தவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் பீதியும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதன் என்ற வகையில் இவ்வாறான கொடிய நோய்களைக் கண்டு ஒருவர் அஞ்சுவதும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முடியுமான முயற்சிகளில் ஈடுபடுவதும் இயல்பான விடயமே. எனினும் இது பற்றிய இஸ்லாத்தின் பரந்த பார்வை அவருக்கு வழங்கப்படுமாயின் ஓரளவு அவர் மனதளவில் தன்னைத் தானே வலுப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம்

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத்தின் பாரிய ஒன்றுகூடலில் பங்கேற்றவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34 வயதான மலேசியர் ஒருவர் மரணித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம்  

'ஜகார்த்தா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள சுமார் 10,000 பள்ளிவாசல்களை சுத்திகரிப்பு செய்வதே எங்களது இலக்காகும். எங்களுடைய குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய வேவையுள்ளது. அவ்வாறு செய்தால் ஒரு நாளைக்கு 200 பள்ளிவாசல்கள் வரை சுத்திகரிப்பு செய்யலாம்.

கொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்

“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.