பொதுத் தேர்தலில் பேசுபெருளாக்க முஸ்லிம் தலைமைகளே இலக்கு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் சஹ்ரானை அரசியல் ரீதியில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்குப் புதிய இலக்குகள் தேவைப்படுவதாகவும், அதற்கு தன்னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இலக்கு வைப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.

பொதுத் தேர்தலில் புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரு பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை இணைத்துக் கொள்வதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் இத்தேர்தலில் பல புதிய முஸ்லிம் பிரமுகர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் அரசுக்கு ஒத்துழைக்கும்

மத்திய கிழக்குத் தூதுவர்கள் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை சந்தித்தனர்.

பூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்

புதிய ஜனா­தி­பதி அதி­கா­ரத்­திற்கு வந்து பெரும்­பான்­மை­யற்ற அர­சாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வாரம் தான் ஆகி­றது. ‘பேட் மேன், வேன் மேன்’, ‘கெட்ட மனிதன், வேன் மனிதன்’ என்­றெல்லாம் தேர்தல் மேடை­களில் முழங்­கிய வார்த்­தைகள் யதார்த்­த­மா­னவை என்­பது இப்­போதே நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. அதுவும் சர்வ சாதா­ர­ண­மான இடத்­தி­லல்ல. இராஜதந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடத்­தி­லாகும்.