முஸ்­லிம்­களே! இணை­யுங்கள் தமி­ழர்­களே! அணை­யுங்கள்

0 580
கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

ராஜ­பக்ஷ ராஜ­தானி செல்லும் பாதையும் திசையும் தவ­றா­னவை. அறுதிப் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்ற அர­சாங்கம் என்ற இறு­மாப்பில் அதன் ஆட்சி நாட்­டையும் வருங்­காலச் சந்­த­தி­க­ளையும் பிற­நாட்­ட­வர்­களின் கட­னா­ளி­க­ளாக்கி, இப்­போது வாழ்­கின்ற மக்­களை வறு­மையின் பிடிக்குள் தள்ளி, இனங்­களைத் திட்­ட­மிட்டுப் பிள­வு­ப­டுத்தி, பௌத்­தத்தின் பாதையில் ஆள்­கிறோம் என்று கூறிக்­கொண்டு பிற மதங்­களின் ஆசா­ரங்­க­ளையும் கலா­சாரப் பண்­பு­க­ளையும் இழி­வு­ப­டுத்தி, பிற­நா­டு­களின் கண்­ட­னங்­க­ளுக்கும் இலங்­கையை ஆளாக்கி ஓர் ஏதேச்­ச­தி­கார ஆட்­சி­யாக ராஜ­பக்ச அரசு மாறி­யுள்­ளதை இனியும் மறுப்­ப­திலோ மறைப்­ப­திலோ அர்த்­த­மில்லை.

ஏதோ ஒரு மாய­வ­லைக்குள் சிக்­குண்­ட­வர்­கள்­போல பெரும்­பான்மை இனம் செய­லி­ழந்து காணப்­ப­டு­வது மயக்­கத்­தி­னாலா அல்­லது யதார்த்த நிலை­பற்­றிய சிந்­த­னையே இல்­லா­மை­யாலா என்­பது புரி­ய­வில்லை. ஆனால் அவர்­களின் மயக்­கத்தைத் தெளி­வித்து யதார்த்­தத்­தையும் உணர்த்த சிறு­பான்மை இனங்­க­ளி­ரண்டும் பாடு­ப­ட­வேண்­டிய ஒரு நிலை இப்­போது உரு­வா­கி­யுள்­ளது. பொத்­து­வி­லி­லி­ருந்து பொலி­கண்­டி­வரை நீண்ட நடை­ப­வ­னியும் அதன் தனித்­துவ வெற்­றியும் பெரும்­பான்மை மக்­களை விழிப்­ப­டையச் செய்­வ­தற்குத் தெளிக்­கப்­பட்ட நீர்த்­துளி என்று கூறுதல் பொருந்தும்.

இந்தப் பவ­னியில் காணப்­பட்ட புதுமை என்­ன­வெனில் இரு சிறு­பான்மை இனங்­களும் ஒன்­றாகக் கைகோர்த்துச் சென்­றமை. இதன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­த­வேண்­டிய நேரம் இப்­போது வந்­து­விட்­டது.

இரண்டு இனங்­களும் இன்று எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் ஒரே தன்­மை­யா­னவை. தொழில், கல்வி, நில­வு­டமை, மதம், கலாச்­சாரம், மொழி ஆகிய துறைகள் ஒவ்­வொன்­றிலும் இரு இனங்­களும் பல இழப்­பு­களை அடைந்­துள்­ளன, இன்னும் அடை­யப்­போ­கின்­றன. பௌத்த பேரா­திக்­க­வா­தி­களின் பிடிக்குள் சிக்­கி­யுள்ள இன்­றைய அரசு, பேரா­திக்­க­வா­தி­களின் ஆதிக்­க­வெ­றியைத் தீர்க்க இரண்டு சிறு­பான்மை இனங்­க­ளையும் பலி­கொ­டுக்கத் தீர்­மா­னித்து விட்­டது. அதன் விளை­வு­க­ளையே கடந்த இரு ஆண்­டு­க­ளாக தமி­ழரும் முஸ்­லிம்­களும் தொடர்ந்து அனு­ப­விக்­கின்­றனர். இதி­லி­ருந்து எவ்­வாறு விடு­த­லை­யாகி மீண்டும் சுய கௌர­வத்­து­டனும் பெரும்­பான்மை இனத்­துடன் சரி­நிகர் சமா­ன­மா­கவும் வாழலாம் என்­பதே இரு­வ­ருக்­கு­முள்ள ஒரே பிரச்­சினை. அதனை தீர்ப்­ப­தற்­குள்ள ஒரே வழி இணை­தலும் அணைத்­த­லுமே.

இங்கே பழைய குற்­றங்­க­ளையும் குறை­பா­டு­க­ளையும் மீட்டு வாசிப்­பதில் அர்த்­த­மில்லை. அவை ஒரு நீண்ட பட்­டி­ய­லா­யினும் அவற்றை மறந்­தே­யாக வேண்டும். இது காலத்தின் தேவை. மொழி­யாலும் கலா­சாரக் கலப்­பாலும் அதற்கும் மேலாக இரத்­தத்­தா­லும்­கூட (இதனை சில முஸ்­லிம்­களால் ஜீர­ணிக்க முடி­யாமல் இருக்­கலாம். ஆனால் இலங்கை முஸ்­லிம்­களின் பூர்­வீ­கத்தை தாய்­வ­ழி­யாகப் புரட்­டிப்­பார்த்தால் இதன் உண்மை விளங்கும்) ஒன்­று­பட்ட இரு இனங்கள் ஏன் அர­சியல், உல­கியல் பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை ஒரே நோக்கில் சம­நி­லையில் நின்று இயங்க முடி­யாது?

முஸ்­லிம்­களும் தமி­ழரும் எவ்­வாறு சுமு­க­மா­கவும் பாசத்­து­டனும் வாழ்­கின்­றனர் என்­ப­தற்கு தமிழ் நாடு ஓர் எடுத்­துக்­காட்டு. முஸ்­லிம்கள் கால் அணாக்கள், கால் அணா இல்­லாமல் முழு அணா இருக்­க­மு­டி­யாது என்று அறிஞர் அண்ணா ஒரு முறை பகி­ரங்­கத்தில் தமி­ழ­ரைப்­பார்த்துக் கூறி­யதும், அதே­போன்று நாங்கள் திரா­விட முஸ்­லிம்கள், இஸ்­லா­மியத் தமி­ழர்கள் என்று அங்­குள்ள முஸ்லிம் மக்கள் உளந்­தி­றந்து பேசு­வதும் அந்தச் சுமுக மனப்­பான்­மையை வெளிக்­காட்­ட­வில்­லையா?

காலங்­கா­ல­மாக இரு இனங்­களின் தலை­மைத்­து­வங்­களே இந்­தப்­பி­ரி­வி­னையை வளர்த்­து­வந்­தன. “நாங்கள் வாளுடன் வந்து அரண்­ம­னையில் பங்கு கேட்­கிறோம்;, நீங்கள் தரா­சு­டனும் முழக்­கோ­லு­டனும் வந்து அங்­கா­டியில் இடம் கேட்­கி­றீர்கள். நாங்கள் குடி­சை­களில் வாழ்ந்­து­கொண்டு கல்­விக்­கூ­டங்­களை மாளி­கை­க­ளாக்­கி­யுள்ளோம், நீங்கள் மாளி­கை­களில் வாழ்ந்­து­கொண்டு பாட­சா­லை­களை மாட்டுத் தொழு­வங்­க­ளாக வைத்­துள்­ளீர்கள். ஆதலால் நாங்கள் எவ்­வாறு உங்­க­ளுடன் சம­நி­லையில் நின்று பேசலாம்”, என்று கேட்டார் ஒரு தமிழ் தலைவர் அன்று. அதே­போன்று “படத்தில் இருக்கும் தமி­ழ­னையும் செத்த தமி­ழ­னையும் பிறவாத் தமி­ழ­னையும் மட்­டும்தான் நம்­பலாம், மற்ற எந்தத் தமி­ழ­னையும் நம்­பக்­கூ­டாது” என்று கூறினார் அன்­றைய முஸ்லிம் தலை­வ­ரொ­ருவர். இவ்­வாறு பிரித்­துப்­பி­ரித்தே தலை­வர்கள் தேர்­தலில் வென்று மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­னார்கள்.

அவ்­வா­றான பிரி­வினைச் சூழ­லிலே வளர்ந்­து­வந்­த­வர்­களே இன்­றைய தலை­வர்­களும். அத­னா­லேதான் மேடை­க­ளிலே நின்று ஒற்­று­மை­யாவோம் என்று பறை­ய­டித்­து­விட்டு கீழே இறங்­கி­ய­வுடன் அதனை மறந்து பழைய பிரி­வினைப் பல்­ல­வி­யையே இத்­த­லை­வர்கள் பாடு­கின்­றனர். பழக்­க­தோஷம் அவ்­வ­ளவு இல­கு­வாக விட்டுப் போகுமா? ஆனால் இவர்­களின் தலை­மைக்குப் பின்னால் இன்­றைய இளம் தலை­மு­றைகள் சென்றால் இரு சமூ­கங்­களும் எதிர்­கா­லத்தில் பௌத்த பேரா­திக்­க­வா­தி­களின் பொறிக்குள் சிக்­கித்­த­விப்­பது திண்ணம். இதனை உண­ர­வேண்­டி­ய­வர்கள் வளரும் இளம் சந்­த­தி­யி­னரே. ஆக­வேதான் முஸ்லிம் இளை­ஞர்­களும் தமிழ் இளை­ஞர்­களும் – மலை­ய­கத்­த­மிழர் உட்­பட – உள்­ளத்­தாலும் சிந்­த­னை­யாலும் இணைய வேண்டும். அவ்­வாறு இணைந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் அர­வ­ணைக்­கும்­போது கிழக்கும் வடக்கும் சேர்ந்­தி­ருந்­தா­லென்ன பிரிந்­தி­ருந்­தா­லென்ன? அடுத்த நடை­ப­வனி மலை­ய­கத்­தி­லி­ருந்து புறப்­பட வேண்டும்.

இந்த ஒற்­றுமை நிச்­சயம் பெரும்­பான்மை இனத்­தி­னரின் கவ­னத்தை ஈர்க்கத் தவ­றாது. இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் தீவி­ர­வா­தி­க­ளாகத் தமி­ழ­ரையும் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக முஸ்­லிம்­க­ளையும் பெரும்­பான்மை மக்­க­ளுக்குப் படம்­பி­டித்­துக்­காட்டி அவர்­க­ளி­ட­மி­ருந்து நாட்டைக் காப்­பாற்ற வந்த வீரர்­க­ளா­கவும் தியா­கி­க­ளா­கவும் தம்மை இனங்­காட்டி பெரும்­பான்மை இனத்தை ஒரு­வி­த­மான பொய் உறக்­கத்தில் ஆழ்த்­தி­யுள்­ளனர். அதே சமயம் பௌத்­த­பீ­டத்தின் ஒரு பகு­தி­யி­ன­ரைக்­கொண்டு தாலாட்டி பௌத்த மக்­களைத் தாலாட்டி உறங்­க­விட்டு ஆட்­சி­யா­ளர்கள் தமக்கு விரும்­பி­ய­படி ஆடு­கின்­றனர். எனவே பெரும்­பான்­மை­யி­னரின் உறக்­கத்தைக் கலைக்க வேண்­டி­யது சிறு­பான்மை இள­சு­களின் பொறுப்பு. சிறு­பான்மை இனங்­களின் உண்­மை­யான நிலை­யையும் அவ்­வி­னங்கள் நாட்டின் நலன் கரு­தியே தமது குறை­களைத் தீர்க்­கு­மாறு கள­மி­றங்கிப் போரா­டு­கின்­றனர் என்­ப­தையும் எல்லா இனங்­களும் சேர்ந்­துதான் இலங்­கையர் என்ற ஒரே குடை­யின்கீழ் நின்று இந்­நாட்டை கட்டி எழுப்­பலாம் என்­ப­தையும் பெரும்­பான்­மையோர் விளங்கும் மொழியில் சிங்­கள இளம் தலை­மு­றை­யி­ன­ருக்குச் சிறு­பான்மை இள­வல்கள் எடுத்­து­ரைக்க முடி­யு­மாயின் அர­சுக்­கெ­தி­ரான ஒரு தேசிய எதிர்ப்­பினை விரைவில் உரு­வாக்­கலாம். அது கைகூ­டு­மாயின் அடுத்த நடை­ப­வனி மூவி­னங்­களும் சேர்ந்த ஒரு பவ­னி­யாக நடை­பெ­று­வது நிச்­சயம். அதுவே ஆட்­சி­யா­ள­ரையும் கதி­க­லங்க வைக்கும். அதற்கு அடித்­த­ள­மா­கவே சிறு­பான்மை இனங்­க­ளி­ரண்டும் முதலில் ஒற்­று­மை­யாக வேண்டி இருக்­கி­றது. பாகிஸ்தான் பிர­தமர் வந்த சமயம் நடை­பெற்ற முஸ்­லிம்­களின் தகன எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பங்­கு­கொள்­ளா­தது ஒரு பெருங் குறை.

தமிழ் முஸ்லிம் ஒற்­று­மையால் சர்­வ­தேச மட்­டத்­திலும் தாக்­கங்­க­ளேற்­பட இட­முண்டு. இந்த அரசு சர்­வ­தேச அழுத்­தங்­க­ளை­யெல்லாம் புலம்­பெ­யர்ந்து வாழும் விரக்­தி­ய­டைந்த விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் செய்யும் சதி­யென்றே விமர்­சிக்­கின்­றது. முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் இணைந்து தமது எதிர்ப்­பினைக் காட்­டும்­போது அந்த விமர்­சனம் அர்த்­த­மற்­ற­தா­கி­விடும். அர­சாங்கம் திட்­ட­மிட்­ட­வாறு சிறு­பான்மை இனங்­களை ஒழித்­துக்­கட்ட எடுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராகச் சிறு­பான்மை மக்கள் ஜன­நா­யக அடிப்­ப­டையில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களாகவே அவை சர்வதேச அரங்குகளில் சித்தரிக்கப் படும். அந்த நிலையில் பெரும்பான்மை மக்களையும் அந்த ஆர்ப்பாட்டங்கள் ஈர்க்கு மானால் சர்வதேச அழுத்தங்கள் மேலும் வலுவடையும். இந்த நோக்கைக் கொண்டே ஆர்ப்பாட்டங்கள் அமைதல் வேண்டும்.

முஸ்லிம் இள­வல்­களே! தமிழ் இள­சு­க­ளுடன் இணை­யுங்கள். தமிழ் இள­வல்­களே! முஸ்லிம் இள­சு­களை அர­வ­ணை­யுங்கள். அந்த இணைப்­பிலும் அர­வ­ணைப்­பிலும் இருந்து ஒரு புதிய தலை­மைத்­துவம் உரு­வாகி அந்தத் தலை­மைத்­துவம் பெரும்­பான்மை இன வாலி­பர்­க­ளையும் யுவ­தி­க­ளையும் ஒருங்­கி­ணைத்து எல்லா இனங்­க­ளையும் பேரா­திக்­க­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்து காப்­பாற்றி நாட்டை நல்லதோர் பாதையில் வழிநடத்தட்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.