உதவும் கரங்களே உயர்ந்த கரங்கள்.

0 802

நீங்கள் அல்­லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்­பிக்கை கொள்­ளுங்கள். மேலும் அவன் உங்­களை (எந்த சொத்­துக்கு) பின்­தோன்­றல்­க­ளாக ஆக்­கி­யுள்­ளானோ அதி­லி­ருந்து (அல்­லாஹ்­வுக்­காக) செலவு செய்­யுங்கள். ஏனெனில் உங்­களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்­லாஹ்­வுக்­காகச்) செலவும் (தானம்) செய்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு (அவ­னிடம்) மகத்­தான கூலி இருக்­கி­றது. (57:7)

அபூ மூஸா அல்­அஷ்­அரீ (ரலி) அறி­வித்­தார்கள்: ‘தர்மம் செய்­வது எல்லா முஸ்­லிமின் மீதும் கட­மை­யாகும்’ என்று இறைத்­தூதர்(ஸல்) அவர்கள் கூறி­னார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்­க­வில்­லை­யானால்?’ என்று கேட்­டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பய­ன­டைவார்; தர்மம் செய்(து பிற­ரையும் பய­ன­டையச் செய்)வார்’ என்று கூறி­னார்கள். மக்கள், ‘அவ­ருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்­லை­யானால்’ அல்­லது ‘அதை அவர் செய்­யா­விட்டால்’ (என்ன செய்­வது?)’ என்று கேட்­டனர். நபி(ஸல்) அவர்கள், ‘பாதிக்­கப்­பட்ட தேவை­யா­ளிக்கு அவர் உத­வட்டும்’ என்­றார்கள். மக்கள், ‘(இதை இய­லா­மை­யாலோ சோம்­ப­லி­னாலோ) அவர் செய்­ய­வில்­லை­யானால் (என்ன செய்­வது?)’ என்று கேட்­டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்­போது அவர் ‘நல்­லதை’ அல்­லது நற்­செ­யலை'(ச் செய்­யும்­படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்­றார்கள். ‘(இதையும்) அவர் செய்­யா­விட்டால்?’ என்று கேட்­ட­தற்கு, நபி(ஸல்) அவர்கள், ‘அவர் தீங்கு செய்­யாமல் இருக்­கட்டும். அதுவே அவ­ருக்கு தர்மம் ஆகும்’ என்­றார்கள். நூல் : புகாரி 6022.

தர்மம் செய்தல் என்­பது நமது பணத்தால் பொரு­ளா­தா­ரத்தால் பிற­ருக்கு வழங்­கு­வது மாத்­தி­ர­மல்ல, அதையும் தாண்டி நமது சமூ­கத்தில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற பொரு­ளா­தார, அறிவு, ஆன்­மிக, பண்­பாட்டு வறுமை போன்­ற­வற்றை நீக்க உழைப்­பதும் மிகப்­பெரும் தர்­ம­மாகும். எல்­லோரும் எல்லா நேரங்­க­ளிலும் இறைவன் தமக்கு வழங்­கிய அருட்­கொ­டை­களை அவ­னுக்­காக பயன்­ப­டுத்­து­வது, அதனை பிற­ருக்கு பகிர்ந்­த­ளிப்­பது மிகப்­பெரும் தர்­ம­மாகும்.

கொடை கொடுப்­ப­திலே மிகச் சிறந்த கொடை கற்ற கல்­வியை பிற­ருக்கு கற்றுக் கொடுப்­ப­தாகும், செல்­வத்தைக் கொடை­யாக கொடுப்­பதை விடவும் பிற­ருக்கு கல்­வி­யூட்­டு­வதே மிகச் சிறந்த கொடை­யாகும் என ஷைஹுல் இஸ்லாம் இப்னுல் கையிம் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் கூறி­யுள்­ளார்கள். நூல் -மதா­ரிஜுஸ் ஸாலிஹீன் – (2/281)
ஏனெனில் செல்­வங்­களில் மிகப் பெரும் செல்வம் கல்விச் செல்­வமே..அதி­லி­ருந்து எமக்கு முடி­யு­மான வழி­மு­றை­க­ளி­னூ­டாக பிற­ருக்கு வழங்க முயற்­சிக்க வேண்டும். பிற­ருக்கு கற்­பிக்­கப்­படும் ஒவ்­வொரு அம்­சமும் அவர்­க­ளது அறி­வியல் வறு­மையை போக்­கு­மாயின் அது அறிவுக் கொடையே.

இது போலவே அறி­வியல் வறுமை மட்­டு­மல்ல, ஆன்­மீக வறுமை நீக்­கப்­பட்டு அதற்­கான தர்­ம­மா­கிய வணக்க வழி­பா­டு­களில் இன்­பத்தை ஊட்­டு­கின்ற பிர­தான பணியும் காலத்தின் அவ­சி­யாகும்.

நம்மை வந்­த­டைந்­தி­ருக்­கின்ற ரம­ழா­னு­டைய மாதம் இதற்­கு­ரிய பயிற்­சியைப் பெறு­கின்ற, அதனை பிர­யோ­கிக்­கின்ற சிறந்த பரு­வ­கா­ல­மாகும். இந்த காலங்­களில் அறி­வியல் வறுமை நீக்­கப்­பட்டு ஆன்­மீக வறு­மையும் போக்­கப்­பட்டால் மாத்­திரம் எமது பணி முடிந்து விட்­ட­தாக கருதி விட முடி­யாது. ஏழை எளிய குடும்­பங்கள், வாய் திறந்து தமது தேவை­களை பிற­ரிடம் கேட்க வெட்­கப்­ப­டு­ப­வர்கள், குறிப்­பாக இப்­பொ­ழுது உலகில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற நெருக்­க­டி­மிக்க சூழலால் அவ­திப்­படும் குடும்­பங்­க­ளையும் தேடிச்­சென்று அவர்­களை இனங்­கண்டு அவர்­க­ளது கஷ்­டங்­களை ஒழிக்க முயற்­சிப்­பதும் ரமழான் எமக்கு சொல்ல வரும் செய்­தி­களில் மிகப் பிர­தா­ன­மா­ன­தாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறி­வித்­தார்கள்.

இறைத்­தூதர் (ஸல்) அவர்கள் மக்­க­ளி­லேயே அதி­க­மாக வாரி வழங்கக் கூடி­ய­வர்­க­ளாக இருந்­தார்கள்; ரமழான் மாதத்தில் அவர்­களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்­திக்கும் வேளையில் (வழக்­கத்தை விட) அதி­க­மாக வாரி வழங்­கு­வார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இர­விலும் நபி(ஸல்) அவர்­களைச் சந்­தித்து (அது­வரை அரு­ளப்­பட்­டி­ருந்த) குர்­ஆனை அவர்­க­ளுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தரு­வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்­களைச் சந்­திக்­கும்­போது அவர்கள் மழைக் காற்றை விட அதி­க­மாக (மக்­க­ளுக்கு) நன்­மையை வாரி வழங்கும் கொடை­யா­ள­ராகத் திகழ்­வார்கள்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆன் முழு­வ­தையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்’ என்று கூறி­னார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்­களும் ஃபாத்­திமா (ரலி) அவர்­களும் அறி­வித்­தார்கள். நூல் : புகாரி: 3220.

நோன்பு நோற்­ப­திலும் குர்­ஆனை ஓது­வ­திலும் இரவு வணக்­கங்­களில் திளைத்து இருப்­ப­திலும் இன்பம் காண்­கின்ற பலர் வறிய மக்­களின் துயர் துடைப்­பதில் இன்பம் காண முயற்­சிப்­ப­தில்லை, அதற்­கி­ருக்­கின்ற கீர்த்­தி­யையும் மகி­மை­­யையும் உணர்ந்து கொள்­வ­தில்லை. ஏனைய காலங்­களை விட ரம­ழானில் வரிந்து கட்டிக் கொண்டு புயல்­காற்றை விட பல்­வேறு நன்­மை­களில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொள்ளும் நபி­க­ளாரின் உம்மத் தன்­னு­டைய ரப்பின் உண்­மை­யான அன்பு எதி­லி­ருக்­கி­றது என்­ப­தனை கண்­ட­டை­வதில் அலட்­சியப் போக்­கிலே உள்­ளனர்.

ரம­ழானில் ஐந்­தா­வது விடுத்தம் உம்ரா செய்ய எண்ணம் கொள்ளும் மனிதர் பக்­கத்து வீட்டில் உண்ண உண­வின்றி வாடிக் கொண்­டி­ருக்கும் குடும்­பத்­திற்கு ஒரு வேளை உணவு கொடுக்க மனதில் அவ­ருக்கு இட­மில்­லை­யென்றால் அவ­ரது ஈமானில் பலத்த கோளாறு உள்­ளது என்­ப­தா­கவே நாம் புரிந்து கொள்ள முடி­கி­றது. மார்க்­கத்தைப் பொய்ப்­பிப்­பவன் எவனோ அவனே அநா­தை­க­ளுக்கும் ஏழை எளி­ய­வ­ருக்கும் உண­வ­ளிக்கத் தூண்­டு­வ­தில்லை என்ற தோர­ணையில் சூரா மாஊன் இதன் உண்­மைத்­தன்­மையை தெளி­வா­கவே எமக்கு எடுத்­து­ரைக்­கி­றது.

தர்மம் செய்ய முடி­யாது என்று எவரும் சொல்ல முடி­யாத அள­வுக்கு இஸ்லாம் அதனை மிக இல­கு­வா­கவே ஆக்கி வைத்­தி­ருக்­கி­றது.

“உன் சகோ­த­ரனின் முகத்தைப் பார்த்து புன்­னகை புரி­வது உனக்கு நல்­ல­ற­மாகும். நீ நன்­மையை ஏவு­வதும் தீமையைத் தடுப்­பதும் நல்­ல­ற­மாகும். பாதை தவ­றிய மனி­த­ருக்குப் பாதையைக் காட்­டு­வதும் உனக்கு நல்­ல­ற­மாகும். பார்­வை­யி­ழந்­த­வ­ருக்குப் பார்­வை­யாக நீ ஆவதும் உனக்கு நல்­ல­ற­மாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்­ற­வற்றை நீ அகற்­று­வதும் உனக்கு நல்­ல­ற­மாகும். உனது வாளியில் உள்ள தண்­ணீரை உனது சகோ­த­ரரின் வாளியில் ஊற்­று­வதும் உனக்கு நல்­ல­ற­மாகும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். நூல்: திர்­மிதி 1956, இப்னு ஹிப்பான் 2/287.

ஜாபிர் பின் அப்­தில்லாஹ் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: நான் அல்­லாஹ்வின் தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­க­ளுடன் பெருநாள் தொழு­கையில் கலந்து கொண்­டுள்ளேன். அப்­போது அவர்கள் உரை நிகழ்த்­து­வ­தற்கு முன்பே தொழுகை நடத்­தி­னார்கள். பாங்கோ இகா­மத்தோ இல்லை. பிறகு பிலால் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்கள் மீது சாய்ந்­து­கொண்டு, இறை­யச்­சத்தைக் கடைப் பிடிக்­கு­மாறும் இறை­வ­னுக்குக் கீழ்ப்­ப­டிந்து நடக்­கு­மாறும் வலி­யு­றுத்தி மக்­க­ளுக்கு அறி­வு­ரையும் நினை­வூட்­டலும் வழங்­கி­னார்கள். பிறகு அங்­கி­ருந்து புறப்­பட்டு, பெண்கள் பகு­திக்குச் சென்று அவர்­க­ளுக்கு (மார்க்க நெறி­மு­றை­க­ளையும் மறுமை நாளையும்) நினை­வூட்டி அறி­வுரை பகர்ந்­தார்கள். மேலும், பெண்­களை நோக்கி, ‘தர்மம் செய்­யுங்கள். உங்­களில் அதிகம் பேர் நர­கத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறி­னார்கள்.

அப்­போது பெண்கள் நடு­வி­லி­ருந்து கன்­னங்கள் கருத்த ஒரு பெண்­மணி எழுந்து ‘அது ஏன், அல்­லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்­லாஹ்வின் தூதர் ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீங்கள் அதி­க­மாகக் குறை கூறு­கின்­றீர்கள் (நன்றி மறந்து) கண­வனை நிரா­க­ரிக்­கி­றீர்கள்” என்று கூறி­னார்கள். அப்­போது அப்­பெண்கள் தம் காத­ணிகள், மோதி­ரங்கள் உள்­ளிட்ட அணி­க­லன்­களை (கழற்றி) பிலால் ரழி­யல்­லாஹு அன்ஹு அவர்­களின் ஆடையில் போட்­டனர். நூல்: முஸ்லிம் 885.
அபூ மஸ்ஊத்(ரலி) அறி­வித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்­க­ளிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்­களில் ஒருவர் கடைத் தெரு­வுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரண்டு கைய­ளவு தானியம் சம்­பா­தித்து (அதைத் தர்மம் செய்து) விடுவார். ஆனால் இன்றோ எங்­களில் சில­ரிடம் ஓர் இலட்சம் (திர்கம்/ தீனார்) வரை உள்­ளன. நூல் : புகாரி 1416.
இந்­நி­கழ்­வுகள் யாவுமே ஈமா­னிய இத­யங்­களின் ஆழத்­தி­லி­ருந்து வெளிப்­படும் தர்ம உணர்வை தெளி­வாக படம்­பி­டித்துக் காட்­டு­கி­றது. ஸஹா­பாக்கள், ஸஹா­பிய பெண்­க­ளிடம் காணப்­பட்ட தர்ம உணர்­வினை நம்­மி­டமும் ஏற்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிக்­க­வேண்டும்.

ரமழான் காலங்­களில் தாய்­மார்கள் மிக இல­கு­வாக செய்ய முடி­யு­மான, கணவன், மனைவி இரு­வ­ரது நன்­மையின் தட்­டுக்­க­ளையும் கனக்கச் செய்­யக்­கூ­டிய மனி­தர்­களால் அலட்­சி­ய­மாக கரு­தப்­ப­டு­கின்ற ஓர் அம­லையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள். இறைத்­தூதர்(ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:

ஒரு பெண் வீட்­டி­லுள்ள உணவை வீணாக்­காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்­மையைப் பெறுவாள். அதைச் சம்­பா­தித்த கார­ணத்தால் தர்­மத்தின் நன்மை அவ­ளு­டைய கண­வ­னுக்கும் கிடைக்கும்; அது­போன்றே கரு­வூலக் காப்­பா­ள­ருக்கும் கிடைக்கும். இவர்­களில் யாரும் யாரு­டைய நன்­மை­யையும் குறைத்­து­விட முடி­யாது.’ நூல் : புகாரி 1425.

தர்மம் செய்­வ­தனால் எமக்கு கிடைக்கும் மகத்­தான கூலி­க­ளையே பின்­வரும் அல்­குர்ஆன் வச­னங்­களும் நபி­மொ­ழியும் தெளிவுபடுத்­து­கின்­றன.

யார் தங்கள் பொருள்­களால் (தான தர்­மங்­களில்) இர­விலும், பக­லிலும் இர­க­சி­ய­மா­கவும் பகி­ரங்­க­மா­கவும் செலவு செய்­கின்­றார்­களோ அவர்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய இறை­வ­னி­டத்தில் நற்­கூலி இருக்­கி­றது. அவர்­க­ளுக்கு அச்­சமும் இல்லை. அவர்கள் துக்­கப்­ப­டவும் மாட்­டார்கள். (2:274)

அவர்கள் உம்­மிடம் கேட்­கி­றார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்­ய­வேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்­மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்­தாலும், அதை தாய், தந்­தை­ய­ருக்கும், நெருங்­கிய உற­வி­னர்­க­ளுக்கும், அநா­தை­க­ளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்­போக்­கர்­க­ளுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்­மை­யான எதனைச் செய்­தாலும் நிச்­ச­ய­மாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தரு­ப­வ­னாக) இருக்­கிறான்.”(2:215)

அபூ­ஹு­ரைரா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: ஒவ்­வொரு நாளும் இரண்டு மலக்­குகள் இறங்­கு­கின்­றனர். அவ்­வி­ரு­வரில் ஒருவர், “அல்­லாஹ்வே! தர்மம் செய்­ப­வ­ருக்குப் பிர­தி­ப­லனை அளித்­தி­டு­வா­யாக!” என்று கூறுவார். இன்­னொ­ருவர், “அல்­லாஹ்வே! (தர்மம் செய்­யாமல்) தடுத்து வைத்துக் கொள்­ப­வர்­க­ளுக்கு அழிவை ஏற்­ப­டுத்­து­வா­யாக!” என்று கூறுவார் என அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். நூல் : புகாரி 1442

அபூ­ஹு­ரைரா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்­லாத மஹ்ஷர் மைதா­னத்தில் தன்­னு­டைய நிழ­லான (அர்ஷின் நிழலை) அளிக்­கிறான். அதில் ஒரு நபர் அவ­ரு­டைய வலக்­கையால் தர்மம் செய்­ததை அவ­ரது இட­து கை அறிந்து கொள்­ளா­த­வாறு இர­க­சி­ய­மாக தர்மம் செய்­தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். நூல் : புகாரி 660,1423,6806.

இந்த புனி­த­மிகு மாதத்தில் நாமும் தான தர்­மங்கள் செய்து அடுத்­த­வர்­க­ளையும் செய்­யத்­தூண்டி அதனை இம்­மைக்­கு­ரிய பாது­காப்­பா­கவும் மறுமையின் வெற்றிக்கு வழியாகவும் ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.