700 கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த வைரக்கல் கொள்ளை
எம்.எப்.எம்.பஸீர்
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய அரலியபுர பகுதியில் வைத்து அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் பொலிஸ் குழு போன்று வேடமிட்டு அத்துமீறி 700 கோடி ரூபா பெறுமதியான 750 கரட் வைரம் மற்றும் மாணிக்கங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்றுமுன்தினம் பகல் 2.50 மணியளவில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை மல்லி என அழைக்கப்படும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய…