பௌத்த சிங்கள சினேக மனோபாவம் இஸ்லாமோபோபியாவாகியது ஏன்?

0 92

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

சென்ற வார தொடர்ச்சி…

பௌத்­தர்­களின் புண்­பட்ட நெஞ்சம்
சிங்­கள பௌத்­தர்கள் இலங்­கையில் மட்­டுமே வாழ்­கின்­றனர். அவர்கள் பேசும் சிங்­கள மொழியும் உலகில் வேறெங்கும் பேசப்­ப­டு­வ­தில்லை. ஆகவே, இலங்­கையை சிங்­கள பௌத்த நாடா­கவே ஆதி­கா­லத்­தி­லி­ருந்து அவர்கள் கருதி வந்­தனர். எனினும் மற்ற இனத்­த­வர்கள் தம்­மி­டையே வாழு­வதை அவர்கள் நிரா­க­ரிக்­க­வில்லை. இந்­துக்­களின் யாழ்ப்­பாண இராச்­சி­யம்­கூட பௌத்­தத்­துக்கு எதி­ராக உரு­வா­க­வு­மில்லை, இயங்­க­வு­மில்லை. இந்து சம­யத்­துக்கும் பௌத்த சம­யத்­துக்கும் இடை­யே­யுள்ள வர­லாற்றுத் தொடர்பு இதற்­கொரு கார­ண­மாக இருக்­கலாம். ஆனால் பதி­னாறாம் நூற்­றாண்டு தொடங்கி சுமார் நாலரை நூற்­றாண்­டு­க­ளாக போத்­துக்­கீசர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் என்று மாறி­மாறி மேற்கு நாட்­டவர் இலங்­கையைக் கைப்­பற்றி ஆண்­ட­மையும் அவர்­களின் கிறிஸ்­தவ சம­யத்­துக்கு அர­சாங்கம் முத­லிடம் வழங்கி அதன் வளர்ச்­சிக்கு உத­வி­ய­ளித்­த­மையும், பௌத்­தர்­களை மத­மாற்றஞ் செய்­த­மையும், அதனால் பௌத்­தமும் பௌத்­தர்­களும் ஆட்­சியின் ஓரத்­துக்குத் தள்­ளப்­பட்­ட­மையும் பௌத்த சிங்­கள மக்­களின் மனதில் ஏற்­பட்ட ஆறாப் புண்கள். இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­க­ளெல்லாம் கிறிஸ்­தவ அர­சுக்கு உட்­பட்­டி­ருக்க, 1815 வரை கண்டி இராச்­சியம் மட்டும் பௌத்­தத்தின் ஒரே­யொரு பாது­கா­வ­ல­னாக விளங்­கி­யது. ஆனால் அந்த வருடம் கண்டி இராச்­சி­யமும் பிரித்­தா­னியர் கைவசம் சிக்க, பௌத்­தமும் பௌத்த சிங்­க­ள­வர்­களும் அர­சியல் அநா­தை­க­ளா­யினர். இந்த உண்­மையை யாரும் மறுக்க முடி­யாது.

என­வேதான் இந்த அடிமை நிலை­யி­லி­ருந்து விடு­படும் நோக்­கத்­துடன் 19ஆம் நூற்­றாண்டின் இறு­திப்­ப­கு­தியில் அந­கா­ரிக தர்­ம­பா­லவின் தலை­மையில் ஒரு பௌத்த விழிப்­பி­யக்கம் ஆரம்­ப­மா­கிற்று. அந்த விழிப்­பி­யக்­கத்தின் ஒரு துர­திஷ்ட விளைவே 1915ஆம் ஆண்டுக் கல­வரம். அந்தக் கல­வரம் வெகு­சீக்­கி­ரத்தில் அடக்­கப்­பட்டு 1948இல் சுதந்­திரம் கிடைக்­கும்­வரை பௌத்­தர்கள் பொறு­மை­யுடன் இருந்­தனர்.

சுதந்­தி­ரத்­திற்குப் பின் நிறு­வப்­பட்ட நாடா­ளு­மன்ற ஜன­நா­யக ஆட்­சி­முறை பௌத்­தர்­க­ளுக்குக் கிடைத்த ஓர் அர­சியல் வரப்­பி­ர­சாதம். அர­சாங்கம் அவர்­களின் கைக­ளுக்­கு­மாற பௌத்தம் ஒரு புதிய உத்­வே­கத்தை அடைந்­தது. அந்நி­ய­ராட்­சியில் இது­வரை இழந்­த­வற்றை வட்­டி­யுடன் திருப்­பிப்­பெறும் நோக்­கி­லேயே அர­சியல் பௌத்தம் ஆரம்­ப­மா­கி­யது. அந்நி­­யரால் ஏற்­பட்ட காயங்­களை ஆற்றும் நேர­மா­கவே சுதந்­தி­ரத்தை அர­சியல் பௌத்தம் கணித்­தது. அதன் வர­லாற்றை ஏற்­க­னவே கடந்த வாரம் வெளி­வந்த கட்­டுரை விளக்­கி­யது.

பௌத்­தமும் பௌத்­தர்­க­ளுமே இலங்­கையை ஆள­வேண்டும் என்ற கொள்­கையை எல்லா பௌத்த அர­சியல் தலை­வர்­களும் வெளிப்­ப­டை­யா­கவோ மறை­மு­க­மா­கவோ ஆத­ரித்­தனர். அர­சியல் பிக்­குகள் அவர்­களை இயக்கத் தொடங்­கினர். இந்த நோக்­கத்தின் வெளிப்­பா­டா­கவே 1948 இல் நிறை­வேற்­றப்­பட்ட பிர­ஜா­வு­ரிமைச் சட்டம், 1957இன் சிங்­கள மொழி மட்டும் மசோதா, அதற்­குப்பின் அமு­லாக்­கப்­பட்ட சிங்­களக் குடி­யேற்றத் திட்­டங்கள், பல்­க­லைக்­க­ழகப் பிர­வே­ச­முறை மாற்­றங்கள் என்­ப­ன­வெல்லாம் அடுக்­க­டுக்­காக அர­சாங்­கங்­களால் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

ஆனால், இந்த வளர்ச்­சிக்கு ஒரு முட்­டுக்­கட்­டை­யாக பௌத்­தர்­க­ளுக்குத் தென்­பட்­டது தமி­ழர்­களின் மொழிப் போராட்­டமும் சமஷ்டி அரசுக் கோரிக்­கையும். தமி­ழர்­களின் போராட்­டத்தின் ஜன­நா­யக உரி­மை­க­ளையும் நியா­யங்­க­ளையும் உதறித் தள்­ளி­விட்டு, வெண்ணெய் திரளும்போது சட்­டியே உடை­வ­துபோல் பௌத்த அர­சி­யல்­வா­திகள் தமி­ழர்­களின் கோரிக்­கை­களை நோக்­க­லா­யினர். அந்நி­யர் ஆட்­சிக்­குமுன் இருந்த பௌத்­தர்­களின் தனிப்­பட்ட இராச்­சி­யங்கள் அந்நி­­யரால் பறி­போ­ன­து­போன்று தமி­ழர்­க­ளுக்­கி­ருந்த தனிப்­பட்ட ஒரு யாழ்ப்­பாண இராச்­சி­யமும் பறி­போ­னதும் அதனால் பௌத்­தர்­க­ளுக்­கேற்­பட்ட அதே மனப்­புண்கள் தமி­ழர்­க­ளுக்கும் ஏற்­பட்­டி­ருக்கும் என்­ப­தையும் புதிய பௌத்த அர­சியல் தலை­வர்கள் உணர மறந்­தனர். அதற்குப் பதி­லாக, பௌத்­தத்தின் மறு­ம­லர்ச்­சிக்கும் பௌத்­தர்­களின் ஆதிக்­கத்­துக்கும் தமி­ழி­னமே ஓர் இடைஞ்சல் என்ற எண்ணம் சாதா­ரண பௌத்த மக்கள் மனதில் விதைக்­க­ப்­ப­ட­லா­யிற்று. இந்தத் தவ­றுதான் ஈற்றில் கால்­நூற்­றாண்டுப் போரொன்­றையே உரு­வாக்­கி­யது. அந்தப் போர் சுமார் பத்து நூற்­றாண்­டு­க­ளுக்கு முன் தமிழ் நாட்­டி­லி­ருந்து தோன்­றிய பல்­லவ சோழர் படை­யெ­டுப்­பு­களை மீண்டும் பௌத்­தர்­களின் ஞாப­கத்­துக்குக் கொண்­டு­வ­ர­லா­யிற்று. ஏற்­க­னவே புண்­பட்ட நெஞ்­சங்கள் மேலும் பயம் கொள்­ள­லா­யின.

2009 இல் முடி­வுற்ற போர் பௌத்­தர்­க­ளுக்குச் சாத­கமாய் அமைந்­தது. பௌத்த படைகள் தமி­ழீழப் புலி­களின் படையை முற்­றாகத் தோற்­க­டித்து வெற்­றி­யீட்­டி­யமை பௌத்­தர்­க­ளுக்கு நினைக்­கொ­ணாத ஒரு பெரு­மி­தத்­தையும் ஒரு புதிய திட­சங்­கற்­பத்­தையும் கொடுத்­தது. இனிமேல் எவ­ருமே பௌத்­தத்தின் ஆட்­சி­யையும் பௌத்­தர்­களின் அதி­கா­ரத்­தையும் இலங்­கையில் அசைக்க முடி­யாது என்ற ஒரு பெரு­மி­தமும், அந்த நிலை­மையை இனிமேல் எச்­சந்­தர்ப்­பத்­திலும் இழக்­கக்­கூ­டாது என்ற ஒரு திட­சங்­கற்­பமும் பெரும்­பான்மை இனத்­த­வ­ரி­டையே குடி­கொள்ளத் தொடங்­கிற்று. அதற்­காக அந்நி­யர் நுழைத்­து­விட்டுச் சென்ற ஜன­நா­யக ஆட்­சி­முறை ஓர் இடைஞ்­ச­லாக இருந்தால் அதையும் தூக்­கி­யெ­றிய அவர்கள் தயா­ரா­கினர். புண்­பட்ட நெஞ்­சங்கள் புது யுகம் காணத்­து­டித்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஆனால் அதற்­கி­டையில் எதிர்­பா­ராத ஒரு கோணத்­தி­லி­ருந்து புதி­ய­தொரு அச்சம் பௌத்­தர்­களின் மனதை வாட்டத் தொடங்­கி­யது. இஸ்­லா­மோ­போ­பி­யாவின் ஆரம்­பத்தை இங்­கேதான் காண வேண்டும்.

தனித்­து­வத்தைத் தேடித்
தனி­மை­யான முஸ்­லிம்கள்
ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக பௌத்த சிங்­கள மக்­க­ளுடன் இரண்­ட­றக்­க­லந்து வாழ்ந்த முஸ்­லிம்­களின் மத்­தியில் 1980களி­லி­ருந்து சில மாற்­றங்கள் தோன்­ற­லா­யின. இவற்றை உல­க­ளா­விய மாற்­றங்கள் என்றும் கூறலாம். இம்­மாற்­றங்­களை வர­லாற்றின் அடிப்­ப­டையில் விளங்­கு­வது அவ­சியம்.

இலங்­கையின் உள்­நாட்டுப் போர் நடை­பெற்ற அதே காலப்­ப­கு­தியில் முஸ்லிம் உல­கிலும் ஒரு புதிய தாகம் தோன்­ற­லா­யிற்று. உலகின் அநீ­தி­களும் துன்­பங்­களும் தீர­வேண்­டு­மானால் அதற்கு ஒரே வழி இஸ்­லாமே. இஸ்­லாத்தின் அடிப்­ப­டை­யி­லேயே ஒரு புதிய உலக ஒழுங்கு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற தாகம் குறிப்­பாக இளைய தலை­முறை முஸ்­லிம்­க­ளி­டையே வளரத் தொடங்­கி­யது. இந்தத் தாகம் வளரக் கார­ணமாய் அமைந்த கார­ணி­களுள் இரண்டு முக்­கி­ய­மா­னவை. ஒன்று, 1979இல் ஈரானில் ஏற்­பட்ட புரட்சி. மற்­றது அரபு நாடு­களில் எண்ணெய் வளம் குவித்த பணச்­செல்வம். பொரு­ளா­தாரப் பலமும் இஸ்­லா­மிய தத்­து­வமும் இணைந்தால் உல­கத்­தையே சொர்க்­க­மாக்­கலாம் என்ற ஓர் துடிப்பும் உணர்வும் இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டையே துளிர்­வி­ட­லா­யின.

ஈரா­னியப் புரட்சி ஒரு முஸ்லிம் நாட்டில் நடை­பெற்ற புரட்சி என்­பதால் அது ஓர் இஸ்­லா­மியப் புரட்­சி­யா­காது. நசுக்­கப்­பட்ட மக்கள் ஒன்­று­தி­ரண்டு அரா­ஜ­கத்­துக்கு எதி­ராகக் கொதித்­தெ­ழுந்து தன்­னிச்­சை­யுடன் படைத்த அர­சியற் காவியம் அது. அக்­கா­வி­யத்தின் தலை­வ­னாக ஆயத்­துல்லா கொமைனி உரு­வா­னது ஒரு சதி. எனவே அதனை இஸ்­லா­மியப் புரட்­சி­யென அழைப்­பது பொருந்­தாது. எனினும், அது அமெ­ரிக்­காவின் செல்­லப்­பிள்­ளை­யாக அமர்ந்து ஈரானின் இஸ்­லா­மிய பாரம்­ப­ரி­யத்­தையும், அதன் விசேட விழு­மி­யங்­க­ளையும், மக்­களின் நல­னையும் புறக்­க­ணித்து ஆட்­சி­செய்த மன்னர் ஷாவினைத் துரத்­தி­ய­டித்து அமெ­ரிக்­கா­வுக்குப் பாடம் கற்­பித்த ஒரு மகத்­தான சாதனை. அந்தப் புரட்­சியின் தாக்கம் அமெ­ரிக்க ஆத­ரவில் ஆட்சி நடாத்­திய அத்­தனை மத்­திய கிழக்கு முஸ்லிம் மன்­னர்­க­ளுக்கும் தலைவர்களுக்கும் ஓர் எச்­ச­ரிக்­கை­யாக அமைந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஆனால், ஈரானின் புதிய தலைவர் கொமைனி அந்தப் புரட்­சியை ஏனைய மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்யத் துணிந்­ததும் அது அமெ­ரிக்­கா­வையே கதி­க­லங்கச் செய்­தது.

ஏனெனில் அமெ­ரிக்­காவே கட்­டி­யெ­ழுப்­பிய மத்­தி­ய­கி­ழக்கு ராஜ­தந்­திர ஒழுங்கு புரட்­சி­யினாற் சித­று­மாயின் அதன் விளை­வுகள் பார­தூ­ர­மாக அமை­வது திண்ணம். எனவே ஈரா­னியப் புரட்­சியின் பர­வ­லையும் தாக்­கத்­தையும் எவ்­வ­ழி­யி­லா­வது தடுப்­ப­தற்குப் பரி­காரம் தேடின அமெ­ரிக்­காவும் அதன் மேற்­கு­லக நேச­நா­டு­களும். அந்தப் பரி­கா­ரத்தை சவூதி அரே­பி­யாபின் வ­ஹா­பித்­துவம் வழங்­கி­யது. – Vidivelli
(தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.