தீனுல் இஸ்லாத்தின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம்

0 202

பஸ்ஹான் நவாஸ்

புகழ்­பெற்ற இஸ்­லா­மிய அறி­ஞரும், ஆய்­வா­ளரும் ,பன்னூல் ஆசி­ரி­யரும், பன­மொ­ழித்­துறை நிபு­ணரும், ஆன்­மீக தலை­வ­ரு­மான கலா­நிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் முஸ்லிம் உலகில் தோன்­றிய சிறந்த அறி­ஞ­ராவார்.

தமிழ்­நாடு, இரா­ம­நா­த­புரம் மாவட்­டத்தின் கீழக்­க­ரையில் பிறந்த தைக்கா சுஐப் ஆலிம் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பட்­ட­தா­ரி­யாவார். இவர் அமெ­ரிக்­காவின் கொலம்­பியா பசுபிக் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர­லாற்றுத் துறையில் தனது முது­மாணி மற்றும் கலா­நிதிப் பட்­டங்­களைப் பூர்த்தி செய்தார்.

தமிழ்­நாட்­டிலும் இலங்­கை­யிலும் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்­லிம்கள் அரபு, அர­புத்­தமிழ், பார­சீகம், உருது ஆகிய மொழிகள் மற்றும் கல்வி, இலக்­கியத் துறை­க­ளுக்கு வழங்­கிய பங்­க­ளிப்­புக்கள்” என்ற தலைப்பில் 30 வருட ஆராய்ச்­சியின் பின்னர் 880 பக்­கங்­களைக் கொண்ட ஆய்­வு­நூலை வெளி­யிட்டார். இந்­தி­யாவின் 9ஆவது பிர­தமர் கலா­நிதி சங்கர் தயால் சர்மா 1993 ஆம் ஆண்டு இந்த ஆய்­வு­நூலை வெளி­யிட்டு வைத்தார். சார்க் அமைப்பின் அரச தலை­வர்­க­ளாலும் இந்த ஆய்வு நூல் பின்னர் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

சிறந்த அரபு அறி­ஞ­ருக்­கான “இந்­தி­யாவின் தேசிய” விருதை இரண்டு தட­வைகள் வென்ற தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள், உலகின் செல்­வாக்கு மிக்க 500 முஸ்­லிம்­களின் பட்­டி­ய­லிலும் தொடர்ச்­சி­யாக இடம்­பி­டித்து வந்தார். பத்­துக்கும் அதி­க­மான புத்­த­கங்­ளையும், 15 இற்கும் அதி­க­மான ஆய்­வுக்­கட்­டு­ரை­க­ளையும் அவர் எழு­தி­யுள்ளார்.

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவைக்கு மூன்று தசாப்­த­க­ளுக்கு மேலாக அவர்கள் பங்­க­ளிப்பு வழங்­கி­யி­ருந்­தார்கள்.

நீண்ட கால­மாக ஆன்­மீகத் தலை­வ­ராக இருந்து இன ஒற்­று­மை­களை வலுப்­ப­டுத்த அவர் வழங்­கிய பங்­க­ளிப்­புக்கள் மகத்­தா­னவை.

அவர்­களின் குடும்­பத்­த­வர்­களே இலங்­கையில் அதி­க­ள­வி­லான பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்­தார்கள். அவர்­களின் முப்­பாட்­ட­னா­ரான மாப்­பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் 360 பள்­ளி­வா­சல்­க­ளையும் தைக்­காக்­க­ளையும் நிர்­மா­ணித்­த­தாக வர­லா­றுகள் கூறு­கின்­றன.

கடல் வர்த்­தகம், முத்து வியா­பாரம், மாணிக்­கக்கல் வர்த்­தகம் என்­ப­ன­வற்றில் இவர்­க­ளது குடும்­பத்­தினர் பிர­பலம் பெற்று விளங்­கி­னார்கள். சுஐப் ஆலிம் அவர்கள் தனது சொந்தச் செலவின் மூலமே சகல பணி­க­ளையும் நிறை­வேற்­றி­ய­தோடு, இலங்­கையின் பல்­வேறு பள்­ளி­வா­சல்­க­ளையும் நிர்­மா­ணிப்­ப­தற்கு தேவை­யான நிதி உத­வி­களை சொந்த நிதியில் இருந்தே வழங்­கி­யமை சிறப்­பம்­ச­மாகும்.

இவர்கள் இலங்கை மற்றும் தமிழ்­நாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்­லிம்கள் ஆற்­றிய சேவை­களை ஆவ­ணப்­ப­டுத்­து­வ­தற்­காக வழங்­கி­யி­ருக்­கின்ற சேவை­களை காலம் சென்ற கலா­நிதி எம்.ஏ.எம் சுக்ரி பல்­வேறு இடங்­க­ளிலும் சிலா­கித்துப் பேசி­யுள்ளார். மறைந்து சென்­று­கொண்­டி­ருந்த தமிழ் பேசும் முஸ்­லிம்­களின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தி அவற்றை நூல் வடிவில் கொண்டு வரு­வ­தற்­காக இவர்கள் தனது வாழ்­நாளில் பெரும்­பா­லான பகு­தியை செல­விட்­டார்கள் என்றும் முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலான தனது வாழ்­நாளை இதற்­காக தியாகம் செய்­தார்கள் என்றும் கலா­நிதி சுக்ரி அவர்கள் அடிக்­கடி நினை­வு­கூர்ந்­துள்ளார்.

இவ­ரது முப்­பாட்­டனார் எழு­திய அரபு இலக்­கிய செறிவும் நிறைந்த எடின்­பரோ போன்ற சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட ஜலா­லிய்யா ராதீபை கலா­நிதி சுஐப் ஆலிம் கோவை செய்து வெளி­யிட்­ட­தோடு இது­வரை 5 இலட்­சத்­துக்கும் அதி­க­மான பிர­திகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இதே­வேளை கலா­நிதி தைக்கா சுஐப்­ஆலிம் எழு­திய முன்­ஜியாத் என்ற நூலா­னது இது­வரை 35,000 பிர­திகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ள­மையும் சிறப்­பம்­ச­மாகும்.

ரூஸிய்­யதுல் காதி­ரிய்யா ஆன்­மீக அமைப்பின் தலை­வ­ராக இருந்து இலங்கை இந்­தியா, மியன்மார், மலே­சியா, சிங்­கப்பூர், ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், இந்­தோ­னே­சியா, அமெ­ரிக்கா, ஐரோப்பா கிழக்­கா­பி­ரிக்கா போன்ற நாடு­களில் தீனுல் இஸ்­லாத்தின் பர­வ­லுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டார்கள்.

மியன்மார், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தனது சொந்தச் செலவில் அவர்கள் பள்ளிவாசல்களை நிர்மாணித்துள்ளார்கள்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவதற்காக தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் மேற்கொண்ட பணிகளை கௌரவிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.Vidivelli

Leave A Reply

Your email address will not be published.