கொவிட் 19 தொற்று மூன்றாவது அலை: முஸ்லிம் சமூகத்தில் மரண வீதம் அதிகரிப்பு

செயற்திறன் மிக்க முன்னெச்சரிக்கை தேவை என முஸ்லிம் சிவில் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்து

0 408

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் 19 வைரஸ் தொற்று கார­ண­மாக முஸ்லிம் சமூ­கத்தில் மரண வீதம் அதி­க­மாக காணப்­ப­டு­வது தொடர்பில் கவலை வெளி­யிட்­டுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள், மஸ்ஜித் நிர்­வா­கிகள் தங்கள் பிர­தே­சத்­திலும் மாவட்ட மட்­டத்­திலும் கொவிட் 19 பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு செயற்­திறன் மிக்க முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டு­மெ­னவும், அந்­தந்த பகு­தி­களில் வைரஸ் பர­வு­வது குறித்து தொடர்ந்தும் விழிப்­புடன் இருக்க வேண்­டு­மெ­னவும் கூட்­டாக வேண்­டுகோள் விடுத்­துள்­ளன.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, தேசிய சூரா கவுன்ஸில், சூபி தரீக்­காக்­களின் சுப்ரீம் கவுன்ஸில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், ஸ்ரீ லங்கா ஜமா­அத்தே இஸ்­லாமி, மர்கஸ் இஸ்­லா­மிய நிலையம், சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலையம், அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்­னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ளனம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் பெண்கள் அமைப்பு, இஸ்­லா­மிய கற்கை நிலையம், அனைத்து பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மாணவர் அமைப்பு, ஸம்ஸம் பவுண்­டேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் சிவில் சமூகம், ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்­புரி சங்கம், கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், ஸ்ரீ லங்கா மலே அமைப்பு, ஸ்ரீ லங்கா மேமன் அமைப்பு, முஸ்லிம் பெண்கள் கற்கை வட்டம் உட்­பட பல சிவில் சமூக அமைப்­புகள் இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ளன.

கூட்­டாக விடுக்­கப்­பட்­டுள்ள வேண்­டு­கோளில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ‘கொவிட் 19 தொற்று ஏற்­பட்டால் அதை உட­ன­டி­யாக பொது சுகா­தார அதி­கா­ரி­க­ளுக்கு (PHI) அறி­விக்க வேண்டும். அத்­தோடு அது சம்­பந்­த­மாக சுகா­தார அமைச்சினால் வழங்­கப்­பட்­டுள்ள அறி­வு­றுத்­தல்­களை கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்டும். அல்­லாஹ்வின் பக்கம் மீண்டு, தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் இந்­நி­லை­மையை சீராக்­கவும், நாமும் நமது நாடும் இயல்பு நிலைக்கு திரும்­பவும் பிரார்த்­தனை செய்ய வேண்டும்.
கொவிட் 19 தொற்றின் மூன்­றா­வது அலை மிகவும் ஆபத்­தா­ன­தாக காணப்­ப­டு­கி­றது. அதன் கார­ண­மாக ஒவ்­வொரு நாளும் மர­ணங்கள் அதி­க­ரித்த வண்ணம் இருக்­கின்­றன. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தில் மரண வீதம் அதி­க­மாக காணப்­ப­டு­வது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

நிலைமை ஒவ்­வொரு நாளும் தீவி­ர­ம­டைந்து வரும் கார­ணத்­தினால் கொவிட் 19 னால் ஏற்­படும் ஜனா­ஸாக்­களின் வீதத்­தையும் புள்­ளி­வி­ப­ரங்­க­ளையும் கவ­னத்தில் கொண்டு, இவ்­வி­ட­யத்தில் மிக அக்­க­றை­யு­டனும், விழிப்புடனும் இருக்குமாறு அனைவரிடமும் அன்பாக வேண்டுகிறோம்.

முஸ்லிம் சமூகத்தை தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு வேண்டிக் கொள்கிறோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.