சிங்கள – முஸ்லிம் தொடர்புகள் வரலாற்று ஆய்வுகளில் மிக வலிமையாக உள்ளன

ஜே.எம்.ஹபீஸ் இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வொன்றில் கண்டி மாவட்டத்தில் மடவளை என்ற இடத்தில் பள்ளியொன்று கட்டுவதற்கு பௌத்தர் ஒருவரும், விகாரை ஒன்று கட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரும் காணிகளை அன்பளிப்புச் செய்த வரலாற்றைக் காணக்கிடைத்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ரோஹித்த திசாநாயக்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்குமான புத்திஜீவிகள் சங்கம் கண்டியில் ஒழுங்கு செய்த கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி  எம்.ஏ.சீ.எம்.யாக்கூப்…

ஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சுதந்திரத்தை பறிக்கும் செயல்களை தவிர்ப்போம்

நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான பிரதான வைபவம் எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகிறது. இவ்வருட சுதந்திர தின பிரதான நிகழ்வில் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்வது சிறப்பம்சமாகும். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் 71 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் காலப்பகுதி பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் பிரதான மற்றும் சமூக ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு…

தமிழ் – முஸ்லிம் வாக்குகளை கோத்தவால் பெறமுடியாது

முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு அவருடைய வாழ்நாளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நெடுஞ்சாலை, வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவரால் தேர்தலில் 40 வீத வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,…