மாணவர்களை விடுவிக்க ஆவனசெய்யுமாறு கிழக்கு ஆளுநரிடம் பெற்றோர் வேண்டுகோள்

தொல்பொருள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் சில நாட்களுக்கு முன்னர்  கைது செய்யப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும்  கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது பிள்ளைகளை விடுவிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். நேற்றுமுன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரது ஆளுநர் செயலகத்தில் அவர்கள் சந்தித்தனர். எதிர்வரும் 05 ஆம் திகதி வழக்கு …

அடிப்படை வாத சிந்தனையை மையப்படுத்தி ஆயுதக் குழுவொன்றை உருவாக்க எத்தனிப்பு

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகள் புதிய கோணத்துக்கு திரும்பியுள்ளன. இது குறித்த விசாரணைகளில், இலங்கையில் அடிப்படைவாத சிந்தனையை மையபப்டுத்தி ஆயுதக் குழுவொன்று உருவாக எத்தனிக்கின்றமை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) அது குறித்த விசாரணை வலயத்தை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் நேரடியாகத்…

திருமலை ஷண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா?

வை. எல். எஸ். ஹமீட் இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு? குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண பாடசாலைகளை பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர், தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி. இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான்…

பலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை ஆழ்ந்த இரங்கல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அல்-முக்ஹைர் கிராமத்தில் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நோக்கம் கொண்ட தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அடே அட் என்ற பலஸ்தீன கிரமத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சட்டவிரோத குடியேற்றப் பகுதியி்ல் இஸ்ரேலியக் குடியேற்றவாசிகள் பலஸ்தீன கிரமவாசிகளுக்கு எதிராக  நடத்திய தாக்குதலில் ஹம்தி நஸ்ஸான் என்ற 38 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். சுமார் 30…