சிரியாவில் கார் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி

சிரியாவின் கரையோர நகரான லடாகியாவின் அதிக சன நடமாட்டமிக்க சந்தியொன்றில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானதோடு 14 பேர் காயமடைந்ததாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. சிரிய அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச படையினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதலில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் ஒப்பீட்டு ரீதியில் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்ட இப் பிரதேசம் தற்போது அமைதியை இழந்துள்ளது.…

நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கைக்கு முஸ்தீபா?

மாவ­னெல்லை மற்றும் புத்­தளம் சம்­ப­வங்­களின் மூல­மாக நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்கும் நகர்­வுகள் முன்­னெ­டுக்­க­ப்ப­டு­கின்­றமை தெரி­கின்­றது. இதனை தடுப்­ப­தற்­கான அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்­புகள் எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றன என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச பாரா­ளு­மன்றில் கேள்வி எழுப்பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய விமல் வீர­வன்ச எம்.பி., அண்­மையில் மாவ­னெல்லை சிலை உடைப்பு…

மாவனெல்லை, புத்தளம் சம்பவங்களை வைத்து இனவாத அரசியல் செய்யவேண்டாம்

மாவனெல்லை மற்றும் புத்தளம் பகுதிகளில் ஆயுதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை காரணமாக  வைத்துக்கொண்டு பெளத்த காவிவாதிகள் சிலரும் அவர்களுடன் இணைந்த அமைப்பினர் சிலரும் மாவனெல்லை பிரதேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பினர் நேற்று சபையில் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இந்த நாட்டினை தீவைக்கும் நோக்கத்தில் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அரச தரப்பினர் சபையில் சுட்டிக்காட்டினர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை…

மூன்று மாதங்களில் கிழக்கு மக்களை திருப்திப்படுத்துவேன்

ஆங்­கி­லத்தில்: மிரு­துலா தம்­பையா தமிழில்: ஏ.ஆர்.ஏ. பரீல் Q  கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிழக்கு மாகா­ணத்தின் தமிழ் பிர­தே­சங்­களில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. உங்­க­ளது நிய­ம­னத்­துக்கு எதி­ராக தமிழ் சமூகம் ஏன் செயற்­ப­டு­கி­றது? முஸ்லிம் ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டால் தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் அதனை எதிர்க்­கின்­றனர். குறிப்­பிட்ட ஹர்த்தால் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அதி­க­மான கடைகள் திறக்­கப்­பட்­டி­ருந்­தன. சிலரே பிரச்­சி­னைப்­பட்டுக் கொள்­கி­றார்கள். சிலரே கடை­களை மூடி­யி­ருந்­தார்கள்.…