முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: அவசரப்படாது ஆறுதலாக திருத்தம் செய்வது சிறந்தது

‘முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சமூகத்துக்கு நன்மை பயக்கும் திருத்தங்களே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் அவசரப்படாது ஆறுதலாகத் திருத்தங்களைச் செய்வதே சிறந்ததாகும். இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பல சிவில் சமூக அமைப்புகள் தொடர்ந்தும் தங்களது ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றன’ என முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார். நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்…

பிலிப்பைன்ஸ் பள்ளிவாசல் ஒன்றில் கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல்

தெற்கு பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக குறைந்தது இருவர் பலியாகியுள்ளதோடு  4 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிவாசலினுள் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதன் காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பிராந்திய இராணுவப் பேச்சாளர் லெப்டினென்ட் கேர்ணல் ஜெர்ரி பெசானா ஏ.எப்.பி. செய்தி முகவரகத்திடம்  தெரிவித்தார். மின்டானோவில் நிலைமகளைச் சீர்செய்து சமாதானத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறான…

ஞானசாரருக்கு மன்னிப்பளித்தால் ஜனாதிபதியும் பக்கச்சார்பாக இனவாதியாகவே கருதப்படுவார்

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பு சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவதாகத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின்…

விழிப்புணர்வுகளால் மாத்திரம் போதையை ஒழிக்க முடியாது

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “போதையிலிருந்து விடுதலையான நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய  2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் 11 போதைப்பொருள் ஒழிப்பு மாநாடுகள் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன. 25 மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள், பிரதேச செயலாளர் மட்டத்தில் 331 குழுக்கள், கிராம சேவகர்…