தென்னாபிரிக்க யூடியூப் பதிவாளர் இஸ்லாத்தைத் தழுவினார்

தென் கொரியாவில் வசித்துவரும் தென்னாபிரிக்க யூடியூப் பதிவாளர் ஒருவர் இரண்டு வருட ஆய்வின் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாம் தொடர்பான காணொளிகளைப் பார்வையிட்டு வருகின்றேன் என லவாசி சுபு தெரிவித்துள்ளார்.

கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டோம்

உண்மையிலேயே இந்த கப்பலில் வெடிப்புகள் ஏற்பட்டால் பாரிய பாதிப்புகள் ஏற்படும். இது கிழக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கும் பாரிய விளைவை ஏற்படுத்தும். ஆனால் அந்த அபாயத்தில் இருந்து 50 வீதம் காப்பற்றப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து எண்ணெய்யை எவ்வளவு சீக்கிரம் அகற்றுவார்களோ அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நாட்டுக்கு பாதுகாப்பாக அமையும்.

பொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்

பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்புவாய்ந்த இடங்களில் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் உலமா சபை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமம் என நம்புகிறோம். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் இதனை சகல தரப்பினரும் தகுந்த பாடமாகவும் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்

முஸ்லிம் சமய திணைக்களத்தின் கட்டிடத்தில் பௌத்த சாசன அமைச்சு?

கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடத்தில் பெளத்த சாசன மற்றும் கலாசார அமைச்சினை உள்வாங்குவதற்கு அரச  உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.