புனர்வாழ்வளிக்கும் வர்த்தமானியும் சமூகத்தில் எழும் கேள்விகளும்

0 583

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­பது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த மார்ச் 12 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் ஏலவே கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் ஒரு தொகு­தி­யி­ன­ருக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

இருப்­பினும் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் உள்ள பல விட­யங்கள் அடிப்­படை மனித உரி­மை­களை மீறு­வ­தாக உள்­ள­தாக மனித உரிமை அமைப்­பு­களும் சட்­டத்­து­றை­யி­னரும் கரு­து­கின்­றனர். இந் நிலையில் குறித்த வர்த்­த­மா­னியை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தடை­வி­திக்கக் கோரி உயர் நீதி­மன்றில் ஆறு அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் கடந்த வாரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

‘வன்­மு­றை­யான மட்­டு­மீ­றிய மதக் கொள்­கையைக் கொண்­டி­ருப்­ப­தற்­கெ­தி­ரான தீவி­ர­ம­ய­மாக்­குதல்’ எனும் தலைப்­பி­லான இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லா­னது, தீவி­ர­வாத கொள்­கை­களைப் பின்­பற்­றி­ய­தாகக் கரு­தப்­படும் நபர்­க­ளுக்கு ‘மீள் ஒன்­றி­ணைத்தல் நிலை­யங்­களில்’ புனர்­வாழ்­வ­ளித்து அவர்­களை விடு­தலை செய்­வதை நோக்­காகக் கொண்­ட­தாகும். எனினும் இந்த புனர்­வாழ்­வ­ளிக்கும் வேலைத்­திட்­ட­மா­னது ஏலவே கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி எதிர்­கா­லத்தில் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­வர்­க­ளுக்கும் பொருந்­து­வ­தாகும்.

இதற்­க­மைய கைது செய்­யப்­ப­டு­கின்ற அல்­லது சர­ண­டை­கின்ற ஒரு­வரை நீதி­மன்­றத்தில் நிறுத்­தாது, சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­யுடன் புன­வர்­வாழ்­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்தை இந்த வர்த்­த­மானி வழங்­கு­கி­றது. எனினும் அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்கள் இதனைத் தவ­றான நோக்­கத்தில் பயன்­ப­டுத்­தவும் வேண்­டு­மென்றே ஒரு­வரை பயங்­க­ர­வா­தி­யாக முத்­திரை குத்தி புனர்­வாழ்­வ­ளிக்­கவும் பயன்­ப­டுத்­தப்­படக் கூடும் என்ற நியா­ய­மான அச்­சத்தை பலரும் எழுப்­பு­கின்­றனர்.

புனர்­வாழ்­வ­ளிக்கும் நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்கு உட்­படும் ஒரு­வ­ருக்கு, அவர் பயங்­க­ர­வாத சிந்­தனை அல்­லது செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் எனக் கருத்திற் கொள்­ளப்­பட்டே புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படும். இது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் எந்­த­வித தொடர்­பு­மற்­ற­வர்­க­ளுக்கும் பொருந்தும். அவ்­வாறு ஒருவர் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு ஆறு மாத காலத்தில் அல்­லது ஒரு வரு­டத்தில் விடு­விக்­கப்­பட்டு சமூ­கத்­துடன் ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­கின்ற போதிலும் அவர் பயங்­க­ர­வா­தி­யா­கவே முத்­திரை குத்­தப்­ப­டு­வ­துடன் அதன் பின்­னரும் அவர் மீதான பாது­காப்புக் கெடு­பி­டி­களும் கண்­கா­ணிப்­பு­களும் தொடரும் என்­பதும் கடந்த கால அனு­ப­வ­மாகும்.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் அங்கம் வகித்த முன்னாள் போரா­ளி­களும் இவ்­வா­றான புனர்­வாழ்­வ­ளித்தல் வேலைத்­திட்­டத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டதை நாம் அறிவோம். எனினும் அவர்கள் விடு­விக்­கப்­பட்ட பின்­னரும் புல­னாய்வுத் துறை­யினர் அவர்­களை தினமும் கண்­கா­ணிப்­ப­தையும் பின்­தொ­டர்­வ­தையும் அதன் மூலம் அவர்கள் சமூ­கத்தில் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத நிர்ப்­பந்த நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­தையும் நாம் அறிந்­தி­ருக்­கிறோம். அவ்­வா­றான நிலை­மைகள் எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்தில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் ஏற்­ப­டலாம் என மனித உரிமை ஆர்­வ­லர்கள் அஞ்­சு­கின்­றனர். அதே­போன்­றுதான் எந்­த­வித குற்­றமும் இழைக்­காத ஒருவர் நீதி­மன்றம் சென்று தான் குற்­ற­மற்­றவர் என்­பதை நிரூ­பித்து சமூ­கத்தில் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்­கான வாய்ப்­பையும் இந்த புனர்­வாழ்­வ­ளித்தல் வேலைத்­திட்­டத்தை தெரிவு செய்யும் ஒருவர் இழக்­கிறார் என்ற கரி­ச­னை­யையும் சிலர் முன்­வைக்­கின்­றனர்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும், தனது கண­வரோ பிள்­ளையோ எந்­த­வ­ழி­மு­றையின் ஊடாக விரை­வாக வெளியில் வர முடி­யுமோ அதன் மூலம் அவர்­களை வெளியில் எடுத்­து­விட வேண்டும் என்­பதில் அவர்­க­ளது குடும்­பத்­தினர் அக்­க­றை­யா­க­வுள்­ளனர். தனது உற­வினர், எந்­த­வித பயங்­க­ர­வாத சிந்­தனை அல்­லது செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டி­ரா­த­போ­திலும் அவர்கள் சிறைக் கூண்­டு­க­ளுக்குள் அன்றி, தமது கண் முன்னே வாழ்ந்தால் போது­மா­னது என்­பதே பல­ரது எதிர்­பார்ப்­பாகும். இந்த எதிர்­பார்ப்பு யதார்த்­த­மா­ன­து­மாகும்.

எனினும் இந்த புனர்­வாழ்­வ­ளிக்கும் நிகழ்ச்­சித்­திட்­ட­மா­னது மிகவும் நேர்­மை­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் கவ­லை­யில்லை. ஆனால் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் தவ­றாக பிர­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதைப் போன்று இந்த புனர்­வாழ்­வ­ளிக்கும் வர்த்­த­மா­னியும் தவ­றாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் அது எதிர்­கா­லத்தில் அநா­வ­சிய பிரச்­சி­னைகள் தோற்­றம்­பெ­றவே வழி­வ­குக்கும்.

அர­சாங்கம் தீவி­ர­வாத சிந்­தனை கொண்ட நபர்­களை, அதி­லி­ருந்து விடு­வித்து மீண்டும் சமூ­கத்­துடன் வாழச் செய்­வதே தமது நோக்கம் எனக் குறிப்­பி­டு­கி­றது. ஆனால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களோ மேலும் மேலும் முஸ்லிம் சமூ­கத்தில் தீவிரப் போக்கு கொண்­ட­வர்­களை உரு­வாக்­கு­வதை இலக்­காகக் கொண்டதாகவே தெரிகிறது.
எனவேதான் யாரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, அப்பாவிகளைத் தண்டிப்பதையோ அநியாயமாக அவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்துவதையோ அனுமதிக்க முடியாது. இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் மேலே சுட்டிக்காட்டியது போன்று புனர்வாழ்வளிக்கும் வர்த்தமானியில் உள்ள அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் சரத்துகள் நீக்கப்பட வேண்டும். புனர்வாழ்வளித்தலின் உண்மையான நோக்கம் நிறைவேறும் வகையில் வர்த்தமானியின் உள்ளடக்கம் திருத்தப்பட வேண்டும். இன்றேல் நீதிமன்றம் ஊடாக அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதே இப்போதைக்கு நம்முன் உள்ள ஒரே தீர்வாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.