கட்­டாய தகனம் அமு­லி­லி­ருந்த காலப்­ப­கு­தியில் 101 முஸ்­லிம்கள் கொவிட் தொற்றால் உயி­ரி­ழப்பு

தகவல் அறியும் உரி­மையின் கீழ் கிடைக்கப் பெற்ற சுகா­தார அமைச்சின் தர­வுகள் கூறு­கின்­றன

0 187

றிப்தி அலி

கொவிட் 19 தொற்று கார­ண­மாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் மொத்த எண்­ணிக்கை 178 ஆகும் என சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் நோக்கும் போது கொவிட் சட­லங்­களை கட்­டாய தக­னத்­திற்­குட்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறி­வித்தல் அமு­லி­லி­ருந்த 2021 பெப்­ர­வரி 25 ஆம் திகதி வரை 101 முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

சுகா­தார அமைச்­சிற்கு மேற்­கொள்­ளப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்தின் ஊடாக இந்த தகவல் தெரிய வந்­தது.

கொவிட் – 19 மர­ணங்கள் தொடர்பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்கு சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரி­வினால் வழங்­கப்­பட்ட பதிலில் காணப்­பட்ட தர­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த விடயம் கண்­ட­றி­யப்­பட்­டது.

கடந்த 2020.03.28ஆம் திகதி நாட்டில் முத­லா­வது கொவிட் – 19 மரணம் பதி­வா­கி­யது. சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் தர­வு­களின் பிர­காரம், 2020.03.28 முதல் 2021.04.30ஆம் திகதி வரை­யான ஒரு வருட காலப் பகு­திக்குள் 678 பேர் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இதில் 390 சிங்­க­ள­வர்­களும், 178 முஸ்­லிம்­களும், 99 தமி­ழர்­களும், 4 பறங்­கி­யர்­களும், ஏழு வெளி­நாட்­ட­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர் என என தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவு தெரி­விக்­கி­றது.

இவர்­களில் 428 ஆண்­களும் 250 பெண்­களும் இக் காலப் பகு­திக்குள் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இதே­வேளை, கடந்த பெப்­ர­வரி 25ஆம் திகதி சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்­னி­யா­ராச்­சி­யினால் வெளி­யி­டப்­பட்ட 2216/38ஆம் இலக்க அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­களின் கட்­டாய தகனம் நிறுத்­தப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து, ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைக்­குட்­பட்ட மஜ்மா நகரில் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்கள், அவர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­களின் விருப்­பத்தின் பிர­காரம் அடக்கம் செய்ய சுகா­தார அமைச்சு அனு­ம­தித்­தது.

இதற்­கி­ணங்க, கடந்த மார்ச் 5ஆம் திகதி முதல் இன்று வரை கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்கள் மஜ்மா நகரில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றனர்.

இதற்­க­மைய “கடந்த 2021 மார்ச் 5ஆம் திக­தி­யி­லி­ருந்து 2021 ஏப்ரல் 30ஆம் திகதி வரை­யான காலப் பகு­தியில் கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்த 84 பேர் மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்” என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் செய­லாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரி­வித்தர்.

இதில், 77 முஸ்­லிம்­களும், 2 சிங்­க­ள­வர்­களும், 3 பறங்­கி­யர்­களும், 2 தமி­ழர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்” என அவர் மேலும் குறிப்­பிட்டார்.


மேற்குறிப்பிட்ட தரவுகளுக்கு அமைய, 2020.03.28ஆம் திகதி முதல் 2021.02.25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கொவிட் – 19 காரணமாக உயிரிழந்த 101 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.