்.

இந்த விட­யத்தில் அந்த சிறு­மிக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருந்தால் சிறு­மிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­ப­தோடு குற்­ற­வா­ளிகள் யாராக இருந்­தாலும் அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதில் எம்­மத்­தியில் மாற்­றுக்­க­ருத்து கிடை­யாது. ஆனால் இந்த விட­யத்தில் சில ஊட­கங்கள் செய்­தி­களை திரி­பு­ப­டுத்­தி­யுள்­ளனர். சிறு­மி­யாக அவரை காண்­பிக்கப் பார்க்­கின்­றனர். ஆனால் அவர் 16 வய­திற்கு பின்­னரே வேலைக்கு அமர்த்­தப்­பட்­டுள்ளார். அர­சியல் தலை­வர்கள் இந்த விட­யத்தை பேசு­வது தவ­றில்லை. அந்த மக்­களின் பிர­தி­நி­திகள் நிச்­ச­ய­மாக தமது மக்­க­ளுக்­காக பேச­வேண்டும், அதேபோல் இந்த விட­யத்தில் உண்மை கண்­ட­றி­யப்­பட சக­ல­ரதும் ஒத்­து­ழைப்பு கிடைக்க வேண்டும். வெறு­மனே போராட்­டங்­களை செய்­வதில் அர்த்­த­மில்லை. உண்­மையில் இந்த சிறு­மிக்கு என்ன நடந்­தது என்­பது குறித்த உண்­மைகள் வெளி­வரும் என்­ப­தையே ரிஷாத் குடும்­பத்­தாரும் எதிர்­பார்த்து வரு­கின்­றனர். அதற்­கான பூரண ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­கின்­றனர்.

அதேபோல் சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. நாங்கள் அறிந்த வரையில் இவ­ரது மரணம் தொடர்பில் சட்ட மருத்­துவ அதி­கா­ரியின் அறிக்கை நீதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் நாட்­பட்ட பாலியல் தொடர்பு இருந்­துள்­ளது என கூறப்­பட்­டுள்­ளது. ஆனால் அது எந்த கால­கட்­டத்தில் இருந்­தது என்­பது தெரி­யாது. இவர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட வேளையில் அவர் மீது எந்த வித­மான பலாத்­கா­ரமோ, சித்­தி­ர­வ­தையோ இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை என உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. வரும் நாட்­களில் நீதி­மன்­றத்தில் இது ஆரா­யப்­படும். உண்­மைகள் கண்­ட­றி­யப்­படும்.

குறித்த சிறுமி இடை நடுவே பாட­சாலை கல்­வியை நிறுத்­தி­யுள்ளார் என கூறப்­ப­டு­கின்­றது. அந்த கால­கட்­டத்தில் ஏதேனும் வேறு உற­வுகள் இருந்­ததா என்­பது குறித்தும் பொலிசார் விசா­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனவே இந்த விட­யத்தில் நிச்­ச­ய­மாக எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் குடும்­பத்­திற்கு நிவா­ரணம் கிடைக்க வேண்டும். உண்­மைகள் தெரிய வரும் வரையில் சக­லரும் பொறு­மை­யாக இருக்க வேண்டும் என தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­கின்றேன். இந்த சிறு­மியின் பின்­ன­ணியில் இருந்த பிரச்­சினை என்ன, அவர் எவ்­வா­றான பாதிப்­பு­க­ளுடன் இந்த தொழி­லுக்கு வந்தார் என்­பதும் தெரி­யாது. ஏழு மாதங்கள் மாத்­தி­ரமே ரிஷாத் வீட்டில் பணி­பு­ரிந்­துள்ளார். எனவே பின்­புலம் என்­ன­வென்­பதை எம்மால் கண்­ட­றிய முடி­யாது. ஆக­வேதான் நாம் எந்­த­வித குழப்­பத்­தையும் ஏற்­ப­டுத்­தாது சகல வித­மான ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கி வரு­கின்றோம். கடந்த சில கால­மாக ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு பல்­வேறு சோத­னைகள் ஏற்­பட்டு வரு­கின்­றது. அர­சாங்­கமும் சில ஊட­கங்­களும் திட்­ட­மிட்டு அவரை அர­சி­யலில் இருந்து வெளி­யேற்றும் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றனர். ஆகவே இதனை நாம் கவ­ன­மாக கையாண்டு வரு­கின்றோம்.

இந்த சம்­பவம் நடந்­து­விட்­டது, இதனை நியா­யப்­ப­டுத்த நாம் தயா­ரில்லை, இது இலங்­கையில் இடம்­பெற்ற முதல் சம்­பவம் அல்ல. அதற்­காக ஏற்­க­னவே நடை­பெற்ற சம்­ப­வத்தை எடை­போட்டு கூறவும் இல்லை. ரிஷாத் தவ­றா­னவர் அல்ல. நீண்ட கால­மாக இதே போன்று சகோ­த­ரிகள் அங்கு பணி­பு­ரிந்­துள்­ளனர். ஆகவே விசா­ரணை முடிவும் வரையில் அமை­தி­யாக பொறு­மை­யாக இருப்­பது அவ­சியம். ரிஷாத் நீண்ட கால­மாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார், மார­டைப்பும் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அவரது குடும்பத்தினர் ரிஷாத் பதியுதீனை பார்ப்பதா அல்லது இந்த சம்பவத்தை கையாள்வதா என ஒன்றும் தெரியாது மிகுந்த நெருக்கடிக்குள் உள்ளார்.

எனவே தான் அவர் ஊடகங்களை சந்திக்க முடியாத நிலையில் உள்ளார். எவ்வாறு இருப்பினும் விரைவில் உண்மைகள் வெளிவரும். அதேபோல் அந்த சிறுமியின் தாயாருக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்புகள் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் சிறுமியின் தாயார் ரிஷாத் வீட்டிற்கு வந்துள்ளார், நிறைய உதவிகளை பெற்றுள்ளார். எனவே தாய்க்கு பல உண்மைகள் தெரிந்திருக்கும். ஆகவே அவரது தாயாரே இந்த சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.