சட்டத்தரணிகள், குடும்பத்தினர் எவருக்கும் அறிவிக்காது மிகவும் இரகசியமாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் அஹ்னாப்

விளக்கமறியல் நீடிப்பு; 22 ஆம் திகதி வழக்கு மீள விசாரணைக்கு

0 627

எம்.எப்.எம்.பஸீர்

நவ­ர­சம் என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவில் நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இர­க­சி­ய­மாக கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். வார இறுதி நாட்­களில் மிக இர­க­சி­ய­மாக இந்த விடயம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 11ஆம் திகதி வெள்­ளி­யன்று, அஹ்னாப் ஜஸீம், தங்­காலை தடுப்பு நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு, மறு நாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து அவர் எதிர்­வரும் 22 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
இதன்­போது அவ­ருக்கு சட்ட உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள எந்த வாய்ப்பும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அத்­துடன் அஹ்னாப் ஜஸீமை நீதி­மன்றில் ஆஜர் செய்­வ­தாக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவு அவ­ரது சட்­டத்­த­ர­ணிக்கோ அல்­லது குடும்­பத்­தா­ருக்கோ கூட அறி­விக்­க­வில்லை எனவும், ஜன­நா­ய­கத்­துக்கு மிக விரோ­த­மாக இர­க­சி­ய­மான முறையில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வினர் இதனை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும், அஹ்னாப் ஜஸீமின் சட்­டத்­த­ரணி சஞ்­சய தெரி­வித்தார்.

அஹ்னாப் ஜஸீமின் குடும்­பத்தார் கடந்த சனிக்கிழமை அவ­ருடன் பேசு­வ­தற்­காக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தொலை­பே­சியில் அழைத்­துள்­ள­போதும், அப்­போது கூட ஒவ்­வொரு நேரத்தை கூறி பிறகு அழைக்­கு­மாறு தெரி­வித்­துள்­ள­துடன், நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­டு­வதை அவர்கள் மறைத்­துள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்நிலையில் எதிர்­வரும் 22 ஆம் திகதி மன்றில் விஷேட வாதங்­களை முன்வைக்க எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஏற்­க­னவே அஹ்னாப் ஜஸீமின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்­கத்தின் கீழ் அடிப்­படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பின்­ன­ணி­யிலும், சர்­வ­தே­சத்தின் கரி­சனை இவ்­வி­வ­கா­ரத்தில் குவிந்­துள்ள பின்­ன­ணி­யி­லுமே மிக இர­க­சி­ய­மாக அஹ்னாப் ஜஸீம் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

26 வய­தான கவிஞர் அஹ்னாப், கவி­ஞ­ரா­கவும் ஆசி­ரி­ய­ரா­கவும் செயற்­பட்டு வந்­த­துடன் அவர், பேரு­வளை ஜாமியா நளீ­மியா கலா­பீ­டத்தில் தனது கல்­வியை நிறைவு செய்­த­வ­ராவார்.

இந் நிலையில் கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில் வைத்து சி.ரி.ஐ.டி. வவு­னியா கிளை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கே.கே.ஜே. அனு­ர­சாந்­த­வினால் அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இதன்­போது அவ­ரது வீட்­டி­லி­ருந்து 50 இற்கும் அதி­க­மான நவ­ரசம் கவிதை தொகுப்பு புத்­த­கங்களும் மேலும் சில புத்­த­கங்­களும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.
முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதி­மன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்­தே­க­ந­ப­ரில்லை என நீதி­மன்றில் அறி­வித்­தி­ருந்தார்.

எனினும் அவ­ருக்கு எதி­ராக புதுக் கடை நீதிவான் நீதி­மன்றில் உள்ள வழக்­கொன்று தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை செய்­வ­தாக பிர­சாந்த ரத்­னா­யக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஊடாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
இவ்­வா­றான நிலையில் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கவிஞர் அஹ்னாப், தடுப்புக் காவலில் பெரும்­பா­லான நேரங்­களில் கை விலங்­கிட்டே வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், நித்­தி­ரைக்கு செல்லும் நேரம் கூட அவ்­வா­றான நிலை­யி­லேயே அவர் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில் கூறப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கைது செய்­யப்­படும் போது கூறப்­பட்ட கார­ணத்தை விட, தற்­போது, பேரு­வளை ஜாமியா நளீ­மியா கலா­பீ­­டத்தில் அடிப்­ப­டை­வாதம் போதனை செய்­யப்­பட்­ட­தாக ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கு­மாறு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அஹ்­னாபை சித்­தி­ர­வதை செய்­வ­தா­கவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தடுப்புக் காவலில் உள்ள அஹ்­னாபை அங்கு எலி கடித்­துள்­ள­தா­கவும் அவ­ருக்கு முறை­யான சிகிச்­சைகள் கூட அளிக்­கப்­ப­ட­வில்லை என அம்­ம­னுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே தடுப்புக் காவலில் இருந்த அஹ்னாப் மிக இர­க­சி­ய­மாக நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.Vidivelli

Leave A Reply

Your email address will not be published.