இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம்: மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க சி.ரி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

0 291

(எம்.எப்.எம்.பஸீர்)
நவ­ர­சம் என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கில், அவ­ருக்கு எதி­ராக சாட்­சிகள் இருப்பின் அவற்றின் சுருக்­கத்தை மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை நீதி­மன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டது.

கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­னகே முன்­னி­லையில் குறித்த வழக்கு திங்­க­ளன்று, அஹ்னாப் ஜஸீமின் சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக நகர்த்தல் பத்­திரம் ஒன்­றினை முன் வைத்து விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள செய்­யப்­பட்­டது. இதன்­போதே எதிர்­வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்க பயங்­கர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வுக்கு இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்த விவ­காரம் குறித்த வழக்கு விசா­ர­ணைகள், விசா­ர­ணைக்கு வந்த போது, அஹ்னாப் ஜஸீம் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஏ.ஏ.எம். இலியாஸ், சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர மற்றும் சட்­டத்­த­ரணி ஸ்வஸ்­திகா அரு­லிங்கம் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர். பயங்­கர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு சார்பில் எவரும் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

இதன்­போது மன்றில் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர வாதங்­களை முன் வைத்தார்.

‘கடந்த 11 ஆம் திகதி வெள்­ளி­யன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்­காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து அவர் எதிர்­வரும் 22 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதன்­போது அவ­ருக்கு சட்ட உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள எந்த வாய்ப்பும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அத்­துடன் அஹ்னாப் ஜஸீமை நீதி­மன்றில் ஆஜர் செய்­வ­தாக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவு அவ­ரது சட்­டத்­த­ர­ணிக்கோ அல்­லது குடும்­பத்­தா­ருக்கோ கூட அறி­விக்­க­வில்லை. இதனால் அவர் சார்பில் மன்றில் முன் வைக்க வேண்­டிய முக்­கி­ய­மான விட­யங்­களை அன்­றைய தினம் முன் வைக்க முடி­யாமல் போயுள்­ளது.
அஹ்னாப் ஜஸீமின் குடும்­பத்தார் கடந்த 12 ஆம் திகதி சனிக் கிழமை அவ­ருடன் பேசு­வ­தற்­காக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தொலை­பே­சியில் அழைத்­துள்ள போதும், அப்­போது கூட ஒவ்­வொரு நேரத்தை கூறி பிறகு அழைக்­கு­மாறு தெரி­வித்­துள்­ள­துடன், நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­டு­வதை அவர்கள் மறைத்­துள்­ளனர். 14 ஆம் திக­தியே அஹ்னாப் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளதை அறிய முடிந்­துள்­ளது.

ஏற்­க­னவே அஹ்னாப் ஜஸீமின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்­கத்தின் கீழ் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

விளக்­க­ம­றி­யலில் உள்ள அஹ்­னாபை பார்­வை­யிட்டு அவ­ருடன் சட்­டத்­த­ர­ணிகள் சந்­தித்து கலந்­து­ரை­யாட அவ­காசம் ஏற்­ப­டுத்தித் தரல் வேண்டும்.’ என சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஏ.ஏ.எம். இலியாஸ் மற்றும் சட்­டத்­த­ரணி ஸ்வஸ்­திகா அரு­லிங்கம் ஆகி­யோ­ருடன் ஆஜ­ராகி மன்­றினை கோரினார்.
கோரிக்­கை­க­ளுக்கு அனுமதியளித்த நீதிவான் சந்திம லியனகே, இது குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.