2021 ஹஜ் யாத்திரைக்கு கொவிட் தடுப்பூசி கட்டாயமானது: சவூதி

0 396

கொவிட் தடுப்­பூசி ஏற்­றி­ய­வர்கள் மாத்­தி­ரமே இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையில் கலந்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டுவர் என சவூதி அரே­பிய சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.
இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையில் ஈடு­பட விரும்­புவோர் கட்­டாயம் தடுப்­பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும். இது இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு அனு­மதி வழங்­கு­வ­தற்­கான கட்­டாய நிபந்­த­னை­யாக கொள்­ளப்­படும் என சவூ­தியின் சுகா­தார அமைச்சர் கலா­நிதி தெளபீக் அல் ராபியா வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஹஜ் யாத்­தி­ரையில் கலந்து கொள்ள வரும் யாத்­தி­ரி­கர்கள் நாட்­டினுள் பிர­வே­சிக்கும் இடங்­களில் தடுப்­பூ­சியை ஏற்றிக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கொவிட் அச்­சு­றுத்தல் கார­ண­மாக கடந்த வருடம் சவூதி அரே­பி­யாவில் வசிக்கும் 1000 பேர் மாத்­தி­ரமே ஹஜ் யாத்­தி­ரைக்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் இவ்­வ­ருடம் உரிய சுகா­தார விதி­மு­றை­க­ளுடன் அதி­க­மானோர் ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­டுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் வெளி­நாட்­ட­வர்­களை ஹஜ் யாத்­தி­ரைக்கு அனுமதிப்பது தொடர்பான அறிவித்தல்களை இதுவரை சவூதி ஹஜ் விவகார அமைச்சு உத்தியோகபூர்வமான வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.