நோன்பு நோற்ற நிலையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த இந்துக்களின் இறுதிச் சடங்கை நிறைவேற்றும் முஸ்லிம்கள்

0 332

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­றி­ருக்கும் நிலையில் முஸ்­லிம்கள் குழு­வொன்று கொவிட்- 19 தொற்­றினால் உயி­ரி­ழந்த இந்­துக்கள் மற்றும் முஸ்­லிம்­களின் இறுதி சடங்­கு­களை நிறை­வேற்றி வரு­வ­தாக டைம்ஸ் ஒப் இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

33 வய­து­டைய இம்தாத் இமாமும் அவ­ரது 22 பேர் கொண்ட குழு­வி­னரும் இது­வரை ஏழு இந்­துக்­களின் சட­லங்­களை தகனம் செய்­துள்­ள­தோடு 30 ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கும் உத­வி­யுள்­ளனர்.

இக் குழ­ுவி­லுள்­ள­வர்கள் 30–-35 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் என்­ப­தோடு மெஹ்தி ராஸா, காசிம் அப்பாஸ், ஆஷிர் ஆக்ஹா, அஹ்ஸன் நசீர் மற்றும் மெராஜ் ஹுசைன் ஆகியோர் மிகவும் துடிப்­பு­மிக்­க­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

கவச ஆடை­யினை அணி­வதால் ஏற்­படும் அசௌ­க­ரி­யத்தை சகித்­துக்­கொண்டு, தொற்­று­நோயால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய ஆபத்து இருந்­த­போ­திலும் அவர்கள் தன்­ன­ல­மற்ற சேவையைச் செய்து வரு­கின்­றனர்.

ரமழான் காலத்தில் இந்த பணி கடி­ன­மாக இல்­லையா என வின­வி­ய­போது அதற்கு பதி­ல­ளித்த இம்தாத் இமாம் ‘சில நேரங்­களில், கவச ஆடையில் காற்­றோட்டம் இல்­லா­ததால் அது கடி­ன­மாக இருப்ப­தோடு மூச்சுத் திண­றலும் ஏற்­படத் தொடங்­கு­கி­றது. எங்­களுள் ஒருவர் இன்று சரிந்து விழுந்தார்; எனினும் பின்னர் எழுந்து தனது பணி­யினைத் தொடர்ந்தார்’ எனத் தெரி­வித்தார்.

‘பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு குடும்பம் இல்லை, அல்­லது அவர்­க­ளது உற­வி­னர்கள் ஊரில் இல்லை. சில சந்­தர்ப்­பங்­களில், குடும்ப உறுப்­பி­னர்கள் உடல்­நிலை சரி­யில்­லாமல் இருந்­தனர், ஒரு சந்­தர்ப்­பத்தில் அண்டை வீட்­டாரால் ஒரு உடல் பற்றி எங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது’ என கடந்த வருடம் தனது கொவிட் -19 தட்பீன் (அடக்கம்) குழு­வுடன் கண்­ணி­ய­மான இறுதிச் சடங்­கு­களை உறு­திப்­ப­டுத்த ஆரம்­பித்த இமாம் தெரி­வித்தார்.

கடந்த ஏப்ரல் 21 அன்று, தனி­யாக வசித்து வந்த பெண் ஒருவர் கொவிட்- 19 தொற்று கார­ண­மாக இறந்­து­விட்­ட­தா­கவும், உடல் மூன்று நாட்கள் கவ­னிப்­பா­ரற்றுக் கிடப்­ப­தா­கவும் வந்­தது. பாரத் நகரின் சீதாபூர் வீதியில் இருந்து அவர்­க­ளுக்கு அழைப்­பொன்று வந்­தது.

மேல் மாடியில் வாட­கைக்கு வசித்­து­ வந்­த­வர்கள் கடந்த மூன்று நாட்­க­ளாக அப் பெண்­ம­ணியைக் காண­வில்லை என்றும் எந்த வித சத்­தமும் வர­வில்லை என்றும் துர்­வாடை வீச ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர்.

‘குடும்ப உறுப்­பி­ன­ர்கள் எவரும் இல்லை. எனவே, அயலவர் ஒருவரின் உதவியுடன், உடலை ஒரு பிரேதப் பையில் பொதி செய்து பைக்கூந்த் தாமிற்கு எடுத்துச் சென்று லக்னோ மாநகர சபை ஊழியர்களிடம் தகனத்திற்காக ஒப்படைத்தோம்’ என இமாம் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.