பாடசாலை மாணவர்கள் ஏன் கலகக்காரர்களாக மாறியுள்ளனர்?

அண்மையில் மாத்தறை மற்றும் பேருவளை பிரதேசங்களில் மாணவர் மோதல்களில் இருவர் உயிரிழந்தனர். மாத்தறையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பேருவளையில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்து ஒருவர் மரணித்தார். இச்சம்பவங்களை முன்னிறுத்தி மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கல்வியியலாளர்கள் மூவரை பேட்டி கண்டோம். அவர்களது கருத்துக்கள் வருமாறு:

அரசியலில் இவ்வாரம் தீர்மானமிக்கது

நாட்டின் அரசியல் வரலாற்றில் இந்த வாரம் மிக முக்கியமானதொன்றாகும். தற்போது நிலவிக்கொண்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அரசியலமைப்பில் காணப்படும் முரண்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் ஓரிரு தினங்களில் தீர்வு வழங்கவுள்ளது. இவ்வாரம் ஒரு தீர்மானமிக்க வாரமென அரசியல் ஆய்வாளர்களும் சட்ட வல்லுநர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம்…

பயங்கரவாதத்துக்கு எதிராக வளைகுடா நாடுகள் ஒற்றுமைப்பட வேண்டும்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சவூதி அரேபிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார். ரியாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான வளைகுடா அரபு உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சவூதி மன்னர் சல்மான் இங்கு மேலும் உரையாற்றுகையில் “ஈரானிய நடப்பாட்சி எப்போதும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றது. இது நமது நாட்டினுடைய நலன்களைப் பராமரிக்கவும், பிராந்தியத்திலும், உலகிலும் பாதுகாப்பு மற்றும்…

வீதி விபத்துக்களில் 10 மாதங்களில் 2590 பேர் பலி

நடப்பாண்டில் இதுவரையில் 2481 வீதி விபத்துக்கள் பதிவாகியள்ளதுடன், மேற்படி விபத்துக்களில் சிக்கி சுமார் 2590 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 2481 விபத்துக்களும் ஜனவரி முதலாம்  திகதி தொடக்கம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே பதிவாகியுள்ளன. இவ்வாறான வீதி விபத்துக்களில் சிக்கி  சுமார் 792  பேர் வரையிலான பாதசாரிகள்  உயிரிழந்துள்ளதாக வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், மோட்டார் சைக்கிளுடன்…