ஆறுதல் தரும் அறிக்கை

27.11.2020 விடிவெள்ளி வார இதழின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந் நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள இந்த விவகாரம் தொடர்பான விரிவான அவதானங்களும் பரிந்துரைகளும் மிகவும்…

அறிவுபூர்வமாக அணுகுவதே  சிறந்த பலனைத் தரும்

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்துக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அடக்கம் செய்வது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ள போதிலும் இதுவரை எழுத்துமூல அனுமதி வழங்கப்படவில்லை.

காட்டு யானைகளின் தொல்லைகளால் அவதிப்படும் அஷ்ரப் நகர் வாழ் மக்கள்

அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷ்ரப் நகரில் வாழும் மக்கள் கடந்த பல வருடங்களாக தமது காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக போராடி வரும் நிலையில் தற்போது காட்டு யானைகளில் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகள்

கிராமங்கள் தோறும் வாழும் தனிநபர்களின் அன்றாட வாழ்வாதாரமாக இருந்துவந்த சுயதொழில், பாய் பின்னுதல், கோழிக் குஞ்சு வளர்த்தல், ஆபரணங்கள் செய்தல், தையல், சிப்பி வளர்த்தல், முச்சக்கர வண்டி ஓட்டுதல் போன்ற தொழில்களும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.