ஹஜ் முறைப்பாட்டு விசாரணை அறிக்கை டிசம்பர் 20 இல் 

இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சிலர் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பித்த முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்த ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்கு குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 20 ஆம் திகதி அரச ஹஜ் குழு­விடம் கைய­ளிக்­க­வுள்­ளது. 11 ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக 13 ஹஜ் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற­றி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்ட ஹஜ் முக­வர்கள் அழைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணைக் குழுவின் செய­லாளர் ரபீக் இஸ்­மாயில் தெரி­வித்தார்.…

நௌசர் பௌசி, கீர்த்தி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோர்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர். மேலும் இன்று நடைப்பெற்ற வரவுசெலவு திட்டத்தின் போது மேற்படி இரு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனங்களில் அமர்ந்தததும் குறிப்பிடத்தக்கது.

யெமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் போராளிகளின் பகுதிக்கு விஜயம்

சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஹெளதி போராளிகளுக்கும் இடையே இம் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் யெமனுக்கான பிரதிநிதி மார்டின் கிரிபித்ஸ் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்தார். சவூதி அரேபியா உள்ளிட்ட அரேபிய கூட்டுப் படைகளின் பின்னணியைக் கொண்ட யெமனின் இராணுவ நடவடிக்கைகள் இலக்காகக் கொண்டுள்ள இறக்குமதி மற்றும் உதவிகளுக்கான உயிர்நாடியாகக் காணப்படுகின்ற ஹெளதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹுதைதா துறைமுகத்தைச் சூழவுள்ள…

வடக்கு கிழக்கு யுத்த பாதிப்பு: முஸ்லிம்கள் நஷ்டஈடு கோரி போதுமானளவு விண்ணப்பிக்கவில்லை

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்களில் பெரும்­பா­லானோர் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்­காமை அறி­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பகு­தி­களைச் சேர்ந்த அநேகர் அறி­யாமை கார­ண­மாக விண்­ணப்­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அசையும், அசை­யாத சொத்­து­க­ளுக்கும் மத நிலை­யங்­க­ளுக்­கு­மான நஷ்­ட­ஈ­டு­க­ளுக்கு  விண­்ணப்­பிக்­கா­த­வர்கள் உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கும்­படி வடக்கு அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு பிர­தி­ய­மைச்சர் காதர் மஸ்தான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.…