அட்மிரல் ரவீந்திர இன்று சி.ஐ.டி.க்கு அழைப்பு

வெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரை கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன அதுகுறித்த விசா­ர­ணை­களின் நிமித்தம் இன்று சி.ஐ.டி.க்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு  அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. தெரி­வித்­தது.

சந்திரிகா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து சிலரை பிரித்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைக்க முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க முயற்­சித்து வரு­கின்றார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்த சர்­வ­தேச சக்­தி­களும் முயற்­சித்து வரு­கின்­றன என அக்­கட்­சியின் உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இனி ஒரு­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இணைய முடி­யாது. அவர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­கி­விட்டார் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள்…

குற்றங்களை மறைக்கவா இந்த நாடகங்கள்?

ஆட்சி மாற்ற நட­வ­டிக்­கை­யா­னது ஒரு­புறம் நாட்­டுக்கு பெரும் நெருக்­க­டி­யையும் பொரு­ளா­தார பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற நிலையில், மறு­புறம் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் தமது குறை­களை மறைப்­ப­தற்­கான சந்­தர்ப்­ப­மாக இதனைப் பயன்­ப­டுத்­து­வதும் மிக ஆபத்­தா­ன­தாகும். இது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் கவ­னிக்­கத்­தக்­க­வை­யாகும். நாட்டின் ஜன­நா­ய­கத்தை ஒட்­டு­மொத்­த­மாக அழித்த தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க என்றும்  சிங்­கப்பூர்…

முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீயில் சாம்பலாகின

ஏ.ஆர்.ஏ. பரீல் பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பாணந்­துறை தொட்­ட­வத்த பிர­தான வீதியில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு கடைகள்  தீயினால் எரிந்து முழு­மை­யாக  சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.25 மணி­ய­ளவில் இவ்­வ­னர்த்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. சென்ட்ரல் ஹார்ட்­வெயார் எனும் இரும்புக் கடை­யொன்று, பிளாஸ்ரிக் அலு­மி­னியம் கடை­யொன்று, புடவைக் கடை­யொன்று மற்றும் இரும்புப் பொருட்­க­ளுடன் தொடர்­பு­பட்ட கடை­யொன்று என நான்கு கடைகள் தீயினால் முற்­றாக…