உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரியே பொறுப்பு

சி.ஐ.டி.யில் வாக்­கு­மூ­ல­ம­ளித்தபின் ரிஷாத் தெரி­விப்பு

0 744

தனது கொலை சதி­மு­யற்சி தொடர்பில் நாமல் குமா­ரவின் குரல் வழிப்­ப­திவு வெளி­வந்த பின்­னரும் தமக்­கி­ருந்த பாது­காப்பு வெகு­வாக குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் பட்­சத்தில் பாது­காப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு பொறுப்­பா­ன­வ­ரென்ற வகையில் ஜனா­தி­ப­தியே அதற்கு வகை­சொல்ல வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

நேற்றுக் காலை குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் அழைப்­புக்­கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்­சதி முயற்சி தொடர்பில் வாக்­கு­மூலம் வழங்­கிய பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்துத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மற்றும் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷவை கொலை செய்ய சதி செய்­யப்­பட்­ட­தாக ஊட­கங்கள் மூலம் தெரி­வித்த நாமல் குமார, பின்னர் அம்­பாறை – மட்­டக்­க­ளப்பில் வைத்து என்­னையும் கொலை செய்யத் திட்­ட­மிட்­ட­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்பில் எமது கட்­சியின் தவி­சாளர், செய­லாளர் உட்­பட எம்.பிக்கள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறை­யிட்­டி­ருந்­தனர்.
வடக்கில் நீண்­ட­கா­ல­மாக அர­சியல் செய்­ப­வ­னென்ற வகை­யிலும் கெபினட் அமைச்­ச­ரென்ற வகை­யிலும், கட்சித் தலை­வ­னென்ற வகை­யிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
-VIdiveli

Leave A Reply

Your email address will not be published.