ரிஷாத்தின் வழக்கு விசாரணையிலிருந்து விலகும் நீதியரசர்கள் !

0 25

எம்.எப்.எம்.பஸீர்

முன்னாள் அமைச்­சரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் தம்மை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்­துள்­ளதை ஆட்­சே­பித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­துள்ள வழக்கின் பரி­சீ­ல­னை­களில் இருந்து உயர் நீதி­மன்ற நீதி ­ய­ர­சர்கள் ஒவ்­வொ­ரு­வ­ராக விலகி வரு­கின்­றனர். அதன்­படி கடந்த 5 ஆம் திகதி திங்கட் கிழ­மையும் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து ஒதுங்கிக் கொள்­வ­தாக 4 ஆவது நீதி­யர­ச­ரான மஹிந்த சம­ய­வர்­தன அறி­வித்­துள்ளார்.

ஏற்­க­னவே உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக செயற்­பட்ட தான், மனு­தா­ரர்கள் இருவர் குறித்தும் அவ்­வாணைக் குழுவில் சாட்­சி­களை செவி­ம­டுத்­துள்­ள­தாக குறிப்­பிட்டு, அதன் அடிப்­ப­டையில் இம்­ம­னுக்கள் மீதான பரி­சீ­ல­னை­களில் இருந்து வில­கு­வ­தாக நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து தனிப்­பட்ட கார­ணிகள் என தெரி­வித்து நீதி­ய­ரசர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட கடந்த ஜூன் 4 ஆம் திகதி மனு மீதான பரி­சீ­ல­னை­களில் இருந்து வில­கி­யுள்ளார்.

அத்­துடன் கடந்த ஜூன் 23 ஆம் திகதி தனிப்­பட்ட கார­ணங்கள் எனக் கூறி நீதி­ய­ரசர் நவாஸ் வில­கினார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்­பு­ரைக்கு அமைய, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா ஊடாக, ரிஷாத் பதி­யுதீன், ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் தனித் தனி­யாக தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதி­மன்றில் நீதி­ய­ர­சர்­க­ளான முர்து பெர்­ணான்டோ, அச்­சல வெங்­கப்­புலி மற்றும் மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன் கடந்த 5 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு வந்­தி­ருந்­தது. இதன்­போதே, இம்­ம­னுக்கள் மீதான பரி­சீ­ல­னை­களில் இருந்து வில­கு­வ­தாக திறந்த மன்றில் நீதி­ய­ரசர் மஹிந்த சம­ய­வர்­தன அறி­வித்தார்.

ரிஷாதின் சகோ­தரர் ஒரு­வரை வழக்­கொன்­றி­லி­ருந்து தான் விடு­வித்து ஏற்­க­னவே தீர்ப்­ப­றி­வித்­துள்ள நிலையில், இம்­ம­னுவை பரி­சீ­லிக்க தான் விரும்­ப­வில்லை என குறிப்­பிட்டே நீதி­ய­ரசர் மஹிந்த சம­ய­வர்­தன வழக்­கி­லி­ருந்து வில­கினார்.

முன்­ன­தாக பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்­காவின் கல்­லாறு சர­ணா­லய காட்டுப் பகு­தியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்­டு­மா­னங்கள் மற்றும் மீள் குடி­யேற்­றத்தை முன்­னெ­டுத்­த­தாக கூறப்­படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத்­ப­தி­யுதீன் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக மேன் முறை­யீட்டில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

2015 இல் தாக்கல் செய்­யப்­பட்ட இந்த வழக்கு விசா­ர­ணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டே நிறை­வ­டைந்த நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி தீர்ப்பு அறி­விக்­கப்­ப­ட­வி­ருந்­தது.

எனினும், வழக்கை விசா­ரித்த நீதி­பதி (தற்­போ­தைய உயர் நீதி­மன்ற நீதி­யரசர்) மஹிந்த சம­ய­வர்­தன தீர்ப்பை அறி­விக்க விருப்பம் தெரி­விக்­கா­மை­யினால் மனுவை ஆரம்­பத்தில் இருந்து மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் அப்­போ­தைய தலைமை நீதி­பதி யசந்த கோதா­கொட தீர்­மா­னித்­தி­ருந்தார்.

அதன்­படி மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வாவின் ( தற்­போது உயர் நீதி­மன்ற நீதி­யரசர், ரிஷாதின் வழக்கு விசா­ர­ணை­களில் இருந்து முதலில் வில­கி­யவர்) கீழ் இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் இவ்­வ­ழக்கை மீள விசா­ரித்­தது. அந்த விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து ரிஷாத் அந்த காட­ழிப்­புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த தீர்ப்­புக்கு எதி­ராக ரிஷாத் பதி­யுதீன் உயர் நீதி­மன்றில் மேன் முறை­யீடும் செய்­துள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

ரிஷாத் பதி­யுதீன் சார்பில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவில், மனு­தா­ர­ரான தான், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எனும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கட்­சியின் தலைவர் எனவும், 2000 ஆம் ஆண்டு முதல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து வரு­வ­தா­கவும், பல்­வேறு அமைச்சுப் பத­வி­களை வகித்­துள்­ள­தா­கவும் ரிஷாத் பதி­யுதீன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இவ்­வா­றான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் எந்த அடிப்­ப­டை­களும் இன்றி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தான் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மனு­தா­ர­ரான ரிஷாத், தனது சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா ஊடாக இம்­ம­னுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலை நடாத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் இன்சாப் அஹ­மட்­டுக்கு சொந்­த­மான குளோசஸ் எனும் செப்பு தொழிற்­சா­லை­யுடன் தொடர்­பு­பட்ட விவ­கா­ரத்தில் தன் மீது விரல் நீட்­டப்­பட்­டாலும், குறித்த நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­டைய கொடுக்கல் வாங்­கல்­க­ளுடன் தனக்கு எவ்­வித தொடர்­பு­களும் இல்லை என ஆவ­ணங்­க­ளையும் இணைத்து ரிஷாத் பதி­யுதீன் இந்த மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தான் கைது செய்­யப்­பட்­டதும், 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவலில் வைக்க பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி வழங்­கிய அனு­ம­தியும் சட்­டத்­துக்கு முர­ணா­னது எனவும் குறித்த மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதன்­படி 12 (1), 12 (2) ஆம் உறுப்­பு­ரை­க­ளுக்கு அமைய சமத்­துவ அர­சி­ய­ல­மைப்­பின­துக்­கான உரிமை, 13 (1), 13 (2) ஆம் உறுப்­பு­ரை­க­ளுக்கு அமைய எதேச்­ச­தி­கா­ர­மாக கைது செய்­யப்­ப­டா­மலும், தடுத்து வைக்­கப்­ப­டா­மலும், சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­ப­டா­மலும் இருப்­ப­தற்­கான உரிமை ஆகி­யன மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் மனு­தாரர் தனது சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா ஊடாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதன்­படி, குறித்த மனுவை விசா­ர­ணைக்கு ஏற்­கு­மாறும், சி.ஐ.டி. யில் தான் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தடுப்புக் காவல் உத்­த­ர­வுக்கு இடைக்­காலத் தடை விதிக்­கு­மாறும் மனு­தாரர் கோரி­யுள்ளார். அத்­துடன் தனது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்ட ஈட்­டினை பிர­தி­வா­தி­க­ளிடம் இருந்து பெற்­றுத்­த­ரு­மாறும் ரிஷாத், தனது சட்­டத்­த­ரணி ஊடாக உயர் நீதி­மன்றை கோரி­யுள்ளார்.

ரியாஜ் பதி­யு­தீ­னுக்­காக தானே மனு­தா­ர­ராக நின்று சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா தாக்கல் செய்த மனுவில்,

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் ஏற்­க­னவே தான் ( ரியாஜ்)2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் திகதி கைது செய்­யப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அப்­போது கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் தான் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், பின்னர் சாட்­சி­யங்கள் இல்­லை­யென்ற அடிப்­ப­டையில் 2020ம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 29ம் திகதி விடு­தலை செய்­யப்­பட்­ட­தா­கவும் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் அதே குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் மீண்டும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வெள்­ள­வத்­தையில் வைத்து தன்னை கைது செய்­த­மையும், அது தொடர்பில் தடுத்து வைத்­துள்­ள­மையும் சட்ட விரோ­த­மா­னது எனவும் தனது அடிப்­படை உரி­மை­களை மீறும் வகையில் அந்த செயற்­பா­டுகள் உள்­ள­தா­கவும் ரியாஜ் பதி­யுதீன் சார்­பி­லான மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதனால் தடுப்புக் காவல் உத்­த­ரவை ரத்து செய்து, அதற்கு எதி­ராக இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

இந்த மனுக்கள் மீதான பரி­சீ­ல­னை­களே நீதி­யரசர்­களின் தொடர்ச்­சி­யான வில­கலால் பிற்­போ­டப்­பட்டு வரு­கி­றது.

சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் மாதவ தென்­னகோன் ஆஜ­ராகி வரு­கின்றார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, இவ்­வாறு தொடர்ச்­சி­யாக நீதி­ய­ர­சர்கள் வழக்­கி­லி­ருந்து வில­கு­வது தொடர்பில் நாம் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எஸ்.ஜி. புஞ்­சி­ஹே­வா­விடம் வின­வினோம்.

கேள்வி : நீதி­ப­திகள் அரசின் ஊதியம் பெறும் ஒரு பிரி­வினர். அவர்­க­ளுக்கு நான் வழக்­கி­லி­ருந்து வில­கு­கிறேன் என இவ்­வாறு கூற முடி­யுமா?
பதில்: ஆம் முடியும். சிவில் அல்­லது குற்­ற­வியல் வழக்கில் அல்­லது இவ்­வா­றான அடிப்­படை உரிமை மீறல் குறித்­தான வழக்­கு­க­ளின்­போதும், ஏதேனும் ஒரு தரப்­பி­ன­ருடன் தமக்கு தொடர்­பி­ருப்­ப­தாக நீதி­பதி ஒருவர் கரு­து­வா­ராயின் இவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுக்­கலாம்.
உறவு முறை, நட்பு போன்ற ஏதேனும் ஒரு தொடர்பு முறை அதற்குள் உள்­ள­டங்­கலாம். வழக்­கொன்றின் தீர்ப்பு வழங்­கப்­ப­டும்­போது அது பக்­கச்­சார்­பற்­ற­தாக இருக்க வேண்டும். வழக்­குடன் தொடர்­பு­டைய ஒரு தரப்­புடன் நீதி­ப­திக்கு ஏதேனும் ஒரு தொடர்பு இருக்­கு­மாக இருந்தால், வழக்கில் தாக்கம் செலுத்த முடி­யு­மான எந்­த­வொரு சந்­தர்ப்பம் இருக்­கு­மாயின், அவ்­வா­றான இடங்­களில் நீதி­ப­திகள் பக்­கச்­சார்­பற்­ற­வர்­க­ளாக இருக்க முடி­யாது என சட்டம் அனு­மா­னிக்­கி­றது. அத­னால்தான் இவ்­வா­றான வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி : கோத்­தா­பய ராஜபக்ஷ அர­சி­ய­லுக்கு வர முன்னர் சில வழக்­கு­க­ளி­லி­ருந்து நீதி­ப­திகள் வில­கினர். தற்­போது ரிஷாத் பதி­யு­தீனின் வழக்கில் தொடர்ச்­சி­யாக இது நடக்­கி­றது. அப்­ப­டி­யானால், இதன்­பி­றகு அவ்­வா­றான நீதி­ப­திகள் விசா­ரணை செய்யும் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய வழக்­குகள் தொடர்பில் பிரச்­சினை ஒன்று எழு­கி­றது அல்­லவா?
பதில் : குறித்த விடயம் தொடர்பில் அவ­தானம் செலுத்­து­வது முக்­கி­ய­மா­னது. அது நியா­ய­மான சந்­தே­க­மாக மாறலாம். எனினும் சட்டம் நீங்கள் கூறும் அள­வுக்கு ஆழ­மாக இந்த இடத்தில் செல்­வ­தில்லை. தனிப்­பட்ட தொடர்­புகள் குறித்து மட்­டுமே
பார்­க்கி­றது என தெரி­வித்தார்.

இந் நிலையில், ரிஷாத் பதி­யு­தீனின் அடிப்­படை உரிமை மீறல் வழக்­கி­லி­ருந்து நீதி­ய­ர­சர்கள் வில­கு­வது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­தி­னதும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த 6 ஆம் திகதி செவ்­வா­யன்று பாரா­ளு­மன்றில் குற்­ற­வியல் சட்ட திருத்தச் சட்ட மூலம் மீதான விவா­தத்­தின்­போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்க்­கட்­சியின் பிர­தம கொறடா லக்ஷ்மன் கிரி­யெல்ல ஆகியோர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். அத்­துடன் நீதி அமைச்சர் அலி சப்­ரியும் இந்த விட­யத்தில் பதி­ல­ளித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.