சவூதி அரேபியாவின் அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு

அரம்கோ தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே பொறுப்பு என கடந்த சனிக்­கி­ழமை சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அடெல் அல்-­ஜு­பையிர் தெரி­வித்தார். அரம்­கோ­வினை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்­கான ஏவு­கணை வடக்குப் பக்­கத்­தி­லி­ருந்தே வந்­தது, யெம­னி­லி­ருந்­தல்ல, ஏவு­கணை ஏவப்­பட்ட இடத்­தினைக் கண்­ட­றி­வ­தற்கு சவூதி அரே­பியா முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது என அடெல் அல்-­ஜு­பையிர் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் தெரி­வித்தார். சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் நிறு­வ­ன­மான அரம்­கோவின் எண்ணெய் வயல்கள்…

நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதில் இதய சுத்தியற்ற நகர்வுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டம் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின்படியே இக் கூட்டம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருக்கிறார். எனினும் இதனை மறுத்துள்ள பிரதமர், ஜனாதிபதியே இக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து ஆராய முற்பட்டதாக பதிலளித்துள்ளார். மேற்படி கூட்டத்தை யார் கூட்டியிருப்பினும் அதன் நோக்கம் வெற்றியளித்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னர் இதுபற்றிப் பேசுவதில்…

தோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா?

பிர­தேச மட்­டத்தில் நிர்­வாகம் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் 1989ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற ரண­சிங்க பிரே­ம­தாஸ­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட முறையே பிர­தேச செய­லக முறை­யாகும். ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கச்­சேரி முறையை மாவட்ட செய­ல­க­மாக மாற்­றியும், ஏற்­க­னவே AGA office என்று அழைக்­கப்­பட்ட உதவி அர­சாங்க அதிபர் காரி­யா­ல­யங்கள் பிர­தேச செய­ல­கங்­க­ளா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன. இதனால், முன்பு அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் மற்றும் கச்­சே­ரிகள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய விசா­ரணை ஆணை­க்குழு நிய­மித்தார் ஜனா­தி­பதி

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வா தலை­மையில் இந்த ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் சட்­டத்தின் (393 ஆம் அதி­காரம்) 2 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் இந்த ஆணைக்­குழு ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல்…